தொடர்கள்
வம்பு துளிகள்
கருத்து கதிர்வேலன்...

20210808143412920.jpeg

உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்...

அது சரி உள்ளூரில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்று ஒரு சர்வே நடத்தினால்தான் தெரியும்.


நீதிபதிகளின் பொறுமையை மத்திய அரசு சோதிக்க வேண்டாம்... - சுப்ரீம் கோர்ட் கண்டனம்

ராகுல்ஜி சந்தோஷமா...


பாடதிட்டத்தில் சுயமரியாதை சேர்க்க வேண்டும்... - அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை

ஆமாம். பாடத்திட்டத்திலாவது இருக்கட்டும்.


மக்களை சந்திக்க திமுக தயங்குகிறது... - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ பேட்டி

நீங்க கூட விசாரணைக்கு வர தயங்குவதா ஆளுங்கட்சி சொல்லுதே...


சிபார்சு கேட்டு வர வேண்டாம்... அமைச்சர் வீட்டில் நோட்டீஸ்... - புதுக்கோட்டையில் பரபரப்பு

அவருக்கு அந்த அதிகாரம் இல்லையாம்.. அதான்...


34 அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்... - கல்வி அமைச்சர் உறுதி

அப்படியே கல்வியின் தரம் உயர்த்த ஏதாவது பண்ணுங்க அமைச்சரே...


முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுகிறார்... - தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி.

அப்புறம் எல்லாம் வெறும் அறிவிப்புதான் என்று சொல்லக்கூடாது தலைவரே.


நிதியமைச்சரின்பல கருத்துக்கள் ஏற்கக் கூடியதாக இல்லை... - மார்க்சிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன்

ஆமாம்.. ஆமாம்... உண்மை எல்லாம் பிட்டு பிட்டு வைக்கிறார்.


விரைவில் பேங்க் ஆப் தமிழ்நாடு... - ராஜ்யசபா எம்பி அப்துல்லா தகவல்

கடன் கேட்பீர்களா.. இல்லை குடுப்பீங்களா.. அத முதல்ல சொல்லுங்க.


காலத்தின் கட்டாயத்தினால், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சி வந்தே தீரும்... - தமிழக தலைவர் அண்ணாமலை

ஆனாலும், உங்களுக்கு ரொம்பதான் தைரியம்.