தொடர்கள்
பொது
"பராமரிக்கப் படாத ‘முதல் சார்க் மாநாடு’ நடந்த இடம்...” - ஸ்வேதா அப்புதாஸ்

2021000816233864.jpeg

கொரோனா தொற்றுக்கு பின் கர்நாடகாவில் உள்ள சுற்றுலா தலங்கள் அவசரமாக திறக்கப்பட்டது என்று சொல்லலாம். அதில் பெங்களூரிலுள்ள கபன் பார்க் மற்றும் லாலாபாக் திறக்கப்படவில்லை.... அதே சமயம், நகரை விட்டு தொலைவில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால், சுற்றுலாக்களின் படையெடுப்பு அதிகமாகி கொண்டிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.

20210008162358466.jpeg
பெங்களூரில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நந்தி ஹில்ஸ் மலைக்கு பயணித்தோம்....

இது நந்தி ஹில்ஸ் மற்றும் நந்தி துர்க் மலை என்று அழைக்கப்படுகிறது.. இந்த மலை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம். 18 ஆம் நூற்றாண்டில் மைசூர் புலி என்று அழைக்கப்படும் திப்புசுல்தானின் கோட்டை அமைந்துள்ள ஒரு கம்பீர மலை பகுதி.. திப்புசுல்தான் இந்த உயர்ந்த பாறை மலையை சுற்றி கோட்டையை கட்டியுள்ளார்.அதிலுள்ள அவரின் சம்மர் பேலஸ் சிறப்பு வாய்ந்தது என்று சொன்னால் மிகையாகாது.

20210008162417318.jpeg
இங்கு திப்புவால் அரங்கேறிய கொடூரத்தை கேள்விபட்டதும், நமக்கு சற்று தலை சுற்றுகிறது... போர் கைதிகளை, கோட்டையின் விளிம்புக்கு இழுத்துச் சென்று பயங்கர பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளார் திப்பு.... அந்த இடம் தான் திப்பு பள்ளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டையை தான் பிற்காலத்தில் திப்புசுல்தான் ஆக்கிரமித்து, புதிய கோட்டையை கட்டி அவ்வப்பொழுது அங்கு சென்று தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்கிறது வரலாறு.

இந்த வரலாற்று சிறப்புமிக்க மலையில், அனுமன் கோயில் மற்றும் யோக நந்திஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்ற ஒன்று. நாம் நம் காரில் நந்தி மலையை நோக்கி பயணித்தோம்... இதமான குளு குளு காலநிலை மிகவும் இதமாக இருந்தது... எட்டு ஹேர் பின் வளைவுகளை கடந்து 1,478 மீட்டர் உயரத்தை அடைந்தோம்.... இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 4,849 மிட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அருமையான சாலை, மலை பயணம் மிகவும் எளிதாகவே இருந்தது...

20210008201903269.jpeg

கோட்டை முகப்பில் 150 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்க படுகிறது.. நம்மை பத்திரிகையாளர் என்று அறிந்து கொண்ட நபர் 125 ரூபாய் போதும் என்று கூறினார்... இதுவே தமிழ்நாடு சுற்றுலா தலங்களாக இருந்தால், கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தான் உண்மை.

ஒரு அடர்ந்த காட்டு பகுதி.. வழி நெடுகிலும் குரங்குகளின் பட்டாளமும் நாய்களின் கூட்டமும்.... நாய்களுக்கு ஒரு நபர் நிறைய பிஸ்கட்டுகளை வீசிக் கொண்டிருக்க... அந்த பிஸ்கட்டுகளை, குரங்குகளும் லாவகமாக கவ்வி சாப்பிட்டு கொண்டிருக்க... அவைகளுக்கு போட்ட பச்சை கேரட்டுகளை மோந்து கூட பார்க்கவில்லை.... காரணம் - சுற்றுலாக்கள் தாங்கள் கொண்டு வரும் உணவுகளை போட்டு பழக்கி விட்டிருக்கிறார்கள்... பாவம்... இந்த மலை காட்டு பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்று ஒருவர் கூறினார். ஏகப்பட்ட சுற்றுலாக்கள் மலை ஏறி கொண்டிருக்கிறார்கள்... பாதி பேர் மாஸ்க் போடவில்லை... சமூக இடைவெளி சுத்தமாக இல்லை... கொரோனா என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் நமக்கு வந்து விட்டது.

