"இசை கேட்டால் புவி அசைந்தாடும் " என்பது போல இசைக்கு வயதோ காலமோ எதுவுமே இல்லை . பிறந்த குழந்தை கூட வயலின் இசையை கேட்டு கொண்டே பால் குடிப்பது ,அழுகும் குழந்தை கூட இசையால் மெய்மறந்து உட்ச்சாகமடையும் குழைந்தைகளை பார்த்ததுண்டு.

இசை நோயாளிகளையும் சுகப்படுத்துவதாக உள்ளது .
மரண போராட்டத்தில் இருப்பவர் கூட இசையை கேட்டு அமைதியாக உயிர் பிரிந்ததும் உண்டு.
உலகம் முழுவதும் மிக பிரபல இசை ஞானிகள் வலம் வந்தாலும் இசையை கற்று தருபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.
சமீபத்தில் இசை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் முக்கியமாக கி போர்டில் பாடல்கள் வாசிப்பது ஒரு புதிய கலாச்சாரமாக உருவாகி வருகிறது .
கடந்த வாரம் கோவையில் பார்க் எலென்சா ஹோட்டலில் லண்டனை சேர்ந்த International School of Musicians [ISOM ] நேரடியாக பட்டமளிப்பு விழாவை நடத்தி அசத்தினார்கள்.
இப்படி பட்ட பட்டமளிப்பு விழா இந்தியாவில் நடைபெறுவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .

ISOM நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர்.ஜூன் எலிசபெத் பிலிட்டி லண்டனிலிருந்து பறந்து வந்து நான்கு இசை வல்லுநர்களுக்கு இசை ஆசிரியர்கள் என்ற உரிமத்தை வழங்கி,இசை கல்விக்கான பட்டத்தை கொடுத்து கௌரவித்தார்
உடன் ISoM இந்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் லிம்பி ராய் இணைந்து விருதுகளை வழங்கினார்.
இந்த பட்டத்தை வழங்கும் ISOM தங்களின் இசை மாணவர்களை ஆன் லைனில் பயிற்றுவித்து தேர்வும் நடத்தி தற்போது உலக அளவில் சிறந்த இசை மாணவர்களை தேர்ந்தெடுத்து பட்டங்களை வழங்குகிறார்கள்.

இந்த இசை பள்ளியில் பயின்று பட்டத்தை பெற்றுள்ள இசை ஆசியர்கள் உலக தரத்தில் உயர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வகுப்பு எடுத்து தேர்வையும் நடத்தலாம் என்ற அங்கீகாரத்தை கொடுத்துள்ளார்கள் என்பது சிறப்பான ஒன்று.
இந்தியாவில் முதன் முறையாக ISOM நடத்தும் பட்டமளிப்பு நிகழ்வில் நீலகிரியை சேர்ந்த வயலின் இசை கலைஞர் டான் போஸ்கோ , பியோனா மற்றும் ஸ்ட்ரிங்ஸ் கலைஞர் இவான் ஈனோஸ் மற்றும் கிட்டார் கலைஞர் எரிக் கேரி ரெனாட்டோ ஆகியோருக்கு உலக தர இசை ஆசிரியர் உரிமம் மற்றும் பட்டம் வழங்கப்பட்டது . மேலும் ISOM தென்னிந்திய பிராந்திய பொறுப்பாளர் வயலின் இசை கலைஞர் ஐசக் சுந்தருக்கும் பட்டம் வழங்கப்பட்டது
எரிக் கேரி ரெனாட்டோ கூறும் போது,

" நான் சுயமாக இசையை கற்றுக்கொண்டேன் .சிறுவயதில் இருந்தே கிட்டார் என்றால் அவ்வளவு பிரியம் நானே கிட்டார் வாசிக்க துவங்கி ஆலய திருப்பலிகளில் வாசித்துவந்தேன் . பின் லண்டனில் உள்ள Associated Board of the Royal School of Music [ABRSM ] இசையை முறையாக பயின்று எட்டு கிரேடு முடித்து பல இளம் இசை மாணவர்களை உருவாக்கியுள்ளேன்.
யு கே யில் இசை பள்ளிகளான டிரினிட்டி, லண்டன் மியூசிக் கல்லூரி, ஆர் ஜி டி இசை கல்லூரிகள் ஏராளமான இசை கலைஞர்களை உருவாகியுள்ளனர்.

