தொடர்கள்
கவர் ஸ்டோரி
தல-தளபதி மீட் –லண்டனிலிருந்து கோமதி

20260818193216868.jpeg

சிவாஜி - எம்.ஜி.ஆர், ரஜினி - கமல் என இரட்டையர்கள் ஆதிக்கம் செலுத்திய சினிமாத்துறையில் தற்பொழுது, விஜய் - அஜித் அந்த வரிசையில் இணைந்துள்ளனர். இவர்களது ரசிகர்கள் தங்கள் தலைவனே சிறந்தவன் என்று போட்டி போட்டாலும், விஜய்யும் அஜித்தும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் செயல்பட்டு வந்துள்ளனர். லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில், அஜித் கலந்து கொள்ள, விஜய் அதைத் துவக்கி வைப்பதற்கு வந்து தனது ஆதரவை அளித்தது இவர்களது நட்பை உறுதிப்படுத்தியது.

தமிழக முதல்வர் விஜய் அவர்கள், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியைப் பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முன்னணி பிரிட்டிஷ் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொழில்முனைவோர்களைச் சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பதும் போன்ற நோக்கங்களோடு இங்கிலாந்திற்குப் பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் மூலம் சுமார் ₹12,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சர்வதேச தரம் வாய்ந்த 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' (Motor Sports City) அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளது. இதற்காக, உலகின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்திற்கு நேரில் சென்று, அதன் உள்கட்டமைப்பு, சர்வதேச பந்தய மேலாண்மை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் விஜய் லண்டனில், புகழ்பெற்ற ஷங்ரி-லா தி ஷார்ட் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரைக் காண கடந்த செவ்வாயன்று நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் அந்தக் கட்டிடத்தின் முன்பு குழுமியிருந்தனர்.

அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தவே, ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் போகுமாறு அறிவிக்கப்பட்டது.ரசிகர்கள் சற்றே ஏமாற்றம் அடைந்தாலும்,பாதுகாப்பு கருதி திரும்பிச் சென்றனர்.

லண்டன் வாழ் தமிழர்களுக்கு ஒரு கோலாகலக் கொண்டாட்டமாகவே இந்நிகழ்வு அமைந்திருந்தது என்று கூறலாம்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் (Silverstone) பந்தயக் களத்தில் நடைபெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ போட்டிக்கான நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் குறுகிய நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தது என்பது மற்றுமொரு உலக சாதனை. தமிழர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதற்கு இதுவே ஒரு மிகப் பெரிய சான்று!

.

20260818193241488.jpeg

சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற 'மிச்செலின் லீ மேன்ஸ் கப்' கார் பந்தயத் தொடரில் பங்கேற்ற நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து, அப்பந்தயத்தை, விஜய் பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நடிகை த்ரிஷா மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரும் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு வருகை தந்து அஜித்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

"கடந்த 34 ஆண்டுகளாக திரையுலகில் உடன் பயணிக்கும் விஜய், தனது பிஸியான நேரத்திற்கு மத்தியிலும் வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என அஜித் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக, விஜய் ஒரு சிறிய ரேஸ் கார் பொம்மையில் "பிரியமுடன் விஜய் - எனது அன்பான சகோதரர் அஜித்திற்கு" என கையெழுத்திட்டு அஜித்திற்குப் பரிசாக வழங்கினார்.

20260818193313368.jpeg

விஜய் பயணித்த விமானத்தைப் பற்றிய செய்தியை, 'ஃப்ளைட்ராடார்24' (Flightradar24) தளத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் நேரடியாகக் கண்காணித்தது, உலகளவில் மிக அதிக நபர்களால் கண்காணிக்கப்பட்ட விமானமாக உலக சாதனை படைத்துள்ளது.

2026081819334404.jpeg

2026081819341904.jpeg

மொத்தத்தில் தல தளபதி மீட், தமிழகத்தை மட்டுமல்ல உலக தமிழர்கள் அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருவரின் ரசிகர்களும் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.

அதிலும் விஜய் செல்லமாக ஓடி வந்து அஜித்தை கட்டிக் கொண்டது.... ஸ்வீட்டோ ஸ்வீட்.