
காங்கிரசை திமுகவே தோற்கடித்து விடும் அன்புமணி ஆருடம்.
சின்னையாவை,பெரிய ஐயா தோற்கடித்து விடுவார் என்று கூட பேசுகிறார்கள் !!
காங்கிரசின் கே.சி.வேணுகோபால் ரவுடியை போன்றவர் மணிசங்கர் ஐயர் கடும் தாக்கு.
அதாவது அவர் அரசியலில் இருக்காராம் !!
மகளிர்க்கு மகிழ்ச்சி, முடக்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி உதயநிதி ஸ்டாலின்.
வாஸ்தவம் தான் அவங்களுக்கு கொஞ்சம் உஷார் பத்தாது !!
காங்கிரஸில் பாஜகவின் கைக்கூலிகள் கோ பண்ணா பேட்டி.
அப்ப அந்தக் கட்சியும் பிஜேபியின் பீடீம் தானா !!
ரூபாய் 5000 வெற்றியை உறுதி செய்யும் என்பது மூடநம்பிக்கை பிரவீன் சக்கரவர்த்தி கருத்து.
நீங்க கூட தான் ஏதோ தமிழகத்தில் காங்கிரஸ் பலமா இருக்கிற மாதிரி ஆட்சியில் பங்கு கேட்குறீங்க அதுவும் மூட நம்பிக்கை தானே !!
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு கிடையாது ஆர்.எஸ்.பாரதி.
பாவம் நீங்க? கதர் சட்டை காரங்க உங்களை திரும்பத் திரும்ப சொல்ல வச்சிட்டாங்க !!
கூட்டணி முரண்பாடுகளை பேசி தீர்க்கலாம் திருமாவளவன்.
அதுக்கு அவங்க முதல்ல கூப்படணுமே !!
கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடப்பாடி வற்புறுத்தல்.
ஆமா தேர்தல் தேதி நெருங்குது மக்களுக்கு நாம் ஏதாவது பேசி ஆகணும்.
எந்த அரசியல் கட்சியுடன் எனக்கு தொடர்பு இல்லை நயினார் நாகேந்திரனுக்கு த்ரிஷா கடும் கண்டனம்.
ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புன்னு சொன்ன மாதிரி தெரியலையே !!
விஜய் தற்சமயம் தமிழக வெற்றி கழகம் என்ற படத்தில் நடித்து வருகிறார் அர்ஜுன் சம்பத் தகவல்.
இந்த படமாவது சென்சார் பிரச்சினை இல்லாமல் வெளியாகுமா !!
திமுக கூட்டணி பாதிக்கும் வகையில் விடுதலை சிறுத்தை கட்சிகள் எந்த முடிவும் எடுக்காது திருமாவளவன்.
ஆமா எங்களுக்கு வேற வழியில்லை !!
அதிமுகவுடன் கூட்டணி வைத்தது என் வாழ்வில் மன்னிக்க முடியாத பிழை வைகோ பேச்சு.
திமுகவை விமர்சனம் செய்து கட்சி ஆரம்பித்தது, இப்போது அந்த கட்சியுடன் கூட்டணி என்பதெல்லாம் பிழை கணக்கில் வராது அப்படித்தானே போர்வாள் !!
சேலத்தில் இறந்தவர் குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்து ஸ்டார் ஹோட்டலில் விஜய் ஆறுதல் கூறணும் திண்டுக்கல் சீனிவாசன் யோசனை.
அட இது நல்ல யோசனையா இருக்கே !!
அன்புமணி ஒழுக்கமானவர் சௌமியா அன்புமணி சான்றிதழ்.
இத உங்க மாமனார் சொல்வாரா !!

Leave a comment
Upload