அதே சமயம் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் மியூசிக் ஒரு படி மேலே போய் என்னை போன்ற இசை வல்லுநர்களுக்கு மிக பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்பது மறக்க முடியாத ஒன்று. அதிலும் ISoM நிறுவனர் மற்றும் இயக்குனர் முனைவர். ஜூன் எலிசபெத் பிலிட்டி லண்டனில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு அதிலும் கோவைக்கு வந்து எங்களுக்கு இந்த இசை கல்வியில் ஒரு உரிமத்தையும், விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி உயர்த்தியதை நினைத்து மெய்சிலிர்த்து போயுள்ளோம்.
ஆன் லைனில் தமிழ் நாடு, யு கே, -யு எஸ் ஏ, -எகிப்து, என்று நிறைய மாணவர்களை இசையில் உருவாக்கியுள்ளோம்.
ஐ லவ் மை கிட்டார் அதிலும் 3 எலக்ட்ரிக் கிட்டார், மற்றும் 4 கிட்டார் வைத்துள்ளேன். எங்களுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் இன்னும் ஏராளமான இளம் இசை ஞானிகளை உருவாக்க கை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் ,இந்த 67 வயது கிட்டார் வல்லுநர்.
ஐவான் இனோஸ் நீலகிரியில் இசை குடும்பத்தில் இருந்து உருவான ஒரு வயலின் இசை ஞானி.
வயலன் மட்டுமல்லாமல் எல்லா இசை கருவிகளை இசைப்பதில் வல்லவர்.

'The Minks' என்ற பேண்ட் குழுவை நடத்தி வருகிறார்.
இந்தியா அளவில் பல ஆர்கெஸ்ட்ரா நடத்தியுள்ளார்
கடந்த 45 வருடமாக ஏராளமான இளம் மாணவர்களை உருவாக்கியுள்ளார்.
நீலகிரியில் உள்ள பல இன்டர்நேஷனல் பள்ளிகளில் இவர் ஒரு இசை ஆசிரியர்.
" Enos and Sons Music School " நடத்தி வருகிறார்.

பல திரை படங்களில் இவரின் இசை காட்சி இடம்பெறுகிறது. அண்மையில் ஜி டி நாயுடு படத்தில் ஒரு காட்சியில் செல்லோ வசிப்பது இடம்பெற்றுள்ளது.
அதே போல ஏ. ஆர். ரகுமான், உஷா உத்துப், சிவமணி மற்றும் ஹரிஹரன் இசை குழுவில் இவரின் பங்கு இடம்பெற்றுள்ளது.
மேலும் இனோஸ் Chamber Orchestra-Bombay Chamber Orchestra வில் டபிள் பேஸ் கிட்டார் இசைத்து அசத்தியுள்ளாராம்.
இவர் The Nilgiri String ensemble Nilgiri choral Society and Orchestra 181 இயக்குனராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இசை குழுவில் டான் மற்றும் எரிக் இடப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
" இசை இல்லாத உலகம் வெறுமையே இசை உலக மொழி இதயங்களை தொட்டு வருடும் ஒன்று இசை, எல்லோருக்கும் தானாக புரிந்து தாளம் போட்டு ஆடும் மனிதர்கள் இல்லாத நாடே இல்லை என்கிறார் ஊட்டியின் வயலின் மாஸ்டர் என்று அழைக்கும் டான் போஸ்கோ ,

அவரை தொடர்பு கொண்டு பேசினோம்,
" நான் வயலனில் எட்டு கிரேட் ABRSM பள்ளியில் முடித்து கடந்த 26 வருடமாக வயலன் மாஸ்டராக இதுவரை ஆயிரம் மாணவர்களை உருவாக்கியுள்ளேன் என்கிறார் தன்னடக்கத்துடன் !.

