தொடர்கள்
அழகு
மும்பை நாதஸ்வர விழா – பால்கி

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

20260809202228529.jpeg

[மேடையில் ஷேக் சின்ன மௌலானா வாசித்த நாதஸ்வரமும், வலங்கைமான் ஷண்முக சுந்தரம் பிள்ளை வாசித்த தவிலும்]

ஆகஸ்ட் 29, 30, 2026 தேதிகளில் மும்பை சண்முகானந்தா சபா நாதஸ்வர சக்ரவர்த்தி டி. என். ராஜரத்னம் பிள்ளை 128 பிறந்த நாளை ஒட்டி நாதஸ்வரத் திருவிழா நடந்தது..

டி.என்.ஆர் (TNR) அவர்களின் 125-வது பிறந்த 'சண்முக ரத்னா' விருது பெற்ற பிரபல நாதஸ்வர வித்வான் வியாசர்பாடி கோதண்டராமன் தலைமையில், 50 'ஃபெல்லோஷிப்' (fellowship) விருது பெற இருந்த இளம் நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்களைக்கொண்டு மூன்று மணி நேரத்துக்கு நாதஸ்வர இசை விருந்து கொடுத்தனர்.

20260809204208195.jpeg

அருணகிரிநாதரின் நாத பிந்து கலாதீ நமோ, ஐக்கிய நாடுகள் சபையில் எம் எஸ் பாடிய மஹாபெரியவா இயற்றிய மைத்ரீம் பஜத, க்ருஷ்ணா நீ பேகனே பாரோ, ராஜாஜியின் குறை ஒன்றும் இல்லை மற்றும் மேற்கத்திய இசை நோட்ஸ் வாசிப்பு என பல சுவைகளுடன் முத்தாய்ப்பாய் தேசீய கீதத்தை 56 பேரும் வாசிக்க எழுந்து நின்ற சபையோர் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

தமிழக அமைச்சர் ரமேஷ் நிகழ்ச்சி முழுவதும் இருந்து ரசித்தார்.

20260809202615530.jpeg

ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயில்களில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. மற்ற கோயில்களிலும் இந்த மாற்றம் வருமா? என்று கூறியதும், கண்டிப்பாக நடக்கும் என்று அமைச்சர் ரமேஷ் தலையசைத்தார்.

தமிழக பள்ளிகளில் தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கு ஆஸ்தான ஆசிரியர் பணி நியமனம் தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடப்பட்டது. இதை மறு நாள் தொடர் நிகழ்வில் நினைவு கூர்ந்து முதல்வரோடு பேசி ஆவன செய்ய முயற்சிப்பதாக பதிலளித்தார்.

மறுநாள், ஆகஸ்ட் 30.

விழாவில் ஊக்கத்தொகை பெறவிருந்த 56 கலைஞர்களும் அருகில் சபாவின் அருகில் இருந்த கிருஷ்ணர் கோயிலிலிருந்து காலை 7.30 மணியளவில் புறப்பட்டு சபா வரை அரை கிலோமீட்டர் தொலைவை ஸ்வாமி புறப்பாடு என்று மஹாபெரியவா படத்தைத் தாங்கியவாரே தேர்

20260809220436898.jpeg

வேத கோஷத்துடன் பவனி வர நாதஸ்வரமும் தவிலும் கலந்து மிரட்டும் மழையிலும் இசை விருந்தே கொடுத்துவிட்டனர். கிழக்கு சையான் என்னும் அப்பகுதி மக்களுக்கு காலை இசை விருந்து ஒரு அரிய அபார பரிசாக அமைந்துவிட்டது.

தலைமை தாங்க பட்டு வேட்டி சட்டையுடன் வந்திருந்தார் அமைச்சர்.

2026080922095945.jpeg

20260809221021204.jpeg

கோயில் வாசலில் ஒலிக்கப்படும் ஒலிக்கு, பாடும் ஜீவனின் மூச்சு ஒலிக்கு, ஜீவ ஒலிக்கு இன்று உலகப்பிரசித்தி பெற்ற சபையில் கௌரவம் என்பது ஒரு வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு தான்.

