நம்ம ஊர் கல்யாணங்கள்ள இப்ப செண்டைமேளம் வைக்கிறது பரவலான ஃபேஷன் ஆயிடுச்சுஇல்ல…. இப்பக்கூட எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கல்யாண மண்டபத்துலசெண்டை மேளச்சத்தம் கேக்குது…..ஆயிரந்தான் சொன்னாலும், நிறைய புதுவிஷயங்களோட, பாரம்பரிய முறைல நல்லபடியா கல்யாணம் முடிஞ்சா ஏற்படற மனநிறைவுஇருக்குது பாருங்கப்பூ….அது ரொம்ப பெரிசு…. சரி, வாங்க…இந்த வாரத் தலைப்புக்குள்ளபோகலாம்…
இருக்கிறவங்களை அப்படியே ஏத்துக்கணும்ன்ற மைண்ட்செட் இருந்தா கல்யாண வாழ்க்கைநல்லா இருக்கும்னு சொல்லுவாங்க….அது ரொம்பவும் சரி…..எந்தச் சந்தேகமும் இல்லை…கடைல பொடவத்துணி வாங்கும்போது ஏதாவது டேமேஜ் இருக்குதான்னு செக் பண்ணிவாங்கறது உலக வழக்கம்.…அப்ப நேரம் இல்லன்னாலும், வீட்டுக்குப் போயிபாத்துட்டு..ஏதாவது கொறை இருந்தா திரும்பக் கொடுத்து மாத்திக்க முடியும். ஆனா, கல்யாணவாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொண்ணையோ அல்லது மாப்பிள்ளையையோ பத்திமுடிவெடுக்கும்போது மனசுல குழப்பம் இருந்தா அதை நிதானமா யோசிச்சுப்பாக்கணும்….தெளிவு வந்தா அந்த சம்பந்தத்தைத் தொடர்ந்து செய்யலாம்…கொழப்பமாவேஇருந்தா விட்டுடணும்….அதுதான் நல்லது…கடைசி வரைக்கும் முன்னயும் பின்னயும்பெண்டுலம் மாதிரி யோசிச்சிட்டே இருக்கிறது ரொம்பவும் ஆபத்தானது.
இப்ப நிறைய இடங்கள்ள நிச்சயம் வரைக்கும் போகற கல்யாணம் நின்னு போறதுசகஜமாயிடுச்சு….சில கேஸ்ல நிச்சயம் முடிஞ்சி கல்யாணத்துக்கு ஒரு வாரம்இருக்கும்போதுகூட நின்னுபோகுது….
சரியான பின்புலம் இருக்கும்போது, இது தப்பில்ல… கல்யாணம் முடிஞ்சு டைவர்ஸ்வாங்கறதவிட கல்யாணம் நடக்காம இருக்கிறது உத்தமம். ஆனா, இதுக்கான காரணம்என்னன்றதுதான் கேள்விக்குறி.
சமீபத்துல இது போல நடக்காம நின்னு போன மூணு கல்யாணத்துலயும், கல்யாணத்தைநிறுத்தி இருக்கிறது பெண்கள்…மூணும் மூணு காரணம்.
ஏன்..? பொண்ணுங்கன்னா கல்யாணத்த நிறுத்தக்கூடாதா…? பசங்கதான் நிறுத்தணும்னுஏதாவது சட்டமான்னு அவசரமா கேக்கவேணாம்….சரியான காரணம் இருந்தா யார்வேணாலும் நிறுத்தலாம். தப்பே இல்ல…. இந்த மூணு கல்யாணத்துலயுமே பெண்கள்…அவ்ளோதான்…. சரி,வாங்க…காரணத்தப் பாக்கலாம்….
முதல் கல்யாணம் நின்னதுக்குக் காரணம்… மாப்பிள்ள பிடிக்கலன்றது…..இது அந்தப்பெண்ணோட தனிப்பட்ட உரிமை…அதுல எந்த சந்தேகமும் இல்ல….முன்ன காலம் மாதிரிசொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம…, பிடிக்காம கட்டிக்கிட்டு வாழவேண்டிய அவசியம்இல்ல…., இதுல என்ன பிரச்சினை என்னன்னா…, முதல்ல இவங்க வீட்டுக்கு வந்து பொண்ணுபாத்து, அந்தப் பையனுக்கு இந்தப் பொண்ணப் பிடிச்சுபோயி, நிச்சயதார்த்தம் முடிஞ்சு , அவங்க ஊர் முழுசும் பத்திரிக்கை குடுத்து எல்லாம் முடிஞ்சபின்னாடி திடீர்னு பொண்ணுவீட்டுல, “பொண்ணுக்கு மாப்பிள்ளையப் பிடிக்கலயாம்” ன்னு சொன்னதும், இவங்க ரொம்பஇடிஞ்சு போயிட்டாங்க…காரணம் அந்தப் பொண்ணுக்கு காதல் ஒண்ணு இருக்குதுன்னுதெரிஞ்சும், கட்டாயப்படுத்தி இந்தப் பையனோட நிச்சயம் செஞ்சதுதான். இது சினிமாஇல்லையே….நிஜவாழ்க்கை இல்லையா..?
