முதல்வரை வீட்டில் சந்திக்க மிஸ்டர் ரீல் சென்றபோது... திருமதி துர்கா ஸ்டாலின் முதல்வர் சாரிடம் ஒரு களிமண் பிள்ளையாரை காண்பித்து, முதல்வர் சார் இந்தப் பிள்ளையார் வைக்க தடை இல்லை தானே... அப்புறம் வந்து போலீஸ் பிள்ளையாரை ஜெயிலில் புடிச்சு போட்ற போறாங்க என்று கேட்க... முதல்வர்... மிஸ்டர் ரீலையும், திருமதியையும் மாறி மாறி பார்க்க... அதன் பிறகு, சாரி... பிள்ளையார் 108 கொழுக்கட்டை நாளைக்கு தரேன், அவரை மன்னித்து விடுங்கள் என்றபடியே பிள்ளையாருடன் உள்ளே போனார்.
எல்லோரும் எங்களை கோபிக்கிறார்கள் என்று சொன்ன முதல்வர்... “பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து, உள்துறை செயலாளர் எழுதியதைதான் நாங்கள் நடைமுறை படுத்துகிறோம். வேணா படிக்கவா” என்று கேட்க... அதற்கு மிஸ்டர் ரீல்... “ஏற்கனவே சேகர் பாபு சட்டசபையில் படித்துவிட்டார். வாட்ஸ்அப்ல எல்லா குரூப்பில் இந்த லெட்டர் வலம் வருது” என்று சொல்ல... அதற்கு முதல்வர்... “நம்மைவிட வாட்ஸ்அப் குரூப் ரொம்ப ஃபாஸ்ட்” என்று அலுத்துக் கொண்டார்.
அப்போது மிஸ்டர் ரீல்... “பாரதிய ஜனதா போட்ட சட்டங்கள் எல்லாத்தையும், வரிசையாக கண்டித்து ரத்து செய்ய சொல்லி தீர்மானம் போடறிங்க” என்று சொல்ல... அதற்கு முதல்வர்... “எல்லாம் ராகுல்காந்தி வழிகாட்டுதல் தான். காலையில் போன் செய்து, சட்டசபையில் என்ன செய்யணும் என்று சொல்லிவிடுகிறார். அவர் சொல்வதையெல்லாம் இப்போது நான் செய்துவிடுகிறேன். தொகுதி பங்கீடின் போது, சீட்டைக் குறைவாக தந்து.. அப்ப நீங்க சொன்னது எல்லாம் நான் கேட்டேன் இல்ல... அதே மாதிரி... இப்ப நான் சொல்றத நீங்க கேளுங்க... என்று சமாளித்துக் கொள்ளலாம்” என்று சொல்ல...
அப்போது மிஸ்டர் ரீல்... “ரொம்ப உஷார் அரசியல் தலைவராக ஆயிட்டீங்க” என்று சொல்ல... அதற்கு முதல்வர்... என்ன செய்யறது.. “என் நிலைமை அப்படி. எம்எல்ஏ, எம்பி சீட் கிடைக்காதவர்களுக்கு... வாரியத்தலைவர் பதவியைத் தந்து சமாதானப்படுத்தலாம் என்று நினைத்தேன். திருமாவளவன் உங்களைப் பாராட்ட வரவேண்டுமென்று அனுமதி கேட்டார், பாராட்டுக்கு தானே என்று அவரை வரச் சொன்னேன். வந்ததும்... ஒரு நாற்பது பக்க நோட்டை தந்து, இதில் எங்கள் கட்சி தம்பிகளின் பட்டியல் இருக்கிறது. வாரியம் கேட்டு விருப்ப மனு தந்திருக்கிறார்கள், அதை அப்படியே உங்களிடம் தந்து விட்டேன். உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். ரவிக்குமார், திமுக உறுப்பினர் என்று சொல்லிவிட்டார் என்று அவர் கோட்டாவில் கை வைத்து விடாதீர்கள். இப்பவும் எங்கள் கட்சி, செயற்குழு.. பொதுக்குழுவில் அவர் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்” என்று உஷார் படுத்தி விட்டு போகிறார் என்று சொல்ல...
