
நன்றி: தினமணி
திருவாளர் வாக்காளர்களுக்கு இப்போது தமிழக தேர்தலில் எப்படி விட்டமின் ‘ப” வை வழங்கலாம் என்று அரசியல் கட்சிகள் ரூம் போட்டு யோசித்து கொண்டிருக்கிறார்கள் .
அரசியலில் எல்லாம் தேர்தலுக்காக இலவசங்கள் கொடுத்துவிட்டால் இனி எப்படி மனிதர்கள் உழைப்பார்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழவதும் புதியதாக தோன்றியுள்ள கட்சிகள் தங்களின் கட்சி கூட்டங்கள் , ஊர்வலங்கள் , கண்டன போராட்டங்கள் என கலக்கி கொண்டிருக்கின்றன.
சென்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி ஒரே கையெழத்தில் தள்ளுபடி செய்தார் , அதுப்போல் இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தள்ளுபடி செய்வார் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பில் இருப்பதாக விவசாயி பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற பில்லியன் டாலர் கேள்வி தமிழகத்தில் இப்போது டாக் ஆப் தி டவுனாக உள்ளது. திமுக விற்கு டப் பைட் கொடுக்கும் காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகூர் பிரியங்கா காந்தி பேசும் புகைப்படம் தான் இப்போது வைரலாக உள்ளது. வாசகர்களின் பார்வைக்கு சில புகைப்படங்கள் இங்கே பதிவிட்டுள்ளோம்.





தமிழக முழவதும் தேர்தல் தேதி அறிவிப்பு வர இருக்கிறது. இதற்குள் பாரத பிரதமர் மோடி மூன்று முறை தமிழக விசிட் செய்ய இருக்கிறார்.

விஜயகாந்த் கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்து கொண்டது தான் தற்போது சமூக வலைதளங்களில் டாப் கியரில் ரீல்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்த்த இலவசங்கள் குறிப்பாக அறிவிக்கப்படவில்லை,இந்த பட்ஜெட் கிட்டதட்ட அறிவு ஜீவிகளுக்கு மட்டும் புரியும் படியாக உள்ளது என்று எதிர்கட்சியினர் குரலாக உள்ளது.

எடப்பாடி தான் அடுத்த ஆட்சி அமைத்தால் வீட்டிற்கு வருடத்திற்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர் தருவதாக வாக்குறுதி அளித்து தமிழகம் முழுவதும் பேசு பொருளாகி உள்ளது.

விஜய் தனது த.வெ.க கட்சி தமிழகத்தின் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் என்றும் டெல்லிக்கு தனது சோர்ஸ்கள் மூலம் சிக்னல் அனுப்பி கூட்டணிக்காக கதவை திறந்து வைத்து காத்து கொண்டிருக்கிறார்.
விஜய் கட்சியினர் பெற்று சென்ற விருப்ப மனுவினை நிறைய பேர் மீண்டும் சமர்பிக்கவில்லை என்ற ஆதங்க குரல் பனையூர் பங்களாவில் ஒலிக்கிறது.
பிஜேபி எப்போதும் போல் கூலாக தனது கூட்டணியை அமைத்துகொண்டு அரசியல் காய் நகர்த்தலை நடத்தி கொண்டிருக்கிறது.
சிவராத்திரி முடிந்துவிட்டது …இனி வெயில் மெல்ல சுட்டெரிக்க தொடங்க இருக்கிறது. இதற்குள் தமிழக தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு தமிழக அரசு சார்பாக சில இலவசங்கள் , கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் வரலாம் என்கின்றது அறிவாலய வட்டாரங்கள்.

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவானால் இந்த புகைப்படம் அட்வான்ஸாக நாம் பிரசூரித்துள்ளோம்.
பொங்கலுக்கு 3 ,000 இப்போது தகுதி படைத்த மகளிருக்கு ரு 5000 ஆக ரு8000 தமிழக முதல்வர் கொடுத்துள்ளது , கிட்டதட்ட பீகார் மாடல் தேர்தல் வியூகத்தினை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை பற்றி பேட்டி அளித்து தனது மனதின் குரலை மீடியாக்களுக்கு தெரியப்படுத்திவிட்டார்.
இப்போதைக்கு தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் நல்ல சரக்கு விற்பனைக்கு வரும் என்பது தமிழக மதுப்பிரியர்களின் மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….
‘தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கட்சி இமேஜை கெடுப்பதற்காக சூழ்ச்சிகள் செய்யப்படுவதாக திமுக தரப்பு செய்தி வெளியாகியது.
தேர்தல் தேதி அறிவிப்பிற்கு இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும் ..

தமிழகத்தில் இப்போது தேர்தல் திருவிழா களை கட்ட தொடங்கிவிட்டது.

Leave a comment
Upload