திரிஷா பெயர் மாற்றம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாதம் முப்பதாம் தேதி தமிழ் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ட்ரெய்லர் பல கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை குந்தவை என்று மாற்றியிருக்கிறார். தற்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இதே போல் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் நடிகர் விக்ரம் நடிக்கிறார் அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை ஆதித்ய கரிகாலன் என்று மாற்றியிருக்கிறார் அதுவும் விக்ரம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
மாமன்னன் படப்பிடிப்பு நிறைவு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதய நிதி ஸ்டாலின் நடிக்கும் படம் மாமன்னன் இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பகத் பாசில் வடிவேலு என்று பல முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மாவட்டத்தில் நடந்தது அதுவும் குறிப்பாக ஜருகு மலைப்பகுதியில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
வில்லன் அரவிந்தசாமி
ஜெயிலர் படத்துக்குப்பிறகு ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 170வது படத்தில் ரஜினிகாந்துடன் அரவிந்த்சாமி இணைந்து நடிக்க இருக்கிறார். இந்த முறை வில்லன் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு வருகிறது. ரஜினிகாந்தின் 170வது படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கயிருக்கிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அரவிந்த்சாமி தந்த பேட்டியில் ரஜினியின் படத்தை சிபி.சக்கரவர்த்தி இயக்குகிறார் நானும் அந்தப் படத்தில் இணைந்து இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அது வில்லன் வேடமா என்பது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.
விஜய் தான் காரணம்
ஜனனம் திரைப்படத்திற்குப் பிறகு இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அப்போது எனது குடும்பத்தினர் நண்பர்கள் திரைப்படம் தயாரிக்க சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். நான் தயாரிப்பாளர் ஆகலாம் என்று தீர்மானித்து விஜயின் மேனேஜர் மூலம் தொடர்பு கொண்டு நடிகர் விஜயை சந்தித்தேன் அப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் படம் தயாரிக்க இருப்பது பற்றி சொன்னபோது அருண் நீங்கள் என்னைவிட சிறப்பாக சண்டைக்காட்சிகளில் நடிக்கிறீர்கள் இதை நான் பலமுறை என் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன் யார் என்ன சொன்னாலும் நம்பாதீர்கள் மனம் தளராதீர்கள் சினிமாவில் சிறப்பான இடத்தை நீங்கள் பெறுவீர்கள் என்று சொன்னார் அதன் பிறகு நடிப்பு தான் எனது தொழில் என்று முடிவு செய்தேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அருண்விஜய் நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளுகிறார்.
சைக்கோ தனுஷ்
நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 27 லட்சம் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங் ஆனது. இதில் தனுஷ் கதாபாத்திரம் காதல் கொண்டேன் படத்தில் சைக்கோ வேடத்தில் நடிக்கும் தனுஷ் போலிருக்கிறது என்று ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். புதுப்பேட்டைக்கு பிறகு தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். தமிழ் நடிகர்களில் வலைதளத்தில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தனுஷ்தான் அவர் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளும் ட்ரெண்டிங் ஆகிவிடும் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக பதிவு செய்த போது அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் வலைதளத்தில் நிறைய வந்தது.
Leave a comment
Upload