
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கடந்த ஒரு மாதமாக நிருபர்களை சந்திக்கும் போது எடப்பாடி நல்லவர் என்று சொல்லி இருக்கிறார்.
திமுக ஆட்சி மோசம் என்றும் சொல்லி இருக்கிறார்.
எடப்பாடி ஏமாற்றிவிட்டார்.
திமுக தலைவர் ஸ்டாலின் நல்லவர்.
நாங்கள் செல்லும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி.
ஆட்சியில் பங்கு வேண்டும்
இப்படி எல்லாம் பேசிக்கொண்டு, கூட்டணி பற்றி ஏ .வா. வேலுடன் திமுகவில் பேசிக் கொண்டிருந்தார்.
வேலுமணியுடன் அதிமுக தலைமை கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
இதன் நடுவே பாஜகவிடம் மத்திய இணையமைச்சர் தந்தால் கூட்டணிக்கு தயார் என்று பேரம் பேசிக் கொண்டிருந்தார்.
காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் ரொம்பவும் பிரச்சனை பண்ணவே இதற்கு முடிவு கட்ட தேமுதிகவிடம் முதலில் ஏ.வா. வேலு பேசினார்.
பிறகு கனிமொழி பேசினார்.
ராஜ்யசபா சீட்டு உறுதி. ஆறு தொகுதிகள் மற்றும் தேர்தல் செலவுக்கான பணம் என்று பேசி பிரேமலதாவை சம்மதிக்க வைத்தார்.
சூட்டோட சூட்டாக அறிவாலயத்திற்கும் அழைத்து வந்து விட்டார் கனிமொழி.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் முடிவு எதுவும் சொல்லாததால் தேமுதிக கூட்டணியில் இணைந்துவிட்டது
நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகள் தரமுடியாது என்று கைவிரிக்கபோகிறது திமுக.

Leave a comment
Upload