
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதேபோல் நீதிபதிகளை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீஸ் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறது.
இதற்கு உதாரணமாக பி டி தினகரன், சௌமித்ராசென் ஆகியோரை குறிப்பிடலாம். இவர்கள் மீதான கோரிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட மூவர் குழு இவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக பரிந்துரை செய்தது.
இவர்கள் மீதான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன்பாகவே அந்த இரண்டு நீதிபதிகள் ராஜினாமா செய்து விட்டார்கள். அவர்கள் பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
1993-ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த வி ராமசாமி மீதும் முறைகேடு புகார் குற்றச்சாட்டு பாராளுமன்றத்திற்கு வந்தது. அந்த தீர்மானத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் ஆனால் நீதிபதிகளை பாராளுமன்றம் பதிவு நீக்கம் செய்ததாக இதுவரை எந்த முன் உதாரணமும் இல்லை என.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது கட்டு கட்டாக அவர் வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வழங்கிய நோட்டீஸ் மற்றும் 2024 -இல் விஷ்வ இந்து பரிஷத் மாநாட்டில் சேகர் குமார் யாதவ் என்று நீதிபதி பங்கேற்று மத மோதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதாக கூறி அவரை பதவி நீக்க கோரும் தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவையில் தரப்பட்டது.
அந்த நோட்டீசில் உள்ள கையெழுத்துகள் எம்பிக்களின் கையெழுத்துடன் பொருந்தவில்லை என்று கூறி அப்போதைய மாநிலங்களவை தலைவர் ஜக்திப் தன்கர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதால் நீதிபதி மீது திமுக அவதூறு பரப்புவதாகத்தான் இதை பார்க்கிறார்கள் எனறு டெல்லி சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Leave a comment
Upload