த்ரிஷாவுடன் ரசிகர்கள் செல்பி
செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார். நடிகை திரிஷா இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நடிகை திரிஷா ரசிகர்கள் படம் பார்த்த மகிழ்ச்சியில் தன்னுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக சொல்லி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் குந்தவை வேடத்தில் நடித்திருக்கிறார் திரிஷா. இதனால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை குந்தவை என்று மாற்றி இருக்கிறார். இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சென்னை திருவனந்தபுரம் ஹைதராபாத் மும்பை போன்ற இடங்களுக்கு படக்குழுவினருடன் சென்றிருந்தார் திரிஷா.
ஜெய் எனக்கு தம்பி மாதிரி
காப்பி வித் காதல் படத்தில் நானும் ஜீவாவும் ட்வின்ஸ் என்று சொல்லியிருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த தகவலை சொல்லி இருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி. காப்பி வித் காதல் படம் இயக்குனர் சுந்தர் சி இந்தப்படத்தில் ஜீவா ஜெய் ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகர்கள் மாளவிகா ஷர்மா ரைசா வில்சன் அம்ரிதா ஐயர் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நாயகிகள் ஜெய் எனக்கு தம்பி மாதிரி எல்லோரும் அவரை மிட்டாய் மாமா என்று கூப்பிடுவோம் இதுவும் திவ்யதர்ஷினி சொன்னதுதான்.
மொழி தடையில்லை
பொன்னியின் செல்வன் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாராய் இந்தப் படம் சம்பந்தமாக டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராயிடம் வட இந்திய தென்னிந்திய திரைப்படங்கள் என பிரித்து பார்ப்பது பற்றிய கேள்விக்கு ஐஸ்வர்யா ராய் சொன்ன பதில் இது தான் திரைப்படங்களுக்கு மொழி தடையில்லை சினிமா கலைஞர்களையும் சினிமாவையும் மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் வழக்கமான நடைமுறையில் இருந்து நாம் விலகி செல்ல வேண்டும். ஆர் ஆர் ஆர் புஷ்பா கேஜிஎப் போன்ற தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் வெற்றி பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
வெற்றிக்கூட்டணி
நானே வருவேன் திரைப்படம் 650 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசுக்கு முன் தினம் அதாவது செப்டம்பர் 29-ஆம் தேதி நானே வருவேன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாள் வசூல் 10 கோடியே 12 லட்சம்.பொன்னியின் செல்வன் படத்துக்கு சாமானியன் முதல் பிரபலங்கள் வரை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போடும் அளவுக்கு அது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் நானே வருவேன் படத்துக்கு அப்படிப் பெரிதாக விளம்பரம் எல்லாம் செய்யவில்லை அப்படியிருந்தும் செல்வராகவன் தனுஷ் கூட்டணி மீண்டும் வெற்றி கூட்டணி என்று உறுதி செய்ய வைத்திருக்கிறது.
Leave a comment
Upload