
அங்கோர் வாட் கோவிலின் முகப்பு.
ஆற அமர எழுத வேண்டிய ஒரு அனுபவம். இந்த வாரம் இன்னமும் ஓட்டத்தில் இருப்பதால் ஒரு சின்ன டிரைலர் தான் வாவ் அங்கோர் வாட்.
400 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோவில் ! வாடிகன் நகரத்தை விட நாலு மடங்கு பெரியது.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கேமர் சாம்ராஜ்யத்தில் இரண்டாம் சூரியவர்மன் ஆட்சியில் விஷ்ணுவிற்காக கட்டப்பட்ட கோவில் இது.
1113 ல் துவங்கி 37 வருடங்களாக கட்டியிருக்கிறார்கள் இந்தக் கோவிலை.
ஐம்பதாயிரம் தொழிலாளர்கள், யானைப் படைகள் கொண்டு, அகழி, கோபுரங்கள், சிற்பங்கள் என்று செதுக்கி செதுக்கி செய்த கோவில்.
வரலாற்றுக்குள் போகுமுன் இன்றைய நிலை எப்படி இருக்கிறது ???

அங்கோர் வாட் கோவிலின் விஸ்தீரணத்தை பார்க்கும் நேரத்தில், இன்றைய கோவிலின் நிலை மனது வலிக்கச் செய்யும் வகையில், அதே சமயம் பல நூறாண்டுகளுக்கு முன் நம் மன்னர்கள் கடல் கடந்து சென்று கோவில் கட்டதாக சொல்லப்படும் அங்கோர்வாட் சங்கதியும் உண்மையில்லை போலத் தான் தோன்றுகிறது.
சூரியவர்ம மன்னர் 12ம் நூற்றாண்டில் தானாகவே இந்திய இதிகாசங்களின் மேல் உள்ள ஆழ்ந்த பற்றின் காரணமான, விஷ்ணுவின் பக்தியால் கட்டப்பட்ட கோவில் என்று தான் வரலாற்று செய்திகள் சொல்கிறது.
அங்கோர்வாட்டின் கடைசி கட்ட கோபுரத்திலிருந்து இறங்கி வரும் போது. அத்தனை சிற்ப வேலைப்பாடுகள் நம்மை அசர வைக்கிறது.
அங்கோர்வாட் ஒரு அதிசயம் சந்தேகமேயில்லை.
அடுத்த சில வாரங்களில் கம்போடியாவின் கோவில்களை கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாம்.

Leave a comment
Upload