தொடர்கள்
வலையங்கம்
உடனே செய்யுங்கள்

20260120195437705.jpeg

இந்தியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி, வைஷ்ணவி சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறார்

இது உண்மையில் வரவேற்க வேண்டிய ஒரு விஷயம் இன்றைய இளம் சிறார்களை தவறான வழிக்கு சென்று குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட சமூக வலைதளம் முக்கிய காரணம். எனவே இது பரிசீலனை என்றெல்லாம் காலதாமதம் செய்யாமல் உடனே இந்த கட்டுப்பாட்டுக்கான சட்டதிட்டங்களை வகுத்து அதை முழு அளவில் செயல்படுத்துவது என்பதுதான் இன்றைய இளம் சிறார்களை பாதுகாப்பதற்கான சரியான நடவடிக்கை. ஏற்கனவே ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் சமூக வலைத்தளத்தை முழுமையாக பயன்படுத்த 16 வயதிற்கு உட்பட்டோருக்கு தடை விதித்து அதை செயல்படுத்துகிறது. நாமும் அதை உடனே செய்யவேண்டும். இதில் பரிசீலனை என்ற பேச்சே தேவையில்லை

சிறார்களுக்கு சமூக வலை தளங்களை தடை செய்யுங்கள் என்று பிரான்ஸ் அதிபரும் மோடிக்கு அறிவுரை வழங்கி இருக்கிறாராம்.