தொடர்கள்
வலையங்கம்
விசாரணை அமைப்புகளுக்கான பாடம் இது

20240827181333915.jpeg

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்களாக விசாரணை கைதியாக வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது.

செந்தில் பாலாஜியை பலமுறை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்தது. பல இடங்களில் சோதனை செய்து விவரங்களை கைப்பற்றியது சில வீடுகள் சீல் வைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக விசாரித்தும் அவர் மீதான குற்றம் நிரூபிக்க முடியாமல் அமலாக்கத்துறை திணறுகிறது என்பது கிட்டத்தட்ட நீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது. அவர் தவறு செய்தார் என்பது உண்மை. ஆனால், விசாரணை அமைப்பு அது சரிவர நிரூபிக்க முடியாமல் திணறுகிறது. அவரது சகோதரர் எங்கே இருக்கிறார் என்பதை கூட விசாரணை அமைப்பால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது போன்ற விசாரணை நடவடிக்கை என்பது அரசியல் பழிவாங்கல் என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றை உண்மையாக்கிவிடும் இந்த தீர்ப்பு விசாரணை அமைப்பிற்கான எச்சரிக்கை மணியாக பார்க்க வேண்டும்.