தொடர்கள்
அழகு
டி சி எஸ் நிறுவனத்தில் பிளைண்ட் பேக் கஃபே !! - மாலா ஶ்ரீ

2025111307082162.jpeg

சென்னை சோழிங்கநல்லூர் அருகே சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்கா பகுதியில் டிசிஎஸ் எனும் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிறுவன வளாகத்தில் கடந்த 9-ம் தேதி டிசிஎஸ் மற்றும் தேசிய பார்வையற்றோர் சங்கம் இணைந்து பார்வைதிறன் குறைபாடு கொண்டவர்களை கொண்டு ‘பிளைண்ட் பேக் கபே’ என்ற பெயரில் ஒரு உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. இதில், பார்வைதிறன் கொண்ட 10க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் துரிதமாக சுவையான உணவுகளை தயாரித்து வழங்குவதை பார்த்து அனைவருக்கும் பிரமிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டிசிஎஸ் நிறுவன தலைமை மனிதவள மேலாளர் சுதீப் குன்னுமல், நேஷனல் அசோசியேஷன் பார் தி பிளைண்ட் இயக்குநர் ஷாலினி கன்னா சோதி கூறுகையில், ‘‘பிளைண்ட் பேக் கபே’ என்று பெயரிடப்பட்ட இந்த கபேவில் நிர்வாக மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவை பயிற்சி பெற்ற பார்வைதிறன் குறைபாடு கொண்ட 6 செஃப், 4 பார்வைதிறன் கொண்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒரு மேலாளார் பணியாற்றுகின்றனர். இங்கு பலவகையான கேக், மில்க் ஷேக், சிற்றுண்டி, இனிப்புகள் மற்றும் பானங்கள் தயாரிக்கப்படுகிறது.

இங்கு பிரெய்லி குறியீடு கொண்ட உபகரணங்கள், சரளமான அணுகலுக்கான தொடுஉணர்வு திரை, மாற்று சமையல் முறைகளில் சிறப்பு பயிற்சி உள்ளிட்ட கூறுகளை கணக்கிட்டு இந்த கபே உருவாக்கப்பட்டு உள்ளது. ‘மும்பை பிளைண்ட் கபே’ போலவே, சென்னை விற்பனை நிலையம் பார்வைதிறன் கொண்ட நபர்களுக்கு தொழில்முறை பயிற்சி மற்றும் கண்ணியமான வாழ்வாதார வாய்ப்புகள் மூலம் அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

20251113070841662.jpeg

2021-ம் ஆண்டில் ஒரு முன்னோடி திடமாக ‘பிளைண்ட் பேக் கபே’ துவங்கப்பட்டது. இப்போது சென்னை டிசிஎஸ் நிறுவன வளாகத்தில் முழு செயல்பாட்டுடன் கடையாக வளர்ந்துள்ளது. இந்த பிளைண்ட் பேக் கபே மூலம் ஈட்டப்படும் அனைத்து வருவாய்களும் நேரடியாக பார்வைதிறன் கொண்ட ஊழியர்களுக்கும் பிளைண்ட் பேக் கபேயின் செயல்பாடுகளுக்கும் செல்கின்றன. இந்நிதிகள் தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் மூலமாக மேலும் பார்வை குறைபாடு திறன் கொண்ட நபர்களுக்கு, சான்றிதழ் பெற்று தொழில்முறை செஃப்களாக வேலைவாய்ப்பு பெற உதவும் வகையில் பயிற்சியளிக்க மறுமுதலீடு செய்யப்படுகின்றன!’’ என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.