சென்ற வருடம் இதே மேடையில் நடந்தேறிய இந்த நாதஸ்வர திருவிழாவைப்பற்றி எனது கட்டுரையின் லிங்க் இதோ.

(https://www.vikatakavi.in/magazines/440/14965/naadhaswara-concert-celebrations-in-mumbai.php)

நாதஸ்வர வித்வான் திருப்பாம்புரம் திரு. டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரம் 'ஸ்ரீ சண்முகானந்த நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளை வாழ்நாள் சாதனையாளர் விருது' (சங்கீத கலா விபூஷண் - நாதஸ்வரம்) ரூ. 2.5 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு பெரிய குத்துவிளக்கு மற்றும் பொன்னாடை தமிழக அமைச்சர் வழங்கினார்.

20260809202938201.jpeg

1998-ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசால் அவருக்கு 'அரசவைக் கலைஞர்' என்ற பட்டம் பெற்ற நாதஸ்வர வித்வான் திருப்பாம்புரம் திரு. டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரம் , தனது சகோதரர் டி.கே.எஸ். ஐயப்பன் இணைந்து 'இரட்டை நாதஸ்வரம்' (Duet Nadaswaram) எனும் புதுமையான இசை நிகழ்ச்சியை அடிக்கடி நிகழ்த்தி வந்திருக்கிறார் என்பது சிறப்பு செய்தி.

56 இளம் கலைஞர்களுக்கு 'ஸ்ரீ சண்முகானந்த நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளை ஃபெல்லோஷிப்'பும் அமைச்சர் வழங்கினார்.

20260809203037282.jpeg

இந்த ஃபெல்லோஷிப் (உதவித்தொகைத் திட்டம்), இந்தியா முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 இளம் மற்றும் திறமையான நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது; இதன் கீழ், ஒவ்வொரு கலைஞருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை சபா 91 இளம் இசைக்கலைஞர்களுக்கு இத்தகைய உதவித்தொகையை வழங்கியுள்ளது.

நலிந்து வரும் தமிழ் பாரம்பரிய மங்கல இசை வாத்தியத்தை வீழ்ச்சியிலிருந்து தடுப்பதற்கும், அந்த இசை வடிவத்தில் ஈடுபடுவோர்க்கு ஊக்கத்தொகை கொடுப்பதோடு மட்டுமல்லாது, அந்த துறையில் பிரபலமாக இருக்கும் வித்வான்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து கௌரவிப்பதோடு மும்பை சண்முகானந்தா ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் சங்கீத சபா ஒரு முன்னோடியாக விளங்குகிறது.

அதே மேடையில் புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் ஷேக் சின்ன மௌலானா சாஹேப் பேரனும் நாதஸ்வர வித்வானுமான . காசிம் சுபான்கௌரவிக்கப்பட்டார்.

20260809203142420.jpeg

[காசிம் சுபான், அவருடைய மனைவியுடன்]

அமைச்சருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் விநாயகர் விக்ரகத்தை அன்புப் பரிசாக கொடுத்து மகிழ்ந்ததோடு சேர்ந்து நின்று போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.

20260809203320142.jpeg

20260809203418401.jpeg

20260809204418923.jpeg

நாதஸ்வர சக்கரவர்த்தி டி என் ராஜரத்தினம் பிள்ளையின் குருகுலவாசத்தில் கலைஞர் கருணாநிதியின் தந்தை திரு முத்துவேல் இசை நுணுக்கங்களைப் பயின்றிருக்கின்றார்.

தமிழுக்கு வணக்கம் சொல்லி தன்னுரையை ஆரம்பித்த அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு ஜோசஃப் விஜய் அவர்களுக்கு வணக்கம்” என்றதும் தான் தாமதம், சபையில் கூடியிருந்த த வெ க தொண்டர்கள் விசில் சத்தத்துடன் கைதட்டி ஆரவாரித்தனர்.