அந்தப் பொண்ணு இந்தப் பையனைப் பிடிக்கலன்னு சொன்னா,,,ஏன் வலுக்கட்டாயமாஅதையே செய்யக்கட்டாயப்படுத்தணும்…? இப்பக் கல்யாணம் நின்னுபோனதுல நஷ்டம்அந்த அப்பாவிப் பையனுக்குத்தான்…. ஏற்கனவே காதல்வசப்பட்டு முடிவுல மாறாமஇருக்கிறவங்களக் கட்டாயப்படுத்தி… சம்பந்தமே இல்லாத இன்னொரு பையனோட அல்லதுபெண்ணோட வாழ்க்கையையும் அவங்க உணர்வுகளையும் புண்படுத்தறதுல அர்த்தமேஇல்ல…
அடுத்த கேஸ்ல…பையனுக்கு வசதி பத்தலன்னு சொல்லி ரெண்டு வாரம் இருக்கும்போதுகல்யாணத்த நிறுத்திட்டாங்க…இதுல, முக்கியமான விஷயம் என்னன்னா, நிச்சயத்துக்குமுன்னாடியே அந்தப் பொண்ணு போட்ட எல்லா கண்டிஷனுக்கும் ஒத்துக்கிட்டுத்தான்செஞ்சிருக்காங்க…அதுல முதல் கண்டிஷன், லிஃப்ட் இருக்கிற வீடா இருக்கணும்…வேலைபாக்கற இடத்துக்குப் பக்கத்துலயே வீடு இருக்கணும்…கல்யாணத்துக்குப் பின்னாடி என்னை எதுவும் கேள்வி கேக்கக்கூடாது….அம்மா பக்கத்துலயே இருப்பாங்க…இன்னும் இத்யாதிவிஷயங்கள்….
இது எல்லாத்துக்கும் ஒத்துகிட்டு….இருந்த வீட்டக் காலி செஞ்சு, இன்னும் கொஞ்சம் அதிகவாடகைக்கு வசதியான வீடாப் பாத்து, சொன்னபடியே எல்லாம் செய்து, நிச்சயமும்முடிஞ்சிச்சு, நிச்சயதார்த்த ஆல்பத்தோட ஒரு காப்பிய அவங்களுக்குக் கொடுத்து, இத்தனையும் செஞ்ச பின்னாடி, இன்னும் முடிவுக்கு வரமுடியலன்னு சொல்லி கல்யாணத்தநிறுத்திட்டாங்க…. சம்பந்தப்பட்ட அந்தப் பொண்ணு ஒரு சரியான முடிவுக்கு வரமுடியாமயே எதுக்கு ஆயிரத்தெட்டு கண்டிஷன்…?
இருக்கிற வசதி இதுதான்னு தெரியும்போது, அது பத்தலன்னு தோணிச்சுன்னா ப்ரொசீட்பண்ணக்கூடாது…ஏன்னா, இப்ப சகிப்புத்தன்மை ரொம்ப கொறஞ்சு போச்சு….தினம் தினம்பிரச்சினை வரும்னு தோணுச்சுனா முதல்லயே அதை விட்டுடணும்….தும்ப விட்டு வாலைப்பிடிக்கிற மாதிரி….பின்னாடி ஞானம் வந்து கல்யாணத்த நிறுத்தவேணாமே…வாழ்க்கைலதத்துவ உபதேசம் செஞ்சு கன்வின்ஸ் செஞ்சு கல்யாணம் பண்றதவிட, வேற மாப்பிள்ளபாக்கறது ரெண்டு குடும்பத்துக்கும் நல்லது.
மூணாவது கேஸ்ல, பொண்ணே இல்லாத வீட்டுல….ரொம்ப ஆசையா தனக்கு வரப்போற மருமகளுக்குன்னு நிறைய நகைநட்டு வாங்கிவச்சிட்டு, தான் இருக்கிறதோடநல்லபொண்ணாப் பாத்து பையனுக்கு கல்யாணம் செஞ்சிட்டாப்போதும்னு, பொண்ணப்பாத்து, நிச்சயம் முடிஞ்சு, கல்யாணத்தோட ஒவ்வொரு நிகழ்வுக்கும்புடவையெல்லாம் வாங்கிட்டு ரொம்ப ஆசையா இருந்தபோது, ஒரு வாரத்துக்கு முன்னகல்யாணத்தை நிறுத்திட்டாங்க…இந்த முறை காரணம், மாமனாருக்கு உடம்பு சரியில்ல,,,யார்உக்காந்து பணிவிடை செய்யறதுன்னு…. ஏம்மா…இதுதான் பொண்ணு பாக்கறப்பவே தெரியுமே…அப்றம் எதுக்கு இவ்வளவு தூரம் வரணும்னு கேட்டா,….அப்பத் தோணல,..இப்பத்தோணுதுன்னு சொல்றாங்க….
