இளையராஜா

பாக்கியராஜ் கடைசியாக நடித்த படம் 'கன்னடத்துப் பைங்கிளி ' இந்தப் படத்துக்கு இசை டி.ராஜேந்தர். டி.ராஜேந்தர் இசையில் முதல் முறையாக இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் இளையராஜா.
சமந்தா
முதன்முறையாக தாயாக போகும் நடிகை சமந்தா தனது கர்ப்ப காலப் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்தது அந்தப் புகைப்படங்களையும் தற்சமயம் பகிர்ந்திருக்கிறார் நடிகை.
ராகுல் ப்ரீத் சிங்
தென்னிந்தியத் திரைப்படங்கள் மற்றும் பாலிவுட் என்று எல்லா படங்களின் நடிக்கும் பிரபல நடிகை ராகுல் ப்ரீத் ராமாயணம் படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடித்து வருகிறார் ."நான் இதுவரை மனதை தொடும் காதல் கதைகளில் நடித்ததில்லை. உணர்ச்சிப்பூர்வமான காதல் காட்சிகளில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் நடிகை.
நிமிஷா சஜயன்

"தமிழில் நிறைய படங்கள் வருகின்றன. ஆனால் நல்ல கதைகள் கதாப்பாத்திரங்களை மட்டுமே நான் தேர்வு செய்து நடிக்கிறேன் "என்கிறார் நடிகை நிமிஷா சஜயன்.
மூக்குத்தி அம்மன் 2

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முன்னோட்டம் "மகாசக்தியின் எழுச்சி என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் தீபாவளி வெளியீடு.
ஐஸ்வர்யா லட்சுமி

"என் உடையை பற்றி இத்தனை தீவிரமாக விவாதிக்கும் இந்த சமூகத்தின் போக்கு என்னை உலுக்கி விட்டது. பெண்ணின் ஆடை மட்டுமே விவாத பொருளாக மாறுவது ஏன்? இந்தப் போக்கு மாறாதா ..." என்று கேட்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா அணிந்திருந்த உடை பற்றி பலரும் விமர்சனம் செய்தனர். அதற்கு தான் இந்த பதில்.
டாப்ஸி
திருமணத்துக்குப் பிறகும் பல படங்களில் நடித்து வரும் நடிகை டாப்ஸி சமீபத்தில் தன் கணவருடன் செயின்ட் ஆன் தீவுக்கு சுற்றுலா போய் இருக்கிறார். அங்கு கணவருடன் மகிழ்ச்சியாக பொழுது போக்கிய டாப்ஸி மரம் ஒன்றில் ஏற முயல்வதையும் அதற்கு அவர் கணவர் உதவி செய்யும் ஒரு குறும்பான காணொளி ஒன்றை வெளியிட்டு எல்லோர் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா
பாரத் ரத்னா இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மையமாகக் கொண்டு ஒரு வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார்.
ரியா ஷிபு

விக்ரம் நடிக்கும் 63-வது படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா ஷிபு நடிக்கிறார். மலையாளத்தில் சர்வம் மாயா திரைப்படத்தின் மூலம் எல்லோர் கவனத்தையும் ஈர்த்த நடிகை இவர்.
ஆலியா பட்

"கையில் செல்போன் இருந்தால் பிரம்மாக்கள் என்ற சிலர் நினைத்து விடுகிறார்கள். திரைப்பிரபலங்களை குறிப்பாக நடிகைகள் பற்றி அவதூறாக பேசி ஆனந்தம் கொள்கிறார்கள். இதெல்லாம் எவ்வளவு அபத்தமான விஷயம் என்று தெரியவில்லையா? " என்று கேட்கிறார் நடிகை ஆலியா பட்.
தீபாவளி ரிலீஸ்
இந்த தீபாவளிக்கு நயன்தாரா, பிரபுதேவா, சூர்யா ஆகியோர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகிறது. இந்த நேரடி போட்டி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

Leave a comment
Upload