இந்த விழா பற்றிய அனைத்து செய்திகளையும் முதல்வருக்கு எடுத்துக்கூறி அரசாங்கத்தின் சார்பாக எங்கெங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கணுமோ அங்கெல்லாம் உங்களை பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளிலும் பணிகளிலும் நான் நிச்சயம் இருப்பேன் என்றும் உறுதி கூறினார்.

அமைச்சர் தனது தலைமையுரையில்.

“என்னை கோயில்களுக்கு அதிபதியாக இருக்கின்றாய் என்று கூறினார்கள். இன்றல்ல, ஆயிரமாயிரம் ஆண்டுகள் மாறினாலும் சரி, யுகங்கள் மாறினாலும் கோயில்களின் அதிபதி இறைவன் மட்டும் தான். நாமல்ல”.

“சாதனையை செய்யணும்னா ஒரு நல்ல குரு அமையணும்.”

“கலையினால் புகழடைவது ஒரு விதமெனினும், அந்த ஒருவரால் அந்த கலைக்கே புகழ் எனில் அதை விட உயர்ந்ததல்லவா?”

“நாமளே gen z kid மாறி இருக்கோம், நம்மளை ஏன் இவங்க விருதுகள் கொடுக்க கூப்புடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா, இங்கு வந்து பாக்கும்போது இவ்வளவு gen z kids இளம் வயதினர்கள் அவார்ட் வாங்குவது கண்டு பெருமையா இருக்கு என்பதை நகைச்சுவையாய் வெளிப்படுத்தினார்”.

“தன்னுடைய பள்ளி நாட்களில் பள்ளியில் நடக்கும் போட்டிகளில் பேசத் தொடங்கி, பொது மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசி பேசி இந்த இயக்கமாக பேசி இன்று அந்த பேரார்வம் இங்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்று பேரார்வத்தின் சிறப்பை கூறினார்.

இந்த எனது பேச்சின் மீதான பேரார்வத்தைக்கண்டு தான் முதலமைச்சர் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு என்னை நிறுத்தினார்.”

“பெற்றோர்கள் முக்கியம். 500/600 ஸ்கோயர் ஃபீட் ஏரியா உள்ள சின்ன வீட்டில் இன்றும் எனது அம்மா சமையல் வேலை செய்து பிழைக்கிறார்கள், அப்பா கோயிலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்”.

“இத்தனை ஏழ்மையிலும் என்னை எப்படியாவது படிக்க வைத்தார்கள். அம்மா வேலை செய்து வந்த இந்து ரவி வீட்டில் அவர்களது உதவியினால் என்னால் மெக்கானிக்கல் இஞ்சினீரிங்க் படிக்க முடிந்தது. ரவி , அவரின் மனைவி சுதாம்மாயும் நன்றியுடன் நினைவு கூர்ந்து நன்றியை தெரிவித்துக் கொண்டார். எனது பரம்பரையில் முதல் தலைமுறை பட்டதாரி நான்தான். கை தூக்கி விட்டவரை என்றும் மறக்காதீர்கள். எனது அம்மா வேலை செய்த வீடுகளில் அவர்களிடம் உதவி கேட்டு என்னைப் படிக்க வைத்தார்கள். அம்மா செய்த உதவி மறுக்கவோ மறக்கவோ முடியாத ஒன்று”.

“உதவியவர்களுக்கு நன்றி சொல்லுங்க. நன்றியைத் தவிற வாழ்க்கையில் வேறெதுவும் இல்லை. ஒருவர் தவறே செய்தாலும் அவர்களுக்கும் நன்றியையே சொல்லிவிட்டு நமது வாழ்க்கையின் நோக்கத்தை நோக்கி சென்றால் சாதனை தான் மிஞ்சும்”.

20260809204906777.jpeg