தொடர்கள்
follow-up
எழுதிக் கிழித்தவை

2026012106534155.jpeg

மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்.

எழுதிக் கிழித்தவை.

சென்ற வாரத்துடன் முடிவடைந்தது.

இது ஒரு சாதாரண கட்டுரை தொடர் அல்ல.

பத்திரிகையாளராக பணியாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அனுபவ பாடம்.

தன்மை ஒருமையிலேயே எழுதலாமே என்று கேட்ட போது மூத்த பத்திரிகையாளர் நடராஜன் அவர்கள், வேண்டாமே அது ஒரு தற்புகழ்ச்சி கட்டுரை போல எனக்கு தோன்றுகிறது அதனால் அதை மூன்றாம் நபர் பார்வையிலேயே எழுதுகிறேன். அவன், அவனுடைய அனுபவம் என்றே எழுதுகிறேன் என்றார்.

அவர் போல இரு மொழிகளில் ஆளுமை கொண்ட பத்திரிகையாளர்கள் இன்று அபூர்வம். ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கோணத்தில் ஒரு பத்திரிகையாளனாக எப்படி வாழ வேண்டும், அணுக வேண்டும், சிந்திக்க வேண்டும், தேடல் இருக்க வேண்டும் என்று வாசகர்களுக்கு கடத்தியது ஆகச் சிறப்பு.

தொடரைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.

இது போன்ற ஆளுமைகளின் கட்டுரைகளை விகடகவி ஆர்வத்தோடு வெளியிட காத்திருக்கிறது......