மகா - கவிதைகளோடு எப்போதும் உரையாடுபவர். இலக்கிய பரிச்சயம் மிகுந்த இளம் படைப்பாளி. பல இதழ்களில் இவரது எழுத்து, கவிதை வெளிவந்து, பரிசுகளும் வென்றுள்ளது. வாழ்க்கையை நேசிக்கும் எதார்த்தவாதி. எழுத்தின் ஆழத்தை எழுதி எழுதி ரசிக்கும் மனோபாவம் கொண்டவர். 'விகடகவி'க்குப் புதிய வரவு. வரவேற்று அரங்கேற்றுகிறோம்... மகாவின் கவிதைகள் நம் 'விகடகவி'யில் வாரா வாரம் இடம்பெறும். உங்கள் இதயங்களிலும்...
*******
வெளிப்பாடு-மகா
துளியாய் விழுந்த
தன்னை
தூக்கி நிறுத்தி
ஆளாக்கிய பூமிக்கு
பூக்களுதிர்த்து
நன்றி சொன்னது
மரம்.
Leave a comment
Upload