தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

2022081620010063.jpeg

ராகுல் நடைப்பயணத்தால் பாரதிய ஜனதாவின் வீழ்ச்சி தொடங்கி விட்டது- கே.எஸ்.அழகிரி.

கோவாவில் முன்னாள் முதலமைச்சர் உள்பட 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதாவில் இணைந்தனர், அப்போ இதுக்கு என்ன அர்த்தம்.

பெங்களூரில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படும் வருவாய்த்துறை அமைச்சர் எச்சரிக்கை.

அதான் வெள்ளம் வந்து எச்சரிக்கை பண்ணிட்டு போயிடுச்சே

எதிர்காலத்தில் சுங்கச்சாவடிகள் இருக்கவே இருக்காது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

ஆனால் சுங்க கட்டணம் இருக்கும் அப்படித்தானே அமைச்சர்

370வது பிரிவை மீட்பேன் என்று பொய்யான வாக்குறுதி தர விரும்பவில்லை குலாம் நபி ஆசாத்

உண்மையை சொல்லிட்டாரு

தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமை இல்லை சட்ட உரிமையும் இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அதாவது கட்சித் தலைமை பார்த்து செஞ்சாதான் உண்டு என்று ஜட்ஜ் அய்யா சொல்றாரு

ராகுல்காந்தி நடைபயணத்தில் குழந்தைகள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு

குழந்தை என்று மத்திய அமைச்சர் ராகுல் காந்தியை தான் சொல்ற போல

அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டு பயப்பட மாட்டோம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

அப்புறம் எதுக்கு அத்தனை பேர் கூடி ஒழிக கோஷம் எல்லாம் போட்டீங்க

283 கட்சிகள் செயல்படாதவை தேர்தல் ஆணையம்

அவங்க கூட்டணிக் கட்சிகளை சொல்லல தலைவரே நீங்க வேற

அமைச்சர்கள் 5000 கோடி வசூல் முதல்வர் குடும்பத்தின் மீது மாஜி அமைச்சர் வேலுமணி பகிர்

பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கார் இல்ல

ஒரே அணியில் ஜனதா கட்சிகள் நிதிஷ்குமார்

பீகார் முதலமைச்சருக்கு அரசு வேலைகள் ஒன்று இல்லை போல இருக்கு அரசியல் வேலைதான் ஓவரா போய்கிட்டே இருக்கு

திருடர்கள் தலைவன் நான் பீகார் அமைச்சரின் பகீர் பேச்சு

இப்படி ஓப்பனா உண்மையை சொல்றாரு