தொடர்கள்
வலையங்கம்
இப்படி செய்யலாமே

20251112150628728.jpg

இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட 21 பெரிய வங்கிகள் இருக்கின்றன. வங்கிகளில் சேமிப்பு என்பது சாமானியர்கள் முதல் நடுத்தர வர்க்கம், தொழில் செய்பவர் என்று எல்லோரும் அது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் தொடங்கினார்கள். சேமிப்பு பழக்கத்திற்கு தபால் நிலையங்களும் வங்கிகளும் ஒரு முக்கிய காரணம்.

அப்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் உரிமை கோரப்படாத வகையில் 67,000 கோடிக்கும் அதிகமாக வங்கிகளில் இருப்பதாக ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறை தகவல் தெரிவித்து இருக்கிறது. இந்தப் பணம் இறந்து போனவர்களின் வாரிசுகள் உரிமைக் கோராதது இன்னும் பிற காரணங்களால் 30 ஆண்டுகளாக வங்கிகளில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இப்படி யாருமே உரிமைக்கோராத பணத்தை சாமானியர்களுக்கு உதவும் வகையில் குடிநீர் திட்டங்கள், பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி. வகுப்பறை கட்டுவது போன்ற மக்களுக்கு பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்தலாமே.