
இந்தியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நான்காவது முறையாக நடந்தது.
பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியா ஏற்ற இரண்டு மாதங்களிலேயே பிரிக்ஸ் உறுப்பு நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின.
இதனைத் தொடர்ந்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்கா, ஈரான் மோதல் பிரிக்ஸ் அமைப்புக்குள் நிலவும் தீவிரமான வேறுபாடுகளை வெளிப்படுத்தி விமர்சனத்திற்குள்ளானது.
அதன் விளைவு கடந்த மே மாதம் இந்தியா நடத்திய பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் எந்த ஒரு கூட்டு அறிக்கையும் இல்லாமல் முடிவடைந்தது.
கடைசியாக 2021-ஆம் ஆண்டு இந்தியா பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்திய போது இந்த கூட்டமைப்பில் பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இருந்தன.

இந்த நாடுகளின் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துக்களை கொண்டு தான் பிரிக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இப்போது 11 நாடுகள் கொண்ட ஒரு கூட்டமைப்பாக இது வளர்ந்திருக்கிறது.
பிரிக்ஸ் உச்சி மாநாடு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி புது தில்லியில் பாரத் மண்டபத்தில் நடந்தது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஷிஜின்பிங் , ரஷ்ய அதிபர் விளாடிமீர்புதின், ஈரான் அதிபர் மசூத்பெசெஷ்கியான் பங்கேற்றனர்.
இந்த மாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதியில் நடந்தது.
தற்போதைய உலகளாவிய சூழலை கருத்தில் கொள்ளும் போது பிரிக்ஸ் அமைப்பின் இந்த மாநாடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் விட பிரதமர் மோடி தேசியத் தலைவராக மட்டுமன்றி உலகத் தலைவராகவும் உருவெடுத்துள்ள நிலையில் அவரது கருத்தை இந்த உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சிக்கலான சூழல், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கை உலகளாவிய வர்த்தகம் தொடர்பான அவரது நிலைப்பாடு மற்றும் பல நாடுகளுக்கு அதனால் ஏற்பட்டுள்ள சவால்கள் இவை குறித்து இந்த அமைப்பு தீவிரமாக இரண்டு நாள் ஆலோசனை செய்தது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் வெடித்த பிறகு இந்தியாவுக்கு சீன அதிபர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
இப்படி பல விஷயங்கள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் மீது உலக நாடுகளில் பார்வை பதிய முக்கிய காரணம் ஆகிவிட்டது.

இந்த மாநாட்டை பற்றி சீன ஊடகம் ஒன்று தலையங்கம் எழுதியது "உலகம் எவ்வளவுக்கு எவ்வளவு கொந்தளிப்புகளை மாற்றங்களும் எதிர்கொள்கிறதோ, அவ்வளவுக்கு பிரிக்ஸ் ஒத்துழைப்பின் தனித்துவத்துமான முக்கியத்துவம் தெளிவாகிறது " என்று குறிப்பிட்டிருந்தது.
பிரிக்ஸ் நாடுகள் உலகில் மொத்தம் மக்கள் தொகையில் பாதியளவிற்க்கும் உலகளாவிய உற்பத்தியில் 30 சதவீதத்தையும் உலக வர்த்தகத்தில் கால் பகுதிக்கும் அதிகமான பங்கையும் தந்து பிரதிநிதித்துவப் படுத்துகிறது.
பிரிக்ஸ் அமைப்பு பின்தங்கிய நாடுகளுக்கு இடையே ஒற்றுமைக்கும் ஒத்துழைப்புக்குமான மிக முக்கிய தளமாகத் திகழ்கிறது.
அமெரிக்கா பெரிதாக ரசிக்கவில்லை என்பதும் இந்த அமைப்புக்கு நன்கு தெரிந்ததே.
இந்த மாநாட்டில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டு பிரகடனம் இன்றைக்கு பேசும் பொருளாக மாறி இருக்கிறது. பிரகடனத்தில் இஸ்ரேல் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் குறித்து பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்று பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து அமெரிக்கா குறித்து நேரடியாக குறிப்பிடாமல் நியாயமற்ற மற்றும் ஒரு தலைப்பட்சமான பாதுகாப்பு நடவடிக்கைகளால் பல நாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டது.
இது அமெரிக்காவை தான் குறிக்கிறது என்று தெரிந்து கொண்டு எல்லா ஊடகங்களும் அமெரிக்காவுக்கு பிரிக்ஸ் மாநாடு எச்சரிக்கை என்று தான் தலைப்புச் செய்தியை வெளியிட்டது.
பிரிக்ஸ் மாநாட்டின் பிரகடனம் அனைத்து நாடுகளையும் யோசிக்க வைத்திருக்கிறது.
போரில் பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் பொது இடங்களை குறி வைப்பது, சுகாதார நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நடத்துவது, மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை சட்ட விரோதமாக தடுப்பது உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் இந்தப் பிரகடனம் கடுமையான வார்த்தைகளில் கண்டித்து இருக்கிறது.
இது உலக அளவில் பேசும் பொருளாக மாறியது.
இதற்கெல்லாம் அவர்கள் நிறைய ஆதாரங்களை பிரகடனத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு, குறிப்பாக இந்த உத்தரவுகளில் காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை சென்றடைவது உறுதி செய்வது இஸ்ரேலில் சட்டபூர்வ பொறுப்பு என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டி இருப்பதையும் பிரகடனத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்த பிரிக்ஸ் மாநாடு பற்றி குறிப்பிடும் போது உலகளாவிய ஊடகங்கள் இந்தியாவை குறிப்பாக பிரதமரை பாராட்டி இருக்கிறது.
இஸ்ரேல் இந்தியாவின் முக்கிய கூட்டாளிகளில் ஒன்று ஆனாலும் தனது சொந்த நிலைப்பாடு வேறு உறுப்பு நாடுகளின் நிலைப்பாடு வேறு என்பதை சமரசம் செய்து கொள்ளாமல் இந்தியா இஸ்ரேலை கண்டித்து இருப்பதை ஊடகங்கள் பாராட்டுகின்றன.
வெவ்வேறு அணிகளை சேர்ந்த நாடுகள் சீனாவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் இப்போதும் இந்தியா நெருக்கமான உறவை பேணி பாதுகாத்து வருகிறது.
சீனாவின் ஒரே போட்டியாளர் இந்தியா என்ற உண்மை சீனாவுக்கு மெல்ல புரிய ஆரம்பித்து இருக்கிறது.
இது நிச்சயம் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த உச்சி மாநாட்டு பிரகடனத்தை தொடர்ந்து இந்தியா மற்றும் பிரதமர் மோடி பேசும் பொருளாக இருக்கிறார்.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் அல்லது வளர்ந்த நாடுகள் எந்த முக்கிய முடிவுகளை எடுத்தாலும் அது இந்தியாவை மனதில் வைத்துக் கொண்டு குறிப்பாக மோடியை மனதில் வைத்துக் கொண்டுதான் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு இந்த உச்சி மாநாடு அவர்களைத் தள்ளி விட்டது.
பிரிக்ஸ் மாநாட்டின் தல மோடி தான்.

Leave a comment
Upload