
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்ல்லாவிடம் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி எம்பிகள் அளித்துள்ளனர்.
"குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளிப்பதாக "அந்தத் தீர்மான நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு அதிமுக ,பாஜக இரண்டு கட்சிகளும் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
நீதித்துறையை மிரட்டும் வகையில் திமுக ,காங்கிரஸ் செயல்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லி இருக்கிறார்.
. திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார் என்பதுதான் அவரைப் பதவி நீக்க செய்ய கோரும் தீர்மானத்திற்கு முக்கிய காரணம்
ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு தமிழக அரசு மேல்முறையீடு செய்த போது இரண்டு நீதிபதிகள் அமர்வு அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது .
திமுக கூட்டணி அளித்துள்ள நோட்டீஸில் குறிப்பிட்டு இரண்டு புகார்களை சொல்லி இருக்கிறது. முதலாவது பாரபட்சம், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறையில் மதசார்பற்ற செயல்பாடு ஆகியவற்றை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் நடத்தை கடும் கேள்விகளை எழுப்புவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இரண்டாவதாக ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு ஆதரவாக அந்த நோட்டீஸில் அவர் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்கள் ஜி.ஆர்..சுவாமிநாதன் செயல்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த நோட்டீசில் நீதிபதி மீது புகார் சொல்லி இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் எழுதிய கடிதங்களையும் மக்களவைத் தலைவரிடம் வழங்கி இருக்கிறார்கள்

நீதிபதியை பதவி நீக்க கோரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை மக்களவைத் தலைவர் ஏற்றுக்கொண்டால் இது பற்றி விசாரிக்க அவர் முதலில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ' மாநில தலைமை நீதிபதி, மற்றும் சட்ட நிபுணர் ஒருவர் என மூன்று பேர் இந்த குழுவில் இருப்பார்கள் .
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மக்களவைத் தலைவர் கடிதம் எழுத வேண்டும். இதுதான் பொதுவான நடைமுறை.
நீதிபதி மீது புகார் மனுவில் கூறப்பட்டுள்ள விவகாரங்களை இந்தக் குழு போதுமான ஆதாரங்கள் இருக்கிறதா என்று பரிசீலனை செய்ய வேண்டும்.
புகார் உண்மையானதாக இருப்பதாக இந்த குழு கூறினால் தான் நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் விவாதத்துக்கு வரும்.
போதிய ஆதாரங்கள் இல்லை என்று அந்த குழு முடிவு செய்து விட்டால் நீதிபதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இந்த விஷயத்தில் நீதிபதியின் கருத்தும் கேட்கப்படும்.
அவரே பதில் சொல்லலாம்.
அல்லது அவர் சார்பாக வழக்கறிஞர்மூலம் விளக்கம் சொல்லலாம். எல்லாம் சரி என்று நாடாளுமன்றத்தில் விவாதிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்அந்த தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும்.
அதன் பிறகு அந்த தீர்மானத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும்.
ஜி.ஆர்.சுவாமிநாதன் விஷயத்தில் இந்த பதவி நீக்ககோரிக்கை மனுஅவரை அச்சுறுத்த அல்லது பரபரப்புக்காக மட்டுமே பயன்படும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்
. நீதிபதியை அவர் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்ய யாரும் கூற முடியாது என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
எதிர்க்கட்சியினர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 217-இன் படி அவரை பதவி நீக்கம் செய்யுமாறு கூறியிருக்கிறார்கள்.
சட்டப்பிரிவு 217 நீதிபதியின் நடத்தை பற்றி குறிப்பிடுகிறது. ஆனால், வழக்கின் தீர்ப்பு சரியா தவறா என நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது.
ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை என்பது இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் சட்ட நிபுணர்கள் கருத்து.

Leave a comment
Upload