வருடந்தோறும் கிறிஸ்தவர்களின் தவ காலம் என்னும் ஏசுவின் சிலுவை பாடுகள் திருநீற்றுப் புதனன்று துவங்கியது.

இந்த தவ காலம் என்பது நாற்பது நாட்கள் அனுசரிக்க படுகிறது .
இந்த வருடம் கிறிஸ்தவர்களின் தவ காலமும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பும் ஒரே நாளான 18 ஆம் தேதி துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது .
127 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்தவர்களின் தவ கால நோன்பும் ரமலான் நோன்பும் ஒன்றித்து வருவது ஆச்சிரியமான ஒன்று !.

கிறிஸ்தவர்களின் தவ காலம் என்பது ஏசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூர்ந்து நோன்பு , சிலுவை பாதை , ஆலயங்களுக்கு செல்வது என்று 40 நாட்கள் தவம் கடந்து ஈஸ்டர் சண்டே ஏசுவின் உயிர்ப்பை கொண்டாடுவது ஒரு புதிய மனிதராக
மாற்றுகிறது என்று நம்புகின்றனர் .
நாற்பது நாட்கள் நோன்பு கடைபிடிக்கும் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசிக்கொள்வது காவி உடை அல்லது கழுத்தில் துண்டு போட்டுக்கொள்வதும் ஒரு தவம் .
புலால், மீன் உண்ணாமை , தினமும் ஒரு வேளை உணவை உட்கொள்ளாமல் இருப்பது .சிலர் வெள்ளிக்கிழமை முழு நாள் நோன்பு இருப்பதும் ஒரு தவம் .

விபூதி புதனன்று கடந்த வருடம் காய்ந்த குருத்தோலைகளை ஆலயங்களுக்கு எடுத்து வந்து எரித்து அந்த சாம்பலை திருப்பலியில் புனித படுத்தி மக்களின் நெற்றியில் குருக்கள் சிலுவை அடையாளமிட்டு பூசி 40 நாள் தவத்தை துவக்கிவைக்கிறார்கள்

சாம்பலை நெற்றியில் பூசும்போது " மனிதா மண்ணிலிருந்து வந்தாய் மண்ணுக்கே திரும்புவாய் " என்று குருக்கள் கூறிவந்ததை
கத்தோலிக்க தலைமை
அந்த வாக்கியத்தை மாற்றி " மனம் திரும்பி நற்செய்தியை அறிவியுங்கள் " என்று கூற அறிவித்துள்ளனர் அது தான் பின்பற்ற படுகிறது .
தவ காலம்முழுவதும் தினமும் குழுவாக சிலுவை பாதை நடைபெறும் .
குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மக்கள் அதிகமாக ஒன்று கூடி குருக்களின் தலைமையில் ஏசுவின் பாடுகளான 14 நிலைகளை தியானித்து சிலுவை பாதை சிறப்பிக்க படுகிறது .

தவ காலத்தின் ஐந்தாவது ஞாயிற்று கிழமை பரிகார பவனி அனைத்து பேராலயங்களில் இருந்து சிலுவை சுமந்து முக்கிய நகர வீதிகளில் இந்த பவனி நடைபெற்று வருகிறது .
தவ காலத்தை முன்னிட்டு கேரளா மலையாற்றூர் , ஊட்டி குருசடி திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வது ஒரு பக்தி பயணமும் தொடர்கிறது .

இதில் மலையாற்றூருக்கு இரவுகளில் சிலுவை சுமந்து மலையேறிஅங்குள்ள சிலுவையை வணங்கி திருப்பலியில் கலந்து கொண்டு அதிகாலை நான்கு மணிக்கு கீழே வந்து விடுவர் யாத்திரீகர்கள் .
தவ காலம் ஏசு சிலுவையில் உயிர் விட்ட புனித வெள்ளிவரை தொடரும் ஒரு பக்தியான 40 நாட்கள் .

உதகை மறைமாவட்ட ஆன்மீக குரு ஞானதாஸ் அவர்களை சந்தித்து பேசினோம் ,
" இந்த தவ காலம் கடவுளின் இரகத்திற்கும் அன்புக்கும் நன்றி செலுத்தும் காலம் .ஏழைகளுக்கு உதவிசெய்வது நோன்பு என்பது நம்மை வருத்திக்கொண்டு இறைவனின் கருணையை நினைவுகூருவது .
இந்த காலம் கருணையின் காலம் " என்று கூறினார் .
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பிர்கள் என்பதை உணர்த்தும் ஒரு நோன்பு திருநாள் தான் ரமலான் .
ஏழைகளின் வறுமை பசியை நினைவுகூர்ந்து அதை புரிந்து கொள்ள தான் ரமலான் நோன்பு .
அதிகாலை 4 மணிக்கு குறைவான உணவை உண்டு பின் நாள் முழுவதும் பட்டினியாக நோன்பு இருந்து இறைவனை தொழுது மாலை மசூதிகளில் நோன்பை முடிக்கும் போது நாம் செய்த பாவங்களுக்கு

இறைவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உணவை உண்பது வருடத்தில் 30 நாள்

கடைபிடிக்கும் சிறந்த ரமலான் நோன்பு " என்கிறார் ஊட்டி பெரிய மசூதியின் ஹஸரத் இம்ரான் .

முகமது இர்ஷாத் கூறுகிறார் , " ஏழை எளிய மக்களின் பசி பிணியை போக்கவும் , நம் பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும் காலம் தான் ரமலான் நோன்பு நாட்கள் "
நாள் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து மாலை 6.45 மணிக்கு மசூதியில் தொழுகைக்கு வரும் ஆண்கள் ஒன்றித்து அமர்ந்து தங்களின் பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு

பேரிச்சை பழம் , ஆரஞ்சு ,பிஸ்கட் , பன் , வடை தர்பூசிணி , வாழைப்பழம் பின் சத்தான கஞ்சி குடித்து விட்டு தொழுகை நடத்துவது முப்பது நாட்களுக்கு தொடர்ந்து ரமலான் பண்டிகை மிக சிறப்பாக பிரியாணி தயாரித்து கொண்டாடப்படும் .
நோன்பு காலத்தில் பைபிளின் கருத்தான வசனங்கள் ஏராளம் அதில் ஆமோஸ் புத்தகம் 5:14 "நன்மையை நாடுங்கள் , தீமையைத்தேடாதீர்கள் அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார் "
மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வசனம் 9:14-15
" மணமகன் அவர்களை விட்டு பிரியவேண்டிய காலம் வரும் அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள் "
ஈஸ்டரும் ராமலானும் நெருங்கி சிறப்பிப்பது உலக வரலாற்றில் மிக சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது .

Leave a comment
Upload