திமுகவின் முப்பெரும் விழா விருதுநகரில் நடந்தது அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பாராளுமன்றத் தேர்தலுக்கு தொண்டர்கள் தயாராக இருக்கச் சொல்லி அறிவுறுத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறது நமது கூட்டணியில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும். பாராளுமன்றத்தில் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக நமது இயக்கம் இருக்கிறது நாம் அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் என்று தொண்டர்களை பாராளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயார் படித்திருக்கிறார். அதேசமயம் கட்சித் தேர்தலில் ஏற்கனவே கட்சிப் பொறுப்பில் இருப்போருக்கு நிறைய எதிர்ப்பு இருந்தாலும் அவர்களே தக்கவைத்துக் கொள்ள கட்சியில் மூத்த தலைவர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆனால் சபரீசன் சமீபத்தில் ஆய்வு நடத்தி இப்போது கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் வைத்துக்கொண்டு பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது மிகவும் சவாலாக இருக்கும் எனவே கட்சியில் களை எடுப்பது அவசர அவசியம் என்று மருமகன் மாமனாருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார் என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்.
காலை உணவு ஓகே ஆனால்
அண்ணா பிறந்தநாள் அன்று மதுரையில் 1ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1545 அரசுப் பள்ளிகள் பலன் பெறும் இந்த திட்டத்தை பாராட்டி பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் திமுக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். காலை நேரத்தில் உணவு அருந்தாமல் வரும் சிறுவர்கள் மதிய உணவு வரை காத்திருக்க தேவையில்லை இது ஒரு நல்ல விஷயம் என்று பெற்றோர்களும் வரவேற்றிருக்கிறார்கள். அதேசமயம் சத்துணவு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது பசி என்பது வயது பார்க்காது சிறார்களுக்கு வரும் பசி ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் தானே அவர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற பேச்சு இப்போதே வரத் தொடங்கிவிட்டது. காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் இடைநிற்றல் குறையும் என்று நம்புகிறது கல்வித்துறை.
இளையராஜா மிஸ்ஸிங்
இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதிய புத்தகம் மோடியும் அம்பேத்கரும் இந்தப் புத்தகம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த புத்தகத்தை வெளியிட்டார் இந்த விழாவில் இளையராஜாவும் கலந்துகொள்வார் என்று அழைப்பிதழில் அவரது பெயர் இருந்தது, ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. மோடியும் அம்பேத்கரும் புத்தகத்துக்கு இளையராஜா முன்னுரை எழுதிய போது அம்பேத்கருடன் மோடியை எப்படி ஒப்பிட முடியும் இளையராஜா முன்னுரை தரலாமா என்ற சர்ச்சை எழுந்தது. அப்போது அம்பேத்கரைப் போல் மோடியும் கூட தலித் மக்களுக்காக சலுகைகளை வாரி வழங்குகிறார் இளையராஜா முன்னுரை எழுதியது சரிதான் என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வந்தது ஆனால் வழக்கப்படி இளையராஜா எதுவுமே சொல்லவில்லை பிறகு குடியரசுத்தலைவர் இளையராஜாவை ராஜ்யசபா எம்பியாக நியமனம் செய்தார். இப்போதுகூட புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி இளையராஜா எதுவும் சொல்லவில்லை அவர் சார்பாக சிலர் அவர் இசையமைப்பு பணியில் பிஸியாக இருப்பதால் அந்த நிகழ்ச்சிக்கு போக முடியவில்லை என்று வக்காலத்து வாங்குகிறார்கள் அவ்வளவுதான்.
தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கார் பெயர்
தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்திருக்கிறார். தெலுங்கானா தலைமைச் செயலாளர் அரசு ஆணை மூலம் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். 500 கோடி செலவில் 2020இல் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது.அதேசமயம் தெலுங்கானா முதல்வர் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் வைத்ததற்கு அரசியல் தான் காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை இதன் மூலம்தலித் வாக்கு வங்கி கவரலாம் என்று அவர் திட்டமிடுகிறார் என்று அரசியல் விமர்சகர் கருத்து சொல்கிறார்கள் மற்றபடி தலித் சமுதாயத்திற்கு சந்திரசேகர் ராவின் தெலுங்கானா அரசு குறிப்பிட்டு சொல்லும்படி பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்,பாரதிய ஜனதா நாங்கள் வெற்றி பெற்றால் தலித் ஒருவரை முதல்வர் ஆக்குவோம் என்று சொன்னீர்களே அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று நக்கல் அடிக்கிறார்கள்.
பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அமரிந்தர் சிங் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பஞ்சாபில் லோக் என்ற புதிய கட்சியை தொடங்கினார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலில்பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்து படு தோல்வியை தழுவினார். அதைத்தொடர்ந்து மூத்த தலைவர்கள் கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைப்போம் என்று யோசனை சொன்னார்கள், ஆனால் அமரிந்தர் சிங்அந்த யோசனையை ஏற்கவில்லை உடனே மூத்த கட்சியை விட்டு விலகிபாரதிய ஜனதாவில் இணைந்தார்கள். இப்போது அமரிந்தர் சிங் கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைக்க முடிவு செய்துவிட்டார் இந்த மாதம் 19ஆம் தேதி அந்த சம்பவம் நடக்கிறது.
Leave a comment
Upload