தொடர்கள்
கவிதை
தியாக உருவம்... -  - சி. கோவேந்த ராஜா.

20210008161415139.jpeg

தன்னைக் காப்பவன்...
தன்னல மனிதன்...!

தாய் மண்ணைக் காப்பவர்...
பொன்னில மாவீரர்...!

தியாக உருவம் -
இராணுவப் பருவம்...!

இராணுவம் -
வீரத்தின் மொத்த உரு...
விவேகத்தின் ஒத்தக் கரு...
ஆற்றலின்... கற்பகத் தரு...!

இவ் வுலக மனித வாழ்வில்...
தேவைகள் வளரும்....!
சோர்வுகள் பெருகும்...!

இராணுவப் புனித வாழ்வில்....
தேவைகள் குறையும்....!
சேவைகள் பெருகும்....!

தன்னலனைப் புறந்தள்ளி...
மண்ணலனை மனதில் அள்ளி...
ஓயாமல் செயல் புரிந்திடும்...
தியாகச் செம்மல்கள்....!
இராணுவ வீரர்கள்...!

உணவு... குறைத்து...
உறக்கம்.... தொலைத்து...
தன்னுயிரினைத் துச்சமென நினைந்து...
மண்ணுயிர்களை... உச்சமென உணர்ந்து...
நாளெலாம்.... நாட்டிற்காக …உழைத்திடும்...
விவேகச் சீமான்கள்..!
இராணுவ வீரர்கள்...!

தன் உயிரை.. மாய்த்து...
தாய்மண் உயிரை... காத்து...
நற்புகழ் தாங்கிடும்...
தங்கக் கோமகன்கள்....!
இராணுவ வீரர்கள்...!

எல்லையில் -
இயற்கை மாற்றமும்...தாக்கும்....!
எதிரி நாடுகளின் சீற்றமும்... தாக்கும்...!

எல்லாத்
தாக்குதல்களையும் தாங்கி...
தாய் மண்ணைக் காத்து....
நாட்டின் மானங் காக்கும்...
மாவீரர்கள்.... மதியாளர்கள்....!
இராணுவ வீரர்கள்...!

தரணி புகழ் பாடும்...
தானைத் தலைவர்கள்...!
இராணுவ வீரர்கள்...!

இராணுவ பலம் -
அதிகாரத்தை வகுக்கும்...!
ஆணவத்தை அழிக்கும்...!

இராணுவ உள்ளம் -
அன்னியோன்ய நாடுகளின்...
வேண்டிய நல்லுறவை... நிலைநாட்டும்...!

அந்நிய நாடுகளின்....
வேண்டாத பல்லுறவை வேரறுக்கும்...!

இராணுவ பலம் பெருகட்டும்...!
இராணுவ உள்ளம் தழைக்கட்டும்...!

பாங்குடன் ஓங்கு புகழ் சுடரொளி
பாரெலாம் மென்மேலும் உயரட்டும்...!

ஜெய் ஹிந்த்...!