தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

திருமலையில் திரிஷா

20260120152447731.jpg

20260120151408375.jpg

2026012020152614.jpg

தமன்னா

விஷாலுடன் புருஷன் என்ற தமிழ் படத்தில் மீண்டும் நடிக்கிறார் தமன்னா. இந்தப் படத்தில் கணவரை அடக்கி ஆளும் அதிரடி மனைவி வேடமாம் அவருக்கு. .

மாளவிகா மோகனன்

20260120154004593.jpg

மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்த லோகா படம் வெற்றி பெற்றது. அதேபோல் தன்னையும் கதையின் நாயகியாக வைத்து படத்தை இயக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்கிறார் மாளவிகா மோகன்.

கமல் -ரஜினி

கமல் ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை முதலில் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது ரெட் ஜெயன்ட் இன்பநிதி தயாரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால், இது அடுத்த ஆண்டு தான் படப்பிடிப்பு தூவங்குமாம்.

அதிதி ஷங்கர்

20260120160151435.jpg

காதலர் தினத்தன்று நடிகை அதிதி ஷங்கர் கவர்ச்சி உடையில் போட்டோ ஷுட் எடுத்து"அன்பானவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் தற்சமயம் வைரலாகி கொண்டு இருக்கிறது.

குஷ்பூ மகள்

குஷ்பூ மகள் அவந்திகா மலையாள சினிமாவில் 'ஆரம்பம் 'படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவருக்கு அம்மாவாக நடிகை சரிதா நடிக்கிறார்.

ராஷ்மிகா

2026012015464169.jpg

ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா திருமணம் உதய்ப்பூர் அரண்மனையில் பிப்ரவரி 26ல் நடக்கும். ஹைதராபாத்தில் மார்ச் நான்காம் தேதி திருமண வரவேற்பு. இந்த நிகழ்ச்சிக்கான ஓடிபி உரிமையை 60 கோடி தருவதாக கேட்டும் இது எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட நிகழ்ச்சி என்று மறுத்து விட்டார்கள் இந்த காதலர்கள

பாக்கெட் நாவல்

விஜய் சேதுபதி மாளவிகா மோகனன் நடிக்கும் படத்திற்கு 'பாக்கெட் நாவல்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அனுபமா பரமேஸ்வரன்

20260120160608305.jpg

கடந்த மாதம் வெளியான லாக்டவுன் படம் குறித்து அந்தப் படத்தில் நாயகியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் தனது சமூக வலைதளத்தில் அந்த படத்தை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதேபோல் ஆண்ட்ரியா நடித்த 'கா ' படம் பற்றியும் அவர் பேசவில்லை ? இப்போது இவை இரண்டுமே சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. இனிமேல் படத்தின் பிரமோஷனுக்கு நடிகர் நடிகைகள் கண்டிப்பாக வரவேண்டும் என்று ஒப்பந்தத்தில் நிபந்தனையாக சேர்ப்பது பற்றி தயாரிப்பாளர்கள் யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

அமலா பால்

அமலா பால் காதலர் தினத்தன்று புது கணவர் ஜெகன் தேசாய் உடன் நடுக்கடலில் செம ஜாலியாக கொண்டாடி இருக்கிறார். கணவருக்கு லிப்லாக் கிஸ் சரக்கு என்று அவர்கள் கொண்டாட்டத்தை வீடியோ எடுத்து பதிவு செய்திருக்கிறார் நடிகை.

திரிஷா

20260120151806886.jpg

நடிகை திரிஷா காதலர் தினத்தன்று நாய்க்குட்டிகள் படத்தை போட்டு எல்லாமே என்னுடைய தான் என்று சொல்லி காதலர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

யாஷிகா ஆனந்த்

20260120155510256.jpg

"பத்து வயதில் நான் உறவினர், அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் நடனம் ஆடுவேன். என் நடனத்தை பாராட்டி எனக்கு 100 ரூபாய் தருவார்கள். 100 ரூபாய்க்கு நடனமாடிய நிலையும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது "என்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

டாப்ஸி

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை டாப்ஸியிடம் உங்களுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவர் சிரித்துக் கொண்டே கையெடுத்து கும்பிட்டு நான் இந்தியாவில் வாழ நினைக்கிறேன் என்று பதில் சொல்லி இருக்கிறார்.

ரஜினி

கமல், ரஜினி இணைந்து நடிக்கும் படத்தில் ரஜினிக்கு சம்பளம் 225 கோடியாம்

ருக்மணி வசந்த்

2026012015270523.jpg

துருவ் விக்ரம் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் ருக்மணி வசந்த்.

மிருணாள் தாகூர்

20260120153052602.jpg

"கிசுகிசுக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..ரூபாய் 10 கோடி செலவு செய்திருந்தால் கூட இப்படிப்பட்ட விளம்பரம் எனக்கு கிடைத்திருக்காது. ஆனால் இல்லாததை எல்லாம் இருப்பதைப் போல் பேசி என்னை பெரிய ஆளாக்கி விட்டார்கள் "என்கிறார் நடிகை மருணாள் தாகூர்.