
மீஞ்சூர் அருகே குடோனில் இருந்து கடத்த முயன்ற பத்தாயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
யாரோ கில்லாடி !ரேஷன் கடையையே கடத்திருக்கிறார் ?
ஜமீன்களிலும் பண்ணைகளிலும் இருந்த அரசியலை பாமரிடம் கொண்டு சேர்த்தது திமுக உதயநிதி ஸ்டாலின்.
கொண்டு சேர்த்து நீங்க ஜமீன் பண்ணைகளா மாறிட்டீங்க !!
தமிழக வெற்றி கழகத்திற்கு ஏன்டா வாக்களித்தோம்? என்று மக்கள் குமுறுகின்றனர்.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
இது ஏதோ மக்கள் குமுறல் மாதிரி தெரியவில்லை உங்கள் புலம்பல் மாதிரி தெரியுது !!
முதல்வர் விஜய் லண்டனுக்கு இன்பச் சுற்றுலா சென்றாரா ? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி.
முதலீட்டு விஷயமா முதல்வர் போகலையா ?
செய்யூரில் புதிய விமான நிலையம் அமைகிறது
நெசமா? உங்க அம்மா சத்தியமா?!
'ரகசிய ஆப் :உருவாக்கி நாச வேலைக்கு சதி :அல்கொய்தா தீவிரவாதியான கோவை வாலிபர் பிடிபட்டார்.
இதுவும் 100 நாள் சாதனையில் வரும் போல தெரியுது !!
முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷுக்கு போலீசார் சம்மன், நாளை ஆஜராக உத்தரவு.
அந்த டேபிளிலிருந்த மூணு பைல்ஸ் ஒன்னு இதுவும் போல தெரியுது ?
இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு சரியான பாடம் புகட்டுவோம் உதயநிதி ஸ்டாலின்.
அவங்க தான் உங்களை ஏற்கனவே கொத்து பரோட்டா போட்டதா சொல்றாங்களே !!
வறட்சியான சூழலால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது கர்நாடக முதல்வர்.
அதாவது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன்னு சொல்றீங்க அது தானே !!
துண்டு சீட்டைப் பார்த்து சபையை நடத்த தேவையில்லை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன்.
ஒரு ரிகர்சல் பார்த்துட்டு தான் சபைக்கு நீங்க வரீங்க !!
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை எதிர்த்து 56 மீனவ கிராம மக்கள் போராட்டம்.
இந்த அரசாங்கம் போராட்டம் நடத்துவதற்கு என்றே, நிறைய திட்டங்களை தீட்டுது ?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டினால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தான் மாறும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.
தலைமைச் செயலகம் என்று சொல்லி கட்டி அப்புறம் மருத்துவமனையா மாத்துவாங்க போல இருக்கு.

Leave a comment
Upload