இதல்லாம் ஒரு காரணமா..? யாரைக் கல்யாணம் செஞ்சிக்கணும்னு நினைக்கிறதுஅவங்கவங்க தனிப்பட்ட விஷயம் …அதுல எந்த சந்தேகமும் இல்ல….ஆனா, குழப்பமானமுடிவுகளால, அந்த உரிமை மத்தவங்கள பாதிக்கக்கூடாது…. எந்தவிதமான வசதிக்குறைவும்இருக்கவேகூடாதுன்னா…. கல்யாணமே வேணான்னு இருந்துடலாம்….அதைவிட்டு, சகட்டு மேனிக்கு அடுத்தவங்கள காயப்படுத்தக்கூடாது…. வாழற வீட்டுல எல்லாரும் தெம்பும்திடமுமா இருக்காங்களான்றத போகும்போதே பாத்துடலாம்…
உடம்பு சரியில்லாதவங்கன்றது தெரிஞ்சும் அந்த நேரம் சரின்னு சொன்னதுக்கு “அடஇந்த உடம்போட எவ்ளோ நாள் இருந்துடப்போறாங்க..பாத்துக்கலாம்…?” ன்ற நினைப்பும்ஒரு காரணம்….பின்னாடி அதுல குழப்பம் வரும்போது, கல்யாணம் நின்னுபோகுது.…
கல்யாணம் சின்னப்பிள்ளைங்க விளையாட்டு இல்ல…இந்த மாதிரி தெளிவில்லாதமுடிவுகளால, ஏற்படக்கூடிய பாதிப்புகள் ரொம்ப அதிகம்…
காலசக்கரம் சுத்திட்டே இருக்குது….உண்மைதான், ஒரு காலத்துல பொண்ணுங்களுக்குகல்யாணம் செய்யறது குதிரக்கொம்பா இருந்துச்சு…சந்தையில மாடைப் பாக்கற மாதிரி வந்துஸ்வீட் காரம் காபிய ஓசில முடிச்சிட்டு, டைம் பாஸ் பண்ணிட்டு போனது ஒருகாலம்….வரதட்சணைன்ற பேருல கல்யாணம் பண்ற பொண்ணுக்கு காலத்துக்கும் சோறுபோடறதுக்கு மொத்தமா ஒரு அமௌண்ட் வாங்கினது….அப்படி வராதபோது பம்பிங் ஸ்டவ்…கேஸ் ஸ்டவ்…இதெல்லாம் அப்பப்ப வெடிச்சது….இதெல்லாம் வழக்கமா நடந்துச்சு…கொடுமைன்றதே வாழ்க்கையா இருந்த காலம் ஒண்ணு உண்டு…இப்ப அது கொஞ்சம் மாறிஇருக்குது….அதுக்குக் காரணம் இப்ப இருக்கிற யங்ஸ்டர்ஸ் வாழ்க்கையப் பாக்கறஅணுகுமுறை நிச்சயமா மாறி இருக்குது…
அதே நேரம், இப்ப கல்யாண ட்ரெண்ட் மாறிடுச்சு….கல்யாணம் பண்ண ஒரு நல்லபொண்ணு கிடச்சா போதுன்ற நிலமை….இப்ப கண்டிஷன் போடற இடத்துல பொண்ணுங்கஇருக்காங்க….
ஆனா, வாழ்க்கைக்கு எது நல்லது கெட்டதுன்றத கொழப்பமில்லாம யோசிக்கிறது ரொம்பமுக்கியம்….ஒருத்தர ஒருத்தர் பழி வாங்கறதுக்காக கல்யாணம் செய்யறதில்ல…புரிஞ்சிட்டுவாழறதுக்குத்தான்…அப்படியிருக்க, முதல் கோணல் முற்றும் கோணல்னு ஆரம்பத்திலயே, பிரச்சினையோட ஆரம்பிக்ககூடாது….
பிடிக்கிது…பிடிக்கல….வேணும்..வேணான்றத, ரெண்டு வீட்டுலயும் அதிகபட்ச எதிர்பார்ப்புகள்வளர்றதுக்கு முன்னாடியே முடிவெடுத்துடறதுதான் நல்லது….தேவையில்லாத ஆசைகளையும்கனவுகளையும் வளர்த்துக்ககாரணமாயிட்டு பிறகு அதைக் கலைக்கவேணாமே.
“என் வாழ்க்கை…என் உரிமை…” ன்னு சொல்றவங்க எல்லாரும் அது ஆணோபொண்ணோ…உங்க தனிப்பட்ட உரிமை அடுத்தவங்கள பாதிக்காம இருக்குதான்னுபாத்துக்கிட்டா போதும்… சரிதானேப்பூ….
அடுத்த பகுதில பாக்கலாம்….
Leave a comment
Upload