நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ் துபாய் தொழிலதிபர் ரஜித் இப்ரான் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் திருமணம் என்று ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. டிசம்பரில் நடக்க வேண்டிய திருமணம் ரத்தாகிவிட்டது. நடிகையும் காதலனுடன் இருந்த படங்களை வலைதளத்தில் நீக்கி இருக்கிறார். என்னமோ நடக்குது.
தமன்னா

பிரபல இந்திப்பட இயக்குனர் சாந்தாராம் பயோபிக்கில் நடிகை தமன்னா நடிக்கிறார். சாந்தாராமின் இரண்டாவது மனைவி ஜெயஸ்ரீ வேடத்தில் நடிக்கிறார் நடிகை.
பார்வதி.

தமிழில் 'பூ 'படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பார்வதி. உத்தமவில்லன், மரியான், சென்னையில் ஒரு நாள் போன்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்சமயம் தமிழ், மலையாள படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.இவர் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வலைதளத்தில் பகிர்வது வழக்கம். அதற்கு ரசிகர்களும் கொஞ்சம் ஜாஸ்தி தான்.
சாய் பல்லவி

மணிரத்தினம் இயக்கத்தில் சாய் பல்லவி கதாநாயகி விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
மீனாட்சி சௌத்ரி

கோட் படத்தில் விஜயுடன் நடித்து தமிழில் அறிமுகமானவர் மீனாட்சி சௌத்ரி. தற்சமயம் இவர் தெலுங்கில் பிஸி நடிகை இவர். நாகர்ஜுனாவின் உறவினாரான நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதெல்லாம் இல்லை நாங்கள் வெறும் நண்பர்கள் தான் என்கிறார் நடிகை. கூடவே இப்படித்தான் மாதம் ஒரு நடிகருடன் தொடர்பு படுத்தி செய்தி வெளியிடுகிறார்கள் என்று அலுத்துக் கொள்கிறார்.
அரசன்

வெற்றிமாறன் இயக்கி வரும் அரசன் பட ஷுட்டிங் தற்சமயம் கோவில்பட்டியில் நடந்து வருகிறது. உள்ளூர் மக்கள் படப்பிடிப்புக்கு வந்த சிம்புவுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு தருகிறார்கள். தற்சமயம் இந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸை வெகு நாட்களாக படத்தில் காண முடியவில்லை. என்றாலும் அவ்வப்போது இன்ஸ்ட்டாவில் அழகு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதற்கு லைக்குகள் அள்ளுகிறது.

Leave a comment
Upload