அப்போது மிஸ்டர் ரீல்... “உச் கொட்டி... உங்க நிலைமை ரொம்ப பரிதாபம் தான் போலிருக்கிறது” என்று சொல்ல... அப்போது முதல்வர் செல்பேசி ஒலிக்க... எதிர்முனையில் நிதியமைச்சர் பேசுவது நன்றாக கேட்டது. “இதுவரை நீங்கள் அறிவித்த 110 விதிக்கு செலவு செய்ய 2208 கோடி ரூபாய் தேவை. இந்த வார டாஸ்மாக் கலெக்ஷன வைச்சுதான் இந்த மாத சம்பளப் பிரச்சினையை சமாளிக்கணும். சேகர்பாபுகிட்ட உண்டியல் கலெக்சன் எவ்வளவு என்று எண்ணி சொல்ல சொல்லியிருக்கிறேன். இனிமேல் 110 அறிவிப்பு எல்லாம் வேண்டாம், அதை மறந்து விடுங்கள்” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
அப்போது முதல்வர் வீட்டு செக்யூரிட்டி நாலைந்து பேர், மூட்டை மூட்டையாக வாழ்த்துக் கடிதங்களைக் கொண்டு வந்து இறக்க... மொத்தம் 15 மூட்டை விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் வந்திருக்கு சார் என்று சொல்ல... அப்போது மிஸ்டர் ரீல்... “இது அண்ணாமலை பண்ற வேலை” என்று சொல்ல... அதற்கு முதல்வர், ஆமாம்.. ஆமாம்... “ஏற்கனவே முதல்வர் அலுவலகத்துக்கு 25 மூட்டை வாழ்த்து அட்டை வந்து இறங்கி இருக்கிறது. அதை பார்த்த நிதியமைச்சர், இதை எடைக்கு போட்டா எவ்வளவு பணம் வரும் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்” என்று சொல்ல... அப்போது மிஸ்டர் ரீல்... “பாரதிய ஜனதா தலைவர் உங்களுக்கு மறைமுகமாக வருமானத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார், இது நல்ல விஷயம் தானே” என்று சொல்ல...
அப்போது மீண்டும் திருமதி துர்கா ஸ்டாலின் வந்து... “முதல்வர் சார், அண்ணாமலை தம்பி லைன்ல இருக்கார். பிள்ளையார் சிலை ஊர்வலம் தான் கூடாது,,, ஒரு லட்சம் பெரியார் சிலை வைத்து ஊர்வலம் நடத்தினால், அதற்கு அனுமதி உண்டா” என்று கேட்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே... திக தலைவர் வீரமணி ஓடிவந்தார். தளபதி.. பெரியார் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி எல்லாம் தராதீர்கள். பெரியார் நம்ப சொத்து. பாரதிய ஜனதா கபளீகரம் பண்ண முயற்சி செய்கிறது. இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதற்காக நான் இங்கேயே சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயார். பெரியார் எனக்கே சொந்தம்... எனக்கே எனக்கு... யாருக்கும் உரிமை இல்லை. நான்தான் பெரியாருக்கு சொந்தம் என்றெல்லாம் ஏதோ ஏதோ சொல்ல.... அப்போது முதல்வர்... “ஆசிரியர்.. நீங்க இது பத்தி எல்லாம் கவலைப் படாதீங்க. அவங்க பெரியார் ஊர்வலம் போனா, நமக்கு தானே நல்ல விளம்பரம்” என்று சொல்ல... “வேண்டாம்.. வேண்டாம்.. வேண்டாம்... நாங்கள் பெரியார் சிலை ஊர்வலம் போனது போல், உங்களுக்கு பிள்ளையார் சிலை ஊர்வலம் போக தைரியம் உண்டா என்று அவர்கள் சவால் விடுவார்கள். இது ஒரு திட்டமிட்ட சதி. இந்த சதி வலையில் நாம் விழக்கூடாது. நீங்க நாளைக்கு பெரியார் சிலை ஊர்வலம், பாரதிய ஜனதா போகத் தடை என்று சட்டசபைத் தீர்மானம் கொண்டு வாருங்கள். வேண்டாம்.. வேண்டாம் என்று ஒரு மாதிரி அவர் பிதற்ற ஆரம்பிக்க”... அண்ணாமலை, கொஞ்சம் விவரமான அரசியல்வாதிதான் போலிருக்கிறது என்று யோசித்தபடியே மிஸ்டர் ரீல் புறப்பட்டார்.
Leave a comment
Upload