20210008162442128.jpeg
நிறைய காதல் ஜோடிகள் கூலாக தங்களை மறந்து பேசிக்கொண்டிருந்தனர். கொரோனா என்பதை பற்றி முழுமையாக மறந்து போயிருந்தார்கள் என்று தான் சொல்லவேண்டும் .

20210008162912434.jpeg


அதே போல இந்த நந்தி ஹில்சுக்கு வந்திருந்த பெரும்பாலான சுற்றுலா கூட்டம், எதைப் பற்றியும் கவலை இல்லாமல் சுற்றி கொண்டிருந்தனர்....

20210008162506794.jpeg
நாம் நம் காரை கரடு முரடான பார்கிங் இடத்தில் நிறுத்தி விட்டு, பாறைகளின் மேல் நடந்து சென்றோம்..... அங்கு இருந்த சிவன் கோயிலில் கன்னட பக்தி பாடல்கள் இசைத்து கொண்டிருக்க... உண்மையில் அந்த ஸ்லோக பாடல்கள் நம் இதயத்தை தொட்டது....

20210008202008704.jpeg

அங்கு இருந்த ஸ்ரீனிவாச சுவாமிகளை சந்தித்து பேசினோம்...
“கொரோனாவுக்கு பின் இங்கு உள்ள கோயில்கள் திறக்கப்பட்டன... இந்த நந்தி மலை, சுற்றுலாக்களுக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டது... ஆனால், அவ்வளவாக கூட்டம் இல்லை... ஜனவரி முதல் நாள் முதல் காலை சூரியன் உதிக்கும் காட்சியை பார்க்க கூட்டம் வருகிறது... யோக தியானம் செய்கிறவர்கள் வரத் துவங்கியுள்ளனர்... வெள்ளைக்காரர்கள் வருவது இல்லை.. அவர்கள் தான் காலை யோகா செய்து, சூரிய நமஸ்கராத்தை செய்வார்கள்... நம் இந்தியர்கள் வருகிறார்கள், அதே சமயம் அவர்களை போல இல்லை. இங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளது. அவை நந்தி கோயில், அனுமன் கோயில், யோக நந்திஸ்வர் கோயில் சிறப்பு பெற்றது. இவை இல்லாமல் இன்னும் பன்னிரெண்டு கோயில்கள் உள்ளன. சுற்றுலாக்கள், இறை பக்கதர்களாக வந்து சாமி கும்பிட்டால் தான் எங்களுக்கு வருமானம்.... என்ன செய்ய கடவுள் காப்பார்” என்று முடித்தார்.

20210008162552629.jpeg
காலை 5.30 மணிக்கு, அதிகாலை சூரிய உதயத்தை காண, நந்தி மலைக்கு சுற்றுலாக்கள் வருவார்கள். அதில் பலர் சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். இந்த மலையை சில பக்தர்கள் படிகளின் மூலம் நடந்து வந்து, யோகா மற்றும் கோயில்களில் வழி பாடுகளை செய்வது கூட வழக்கமாம்.. இங்கு உள்ள திப்பு கோட்டை அரண்மனையில் தங்குபவர்களும் உண்டு. தற்போது பராமரிப்பு இல்லாத அந்த அரண்மனை மோசமான நிலைமையில் உள்ளது. இந்த மலையில் 1,175 படிக்கட்டுகள் உள்ளன.

20210008162758270.jpeg

நாம் சந்திப் மற்றும் பெமி ஜோடியை சந்தித்து பேசினோம்...

“கொரோனா லாக் டவுனுக்கு பின், சற்று நிம்மதியாக இருக்கவென்றே இந்த இடத்திற்கு வந்தோம்... காலை சூரிய உதயத்தை பார்க்க தான் ஆசை.. அதிகாலை வருவது சற்று சிரமம் தான், என்ன செய்ய.. ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம். கோயில்கள் மற்றும் திப்புசுல்தானின் கோட்டை... சம்மர் அவுஸ் இதை எல்லாம் பார்ப்பது அருமை தான்.. அதை விட இந்த திப்பு பள்ளத்தாக்கு... அதை பற்றி கேள்விப்பட்டு வருத்தமும் ஒரு வித பயமும் ஏற்பட்டு விட்டது.

