தொடர்கள்
விகடகவியார்
போனால் போகட்டும் -ஸ்டாலின் முடிவு-விகடகவியார்

20260120194130109.jpeg

ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் காங்கிரஸில் ஒரு கோஷ்டி தொடர்ந்து பேசி வருவதை திமுக தலைவர் ஸ்டாலின் ரசிக்கவில்லை.

கனிமொழி மூலம் ராகுல் காந்திக்கு அவர் சொன்ன தகவல் இதுதான். ஆட்சியில் பங்கு என்ற பேச்சே கூடாது.

மாணிக் தாக்கூர்,பிரவீன் சக்கரவர்த்தி ஆகிய இருவரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

கொடுக்கிற தொகுதியை வாங்கிக் கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் சம்மதித்தால் கூட்டணியில் தொடரலாம்.

அப்படி இல்லை என்றால் தாராளமாக வெளியேறலாம் என்று கறராக கனிமொழி மூலம் ராகுல் காந்திக்கு சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

20260120194202548.jpeg

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திமுக தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று சொன்னதையும் தொடர்ந்து செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியில் என்னென்ன சலுகைகள் பெற்றார்கள்.

காண்ட்ராக்ட் மற்றும் இதர விஷயங்களில் அவர்கள் எத்தனை கோடிகள் சம்பாதித்தார்கள் என்ற பட்டியலையும் ராகுல் காந்தியிடம் தந்திருக்கிறது திமுக.

முதலமைச்சர் ஸ்டாலின் ராகுல் காந்தியின் தூண்டுதல் பெயரில் தான் ஆட்சியில் பங்கு அதிக தொகுதி என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறார்.

மூத்த அமைச்சர்கள் காங்கிரஸ் நமக்கு எப்போதும் சுமை தான் அவர்களை கழட்டி விடுங்கள் என்று திமுக தலைவருக்கு அழுத்தம் தர தொடங்கினார்கள் அதனால் தான் இந்த முடிவு எடுத்தார் ஸ்டாலின்.

20260120194233194.jpeg

திமுக காங்கிரஸ் உறவில் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் பா. சிதம்பரம், சோனியா காந்தி, கார்கே இருவரையும் சந்தித்தார்.

திமுக கூட்டணி விட்டு வெளியேறினால் என்ன நடக்கும்.

திமுக கூட்டணியில் தொடர்ந்து நாம் இருந்தால் எவ்வளவு நல்லது என்பதை தெளிவுபட சொன்னார்.

தமிழக வெற்றி கழகத்துடன் நாம் கூட்டணி வைப்பதன் மூலம் திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிப்போம்.

இதன் மூலம் மறைமுகமாக தமிழ்நாட்டில் பாஜக வலுவாக இருப்பதற்கான உதவியை நாமே செய்வது போல் ஆகிவிடும் என்று எச்சரித்து இருக்கிறார் பா.சிதம்பரம்.

பா சிதம்பரம் ராகுல் காந்தியை சந்திக்க வில்லை. காரணம் அவர் திமுக கூட்டணி விரும்பவில்லை என்பது அவருக்கு தெரியும்.

ராகுல் காந்தி சோனியா காந்தியின் நிழலாக கருதப்படும் கே.சி.வேணுகோபால் சென்னை வந்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது கூட்டணி பற்றி யாரும் கருத்து சொல்லக்கூடாது. அதையும் மீறி யாராவது கருத்து சொன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

திமுகவுடன் தான் கூட்டணி என்றும் தெரிவித்தார்.

இனிமேல் பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்து இருக்கிறார்கள் தவிர பேசியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை திமுக உன்னிப்பாக கவனிக்கிறது.

கே.சி.வேணுகோபால் திமுக தலைவரை சந்திக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

22 ஆம் தேதி கூட்டணிக் கட்சிகளை தொகுதி பங்கீடு பற்றி பேச அழைக்க இருக்கிறது திமுக.

20260120194318708.jpeg

அப்போது காங்கிரஸுக்கு அழைப்பு உண்டா இல்லையா என்ற கிளைமாக்ஸ் உடையும்.