
1.திராவிட மாடல் என்றால்?

ஒன்றை விலாவரியாக விவரித்துவிட்டு கடைசியில் "இதுதான் திராவிட மாடல் "என்று முடிக்க ஸ்டாலினால் தான் முடியும். எனக்கு வரவில்லையே!!
2. மதுவிலக்கு சமூகத்திற்கு நல்லதா?

சமூகத்திற்கு நல்லது தான். ஆனால் வெற்றிகரமாக செயல்படுத்த முடியவே முடியாது!!
3.எழுத்தாளர் சுஜாதாவை நீங்கள் மடக்கிய அல்லது ஆச்சரியப்படுத்திய சம்பவம் ஏதேனும்?

நம்ம குரு மாதிரி அவர்! அவரை போய் நான் மடக்குவதாவது?! ஆனால் என் கார்ட்டூன்கள், ஜோக்ஸ் சில அவரை ஆச்சரியப்படுத்தியதாக அவர் என்னிடம் சொல்லி இருக்கிறார்!
I miss him!
4.தற்போதுள்ள இந்திய மாநில அரசுகளில், எந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராய் இருக்கிறது?

ஒவ்வொரு மாநிலமும் "எங்கள் மாநிலம் தான்" என்று சொல்லிக் கொள்கிறது. மத்திய அரசு ஒரு தேர்வு குழு அமைத்து மார்க் போட்டால், ஒப்புக்கொள்ள நான் தயார்!!
5. மருத்துவமனை ஆகச் சிறந்த போதிமரம் என்கிறேன் நான்.... உங்கள் கருத்து என்ன?

மருத்துவமனை 'டெம்ப்ரவரி'ஆனது. போதிமரம் 'பெர்மனென்ட்'!
6. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது சரியா?

எப்படி அழைத்தாலும் "ரோஜா ரோஜா தான்" என்று ஒரு பழமொழி உண்டு!
7.இப்படித்தான் எங்க காலத்துல 'என்று யாரிடமாவது லெக்சர் அடித்திருக்கிறீர்களா?

நான்....கேட்டால் தான் சொல்வேன்!!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in

Leave a comment
Upload