
அரங்கமே அதிர கைத்தட்டல் ஒலி முழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் பானுவிற்குமெடலை அணிவித்து சான்றிதழைக் கொடுத்ததும், பானுவைப் பேச சொல்லிஒலிவாங்கியை அவளிடம் கொடுத்தார் நிகழ்வு தொகுப்பாளினி.
அணைவருக்கும் வணக்கம்! நான் இன்று முதல் முறையாக இந்த விளையாட்டிற்கான விருதினை பெறுகிறேன்,
இந்த விருது வேண்டுமானால் முதலாக இருக்கலாம், ஆனால் இதற்காக நாங்கள் பட்ட வேதனைகளின் விழுதுகள் ஏராளம்,
பெண்கள் விளையாட்டு துறைக்கு வருவதே மிகவும் குறைவு, அதுவும் என் போன்றுதந்தையை இழந்து, தாயின் துணையோடு இத்துறைக்கு வருவதே ஒரு பெரிய சவால்,
ஆனால் அந்த சவால்களை எல்லாம் உடைத்து, என்னுள் இருக்கும் திறமையினைக் கண்டுஅதனை வெளிக்கொணர்ந்தவள் என் அம்மா,
இதற்காக அவர் உடலால் பட்ட வேதனைகளும், சமூகம் ஏற்படுத்திய சோதனைகளும்சொல்லி மாளாது, ஆனால் வந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாகமாற்றியதோடு, என் அருகிலேயே இருந்து வெற்றிக்கு அருகில் அனுப்பி வைத்து, இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்தவர் என் தாயார் அகல்யா அவர்கள், அவருக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கின்றேன். அவரை மேடைக்கு அழைத்து வரும்படியும்கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் இந்த விருதிற்கு காரணம் அவர்தான்,
இனிமேல் பெறப்போகும் விருதிற்கு வேண்டுமானால் நான் காரணமாக இருப்போன், எனதன்னம்பிக்கை வார்த்தைகளை அள்ளி அரங்கமெங்கும் வீசிட,
முன்னால் மாநில தடகள வீராங்கனை திருமதி அகல்யா அவர்களை மேடைக்குஅழைக்கின்றோம் என்றதும், விசிலோடு கூடிய கரவொலியில் அரங்கம் அதிர்ந்து ஓய்ந்தது.
கையில் ஊன்றுகோல் உதவியோடு ஏறிய அகல்யா,நான் அம்மாவாக ஒரு கோச்சாக இருந்து இவளை என்னைப் போல் 400 மீட்டர்ஓட்டத்திற்கு தயார்ப்படுத்த எண்ணி 52 நொடிக்கான பயிற்சியில் இருந்தபோது, முதுகில்கட்டி ஒன்று ஏற்பட்டு தொடர்ந்து ஓட முடியாமல் என் கால்கள் செயலிழுந்துப்போனது, ஆனால் அவள் மனமும், என் எண்ணமும் செயலிழக்க வில்லை. ஓட முடியாமல் நான்முடங்கினாலும், அவளுக்குள் இருந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தைப்புரிந்துக்கொண்டு தடகளப்போட்டியில் நான் செய்ய நினைத்ததை எல்லாம் இவளைக்கொண்டு செய்திட வேண்டும் என நிடைத்து பயிற்சியினைக் கொடுக்க ஆரம்பத்தேன், அதற்கான பிரத்யோக சக்கரம் வைத்த வாகனம் எனக்காக தயார் செய்துக் கொண்டுஅவளை தயார்படுத்தினேன், அவளும் விடமுயற்சியாக செயல்பட்டு மாநில அளவில் வெற்றுபெற்றது அவளுக்கும், எனக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. இதை விட பெற்றதாய்க்கு வேறு என்ன பெருமை வேண்டும்,
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். இந்த குறள் மகன்களுக்கு மட்டுமல்ல என் மகளுக்கும் பொருந்தும் என்று கூறி மகிழ்ந்து மகிழ்வித்தாள்.
உங்கள் மகளின் வெற்றியை விட உங்கள் பணி அபாரமானது, விளையாட்டில் ஆர்வமாகஇருக்கும் உங்கள் மகள் போல் இருக்கும் நமது மாவட்ட பிள்ளைகளுக்கு என்ன செய்திசொல்ல வேண்டும் என நினைக்கறீர்கள் என கேட்டார் நிகழ்ச்சி தொகுப்பாளர்.
பிள்ளைகள்தான் பெற்றோருக்கு இருக்கும் பெரிய சொத்து. அவர்களால் நமக்கும், நம்மால் அவர்களுக்கும் பெருமைகள் சேரவேண்டும், அத்தகைய புகழை எட்டியுள்ளஅனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தோல்வி என்பது நிகழ்வின் முடிவல்ல, செயல்களில் உள்ள குறைகளின் வெளிப்பாடுஎன்று உணர வேண்டும். குழந்தை நடக்கும் பொழுது எத்தனை முறை விழுகிறது, அதனால்அது ஓய்ந்து விடுமா ? மீண்டும் எழுந்ததால்தான் நடை என்று நிகழ்வு நடக்கிறது.
ஆகவே முயற்சி என்பது முடியும் வரை இல்லாமல் லட்சியத்தை அடையும் வரை முயலவேண்டும். நேஷனல் லெவல் தான் எங்களின் அடுத்த இலக்கு எனக் கூறி முடித்தாள்அகல்யா.

Leave a comment
Upload