கடந்த வருடத்தில் International School of Musicians லண்டனில் சேர்ந்து (PAG)Performing artist graded examination. தேர்வில் தேர்ச்சி பெற்றோம்.
உலகத்தில் இந்த தேர்வு முதன்மையானதும் உலக தரத்தில் சிறந்த செயல் திறன் மற்றும் உண்மையான மதிப்பீட்டை அங்கீகரிக்கும் தேர்வு.
விருதுகளை வழங்கியது எங்களின் இத்தனை வருட உழைப்புக்கும் இசையை இளம் உள்ளங்களில் விதைத்ததனால் தான் என்கிறார் .
ISoM இசை பள்ளியில் ஒரு வருடம் பயின்றோம். எல்லா வகுப்புகளும் இரவு தான் ஆன் லைனில் நடந்தது.
இரண்டு செமிஸ்டர் தேர்வு எழுதினோம்.
இசையில் எட்டாவது கிரேட் முடித்துள்ளோம், தற்பொழுது எங்களுக்கு (Licentiate)இசை ஆசிரியர் மற்றும் தேர்வாளர் உரிமம் வழங்கி அங்கீகரித்துள்ளனர்.

எங்களின் ஒரு வருட படிப்பு நான்கு பிரிவுகளாக இருந்தது.
எப்படி ஆசிரியர்கள் பாட திட்டம் எழுதுகிறார்களோ அது போல தினமும் எழுதி ஆன் லைனில் அனுப்பி வைத்தோம்.
எங்களின் கற்பிக்கும் திறனை உன்னிப்பாக கவனித்தார்கள்.
எழுத்து பூர்வமாக பல கட்டுரைகள் எழுதி சமர்பித்தோம்.
அன்னைத்தும் ரெகார்ட் செய்து பதிவு செய்தனர்.
எங்க இயக்குனர் முன் ஒரு பாட திட்டத்தை வகுப்பாக எடுத்தோம் நேரடியாக.
இப்படி எங்களை ஆராய்ந்து இந்த பெரிய அங்கீகாரத்தை வழங்கினார்கள் “ என்கிறார் டான் ஆச்சிரியமாக.
எங்களுடைய பேராசிரியர்களான முனைவர்.வெஸ்லேஸ்,முனைவர்.ஜெஸ்லி நிறைய நுணுக்கங்களை கற்று கொடுத்து ஊக்குவித்து உயர்த்தியுள்ளனர்.
அவர்களின் பாதையில் நாங்களும் எங்கள் மாணவர்களை உருவாக்குவோம்.

ஒரு வருடம் மிக உன்னிப்பாக எங்களை கவனித்து ஆராய்ந்து தேர்வை மதிப்பீடு செய்து நாங்கள் நான்கு பேரும் (Distinction)மிக சிறந்த மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளோம்.
நான் 2002 முதல் 2010 வரை டேரில் இசை ஆசிரியருடன் இணைந்து Royal Schools of Music Sweden பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தேன்.
பல்வேறு இசை நிகழ்ச்சியில் நேரடியாக வயலின் இசைத்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று என்கிறார் டான் போஸ்கோ.
இவரின் மாணவர்கள் வயலின் தேர்வில் நூறுசதவீதம் தேர்ச்சி பெற்று அதே மேடையில் தங்க விருதை வழங்கினார் ISoM இயக்குனர் ஜூன் பிலிட்டி.

இந்த இசை ஆசிரியர்கள் இனி உலக அளவில் பயிற்ச்சி கொடுத்து மதீப்பீடு செய்ய வெளிநாடுகளுக்கு பறந்து சென்றாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

Leave a comment
Upload