தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20251112173029154.jpeg

210 தொகுதிகளில் கூட்டணி வெல்லும் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு !!

திமுக தலைவரும் இதைத்தானே சொல்றாரு !!

முதல்வர்களை திரையில் தேடாதீர்கள்! சௌமியா அன்புமணி.

அதாவது இவர் வீட்டிலேயே ஒருத்தர் இருக்காராம் !!

திமுக எம்பி அருண் நேரு, நிர்மலா சீதாராமன் சந்திப்பு.

அப்பா நேரு பிரச்சனை சம்பந்தமாக பேசினார் என்று நினைக்காதீங்க சத்தியமா தொகுதி பிரச்சனை பற்றி தான் பேசினார் நம்புங்க !!

விஜய் கட்சித்தொண்டர் போலீஸ்காரர் கையை கடித்தார் –செய்தி.

இனிமே கூட்டத்துக்கான நிபந்தனைகளில் தொண்டர்கள் யாரும் யாரையும் கடிக்க கூடாது என்பதையும் சேர்க்க வேண்டும் போல் தெரிகிறது !!

சட்டங்களும் விதிமுறைகளும் மக்களை துன்புறுத்துவதாக இருக்கக் கூடாது பிரதமர் மோடி வலியுறுத்தல்.

எந்த மக்களை என்பதை தெளிவா சொல்லலாம் இல்லே?

நான் உறங்காமல் உழைப்பது போல் உங்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன் -திமுக தலைவர் ஸ்டாலின்.

தலைவர் நம்மகிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறார் பாவம் !!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்னும் சினிமா டயலாக்கே பேசுகிறார் வைகோ.

நீங்க பேசாத டயலாக்கா

கூட்டணி அமைச்சரவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பிடிக்கும் -டிடிவி தினகரன்.

அண்ணன் எப்பவுமே காமெடியா தான் பேசுவார் நான் சொல்ல ல ?

வெள்ளத்தை நிறுத்த முடியாது அது போல் தான் தமிழக வெற்றி கழகமும் ஆதவ் அர்ஜுனா.

கரூரில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை மறக்க முடியுமா !!

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக துடைத்து எறியப்படும் –அமித்ஷா.

சும்மா சொல்லிக்கிட்டு இருப்பீங்க, எதுவும் நடக்காது ?

புதுச்சேரியிலும் 2026-இல் தமிழக வெற்றி கழகம் கொடி பறக்கும் -விஜய்

அப்ப ரங்கசாமி துணை முதல்வர் தானா ?

பாசக்கார மதுரை மக்கள் முதல்வர் நெகிழ்ச்சி

என்ன திருப்பரங்குன்றத்தில் கொஞ்சம் பாசம் குறைவாக இருக்கும் !!

எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடிப்போம் பாஜகவுக்கு ஸ்டாலின் பதில்.

இதோ அமலாக்கத்துறை பௌவுலர் வராரு இருங்க !!

அன்பே சிவம் அறிவே பலம் கமலஹாசன்

தலைவர் அறிவுன்னு சொல்றது அறிவாலயத்தை? !

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

அவங்க முதல்ல தரேன்னு சொன்னாங்களா?!!

நேற்று கட்சி தொடங்கியவருக்கு இன்று முதல்வராக ஆசை -உதயநிதி ஸ்டாலின்

அதானே நீங்க இருக்கும் போது அவர் ஆசைப்படலாமா !!