மும்பை நகரத்தில் மட்டும் ரூ.25,000 கோடிக்கு மேல் பணப்புழக்கம்.
மொழி, இனம், மதம் என்ற பாகுபாடு கிடையாது.
மும்பையின் ஒவ்வொரு இன்ச்சும் இசௌக்குமே கணபதி பப்பா மோரியா, மங்கல்மூர்த்தி மோரியா.
மும்பை நகரின் பெரிய மற்றும் காஸ்ட்லி கண்பதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள அந்தேரிச்சா ராஜாவைப் பார்க்க கிளம்பிவிட்டேன்.


அருகில் இருந்த கிறுத்துவ அனாதை ஆசிரம குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்த சிஸ்டரை நிர்வாகிகள் சிலையருகே செல்ல தனி வழி செய்து கொடுத்துவிட்டனர் .

வரும் பக்தர்களை கணபதியின் பாதத்தைத் தொட்டு ஸ்பர்சிக்க அனுமதிகின்றனர்.

வெளியிலிருந்து,

உள்ளே லைன் செல்ல செல்ல காணக்கிடைக்கும் கோயிலின் உள்பிரகாரம்

உள்ளே சென்று மேற்கூரையில் அலங்கரிப்பு

மற்றும் தூண்களின் ஓவியங்கள் அனைத்தையும் பார்க்கையில் ஏதேது நாம் அயோத்தியா ராமர் கோயிலுக்குள் சென்றுவிட்டோமோ என்று உணர வைக்கிறார்கள்.

துலாபார நிறுத்தலும் அங்கு வைத்துள்ளனர்.

வெளியில் பெரிய ராமர் படம் பேனர் வந்தவரைக் கவருகிறது. கிட்டே நின்றுகொண்டு செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.

கணபதியைப் பார்க்க வந்த சீன யாத்திரிகர்களையும் விட்டுவைக்கவில்லை.

1966ல் இங்கு வந்த இந்த அந்தேரிச்சா ராஜா அநாவசிய சத்தமில்லாமல், எளிய முறையில் அனைவருக்குமே எளிதில் தரிசனம் தந்துகொண்டிருந்தார்.

Leave a comment
Upload