
கொஞ்சம் தத்துவ ஜோக்கு
ஒரு வயதான தாத்தா பேரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“குழந்தாய் நம்ம ஒவ்வொருத்தருக்குள்ள இரண்டு ஓநாய் இருக்கு. இரண்டும் எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டே இருக்கும்.
ஒன்னு கெட்ட ஓநாய். கோவம். பொறாமை. பேராசை. தாழ்வு மனப்பான்மை. பொய். ஈகோ. இப்படி பல விஷயங்கள்.
இன்னொன்னு நல்ல ஓநாய். சந்தோஷம். அமைதி. காதல். நம்பிக்கை. மனிதம். கருணை. மனிதநேயம். உண்மை, நேர்மை. இப்படி பல விஷயங்கள் உள்ள ஓநாய்.
பேரன் யோசித்தான். தாத்தாவிடம் கேட்டான்.
“தாத்தா எந்த ஓநாய் ஜெயிக்கும் ?”
தாத்தா சொன்னார்.
“நீ எந்த ஓநாய்க்கு தீனி போட்டு வளர்க்கறியோ அது தான் ஜெயிக்கும்”
சைவ வகையறா… (கறுப்பு நகைச்சுவை)
போதகரின் மனைவி.

கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போவதில் சில சிரமங்கள் இருக்கிறது.
ஒரு விடுமுறைக்கு இருவரும் போக திட்டமிட கடைசி நிமிடத்தில் மனைவியின் அலுவலகத்தில் ஒரு வேலை வந்து விட்டது.
அவள் சொன்னாள் நீங்கள் முதலில் புறப்பட்டு போங்கள் நான் அடுத்த நாள் வந்து சேர்ந்து கொள்கிறேன்.
கணவன், ஒப்பந்தப்படி முதலில் ஊருக்கு சென்றார். ஹோட்டலில் போய் செக் இன் செய்து விட்டு சரி மனைவிக்கு ஒரு சின்ன ஈமெயில் அனுப்பி விடலாம் என்று முடிவு செய்து அனுப்பினார்.
ஆனால் ஈமெயில் முகவரியை டைப் அடிக்கும் போது கை தவறி ஒரு சின்ன டைப்பிங் மிஸ்டேக் ஆகி விட அது ஒரு மத போதகரின் மனைவிக்கு சென்று விட்டது.
பிரச்சினை என்னவெனில் அந்த மத போதகர் முதல் நாள் தான் இறந்து போயிருந்தார்.
மத போதகரின் மனைவி வருத்தத்துடன் கணவர் இறந்ததற்கு அஞ்சலி செலுத்தும் மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று எதேச்சையாக செக் செய்யத் துவங்கினார்.
ஈமெயில் செக் செய்த மனைவி ஒரு மின்னஞ்சலைப் பார்த்ததும் வீலென்று அலறி, நெஞ்சம் துடிதுடிக்க பொத்தென்று விழுந்தாள். அது நம்ம விடுமுறைக்கு போன கணவனின் டைப்பிங் மிஸ்டேக் ஆன மின்னஞ்சல் தான்.
மத போதகரின் குடும்பம் ஓடி வந்து பார்க்க கீழே கிடந்த மனைவியை தூக்கி உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தி அந்த மின்னஞ்சலைப் பார்த்தார்கள்.
அதில் இப்படி எழுதியிருந்தது.
அன்புள்ள மனைவிக்கு,
இப்போது தான் இங்கே வந்து என்னுடைய அறையில் செக் இன் செய்திருக்கிறேன். நாளை உன்னுடைய வருகைக்காக அனைத்தும் தயார்.
ஏராள அன்பு.
பி.கு: இங்கு மிகவும் சூடாக இருக்கிறது.
ஏராள அசைவம்.
உடல் பரிசோதனை.

ஒரு எழுவத்தைந்து வயது ஆள் ரெகுலர் உடல் செக்கப்புக்காக டாக்டரிடம் சென்றார்.
அவருக்கு எல்லா டெஸ்டும் எடுத்து விட்டு ஒரு விந்தணு சோதனையும் செய்ய வேண்டும் நாளை வரும் போது கொஞ்சம் சாம்பிள் கொண்டு வாருங்கள் என்று ஒரு குப்பியை மூடி போட்டு கொடுத்தார். காற்று போகாமல் கொண்டு வாருங்கள் என்றார் டாக்டர்.
அடுத்த நாள் சொன்னது போலவே பெரியவர் டாக்டரை போய் பார்த்தார். அந்த எடுத்துச் சென்ற குப்பி காலியாக இருந்தது.
அது மட்டுமல்ல படு சுத்தமாகவும் இருந்தது. உள்ளே சாம்பிள் இல்லை. டாக்டர் என்னாச்சு என்று கேட்டதும் பெரிசு சொல்லத் துவங்கினார்.
டாக்டர் அது என்னாச்சுன்னா எப்படியாவது இந்த் விந்தணு சோதனை இன்னிக்கு பண்ணிடனம்னு, முதல்ல நான் என் வலது கையால முயற்சி செய்தேன். அப்புறம் இடது கையால. இரண்டு கைலயும் டிரை பண்ணேன். என் மனைவியும் ஹெல்ப் பண்ணினா. அவளும் இரண்டு கையாலயும் முயற்சி செய்தா. எல்லா வகை முயற்சியும் செய்தா..
இன்னும் சொல்லப் போனா பக்கத்து வீட்டு பங்கஜத்தை கூட உதவி செய்ய கேட்டேன். அவங்களும் ஒரு கை இல்ல டாக்டர் , இரண்டு கைலயும் முயற்சி பண்ணினாங்க. ஹூஹூம் முடியலை.
டாக்டர் அதிர்ச்சியாகி கேட்டார். “பெரிசு என்ன சொல்றீங்க ? பக்கத்து வீட்டு அம்மணியையும் விட்டு வைக்கலியா ?”
பெரியவர் பொறுமையாக சொன்னார். “ ஆமாம். ஒருத்தராலக் கூட இந்த குப்பியோட மூடியத் தொறக்க முடியல டாக்டர். சாரி”
-வலைக்கள்ளன்.

Leave a comment
Upload