20210008162819652.jpeg
ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம்... கர்நாடக சுற்றுலா துறை எந்த பராமரிப்பும் செய்யாமல் இருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. எந்த இடத்திலும் சைன் போர்ட் கிடையாது... எப்படி செல்வது என்றே தெரியவில்லை... கர்நாடக சுற்றுலா துறை இவ்வளவு மோசமாக உள்ளதே என்று யோசிக்கும் போது எல்லாம் அரசியல் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை, தொல்லியல் துறைதான் பாதுகாக்க வேண்டும்” என்று கூறி நகர்ந்தார்கள்.

20210008162844892.jpeg
இந்த நந்தி ஹில்ஸுக்கு மற்றொரு உலக சிறப்பும் உள்ளது.. இங்குள்ள திப்பு சம்மர் அவுஸ் தற்போது மூடப்பட்டுள்ளது. ஹைதர் அலி கட்டின அரண்மனை, திப்புவால் முடிக்கப்பட்டு அவரே இங்கு வந்து தங்கி செல்வாராம்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, வெள்ளைய சீமான்கள் தங்க ஒரு கெஸ்ட் அவுஸ் கட்டப்பட்டது... இங்கு பின்னாளில், பாரத பிரதமர் நேரு கூட வந்து தங்கியுள்ளார்... அதன் பின், இந்த மாளிகை நேரு நிவாஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இங்கு 1986 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க ‘சார்க் மாநாடு’ முதல் முறையாக இந்த நேரு நிவாஸ் மாளிகையில் இந்திய அரசாங்கம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் திருணம் செய்து கொண்ட இம்ரான் பாத்திமா புதிய தம்பதிகள் இந்த நந்தி மலைக்கு ஜாலியாக விசிட் வந்திருந்தனர்....

20210008162643223.jpeg
“கடந்த மே மாதம் எங்க திருமணம் நடக்க இருந்தது... கொரோனா தாக்கத்தால் தள்ளிப் போன திருமணம், கடந்த மாதம் தான் நடைபெற்றது. எங்குமே போக முடியவில்லை, அதனால் தான் இங்கு வந்தோம். கூட்டம் இல்லாமல் இருக்க இடத்திற்கு தான் செல்ல வேண்டும் என்ற உத்தரவை குடும்பத்தார் பிறப்பித்துள்ளார்கள். இது ஒரு வரலாற்று இடம்.... எந்த பராமரிப்பும் இல்லாமல் இருப்பது தான் வருத்தம். இங்கு நல்ல ஹோட்டல் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை. சரி இத்தனை நாள் வீட்டிலே அடைந்து இருந்ததற்கு இங்கு வந்ததே ஒரு புதிய மாற்றம்.. திப்பு கோட்டை... இங்கு இந்து கோயில்களும் இருக்கிறது. திப்பு இந்து- முஸ்லீம் ஒற்றுமையை கடைபிடித்துள்ளார் என்பதை கேட்கும் போது, ஆச்சிரியமாக உள்ளது” என்கிறார்கள் இந்த தம்பதியினர்.

20210008162707437.jpeg

நாமும் நந்தி மலை முழுவதும் ஒரு ரவுண்டு அடித்தோம்.... வெறும் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது... கர்நாடக சுற்றுலா துறை எந்த பராமரிப்பும் செய்யாமல் இருப்பது உண்மையிலேயே வருத்தமான விஷயம்.

20210008162729312.jpeg
1986 ஆம் வருடம் இந்தியாவில் நடந்த முதல் சார்க் மாநாடு இந்த வரலாற்று சிறப்பு மிக்க நந்தி மலையில் நடந்துள்ளது. அதை பற்றிக் கூட கர்நாடக அரசுக்கு கவலை இல்லை என்பது நெருடலான ஒன்று.