தொடர்கள்
ஆன்மீகம்
திருமலை- புரட்டாசி பிரமோற்சவம்..! –ஆர்.ராஜேஷ் கன்னா

20220823082809722.jpg

கரோனா காலத்திற்கு பிறகு திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாகவும் , வாகனங்களில் தற்போது சென்று வருகிறார்கள்.

தர்ம தரிசனத்திற்காக பக்தர்கள் கிட்டதட்ட 5 கிமீ தூரம் 20 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து எம்பெருமானை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

திருமலையில் ரூபாய் 300 விரைவு தரிசனம் டிக்கெட் எடுத்து செல்பவர்கள் கூட கிட்டதட்ட 3 மணிநேரங்கள் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். திருமலையில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

20220823082842507.jpg

இது புரட்டாசி மாதம் என்பதால் தமிழ்நாட்டு பக்தர்களுக்கு திருமலை எம்பெருமானை காண புனிதமாதமாக பக்தர்கள் விரதமிருந்து ஆயிரக்கணக்காணோர் திருமலையில் வந்து தங்கி விடுகின்றனர். திருமலையில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது.பஸ்நிலையம் உட்பட எங்கும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

20220823084836446.jpg

திருமலை எம்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி தரும் ஆனந்த நிலையத்திற்கு செல்லும் கொடிமரம் அடுத்த மெயின் வாசல் அருகே பக்தர்கள் 4 முதல் 6 வரிசைகள் ஓரே நேரத்தில் பக்தர்களை விடுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நசுங்கப்பட்டு தள்ளுமுள்ளூவுடன் பக்தர்கள் வேதனையுடன் பெருமாளை சந்திக்கும் காட்சியை காணமுடிகிறது.இதற்கு திருமலை தேவஸ்தானம் பெருமாளை நிம்மதியாக எந்தவித நசுக்கல் ,தள்ளுமுள்ளு இல்லாமல் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

20220823082907700.jpg

திருமலை எம்பெருமானை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கையாக ருபாய் 140.34 கோடி வருவாய் வந்துள்ளது.1.5 கோடி திருமலை லட்டு பிரசாதமாக ஆகஸ்ட் மாதத்தில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 44 .44 லட்சம் பக்தர்கள் இலவச பெருமாள் பிரசாத அன்னதானத்தினை சாப்பிட்டு மகிழ்ந்துள்ளனர் . ஆகஸ்ட் மாதத்தில் என்னையும் சேர்த்து எம்பெருமான் பிராத்தனையாக 10.85 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்களின் முடி காணிக்கையினை செலுத்தி எப்போதும் இல்லாத சாதனையாக திருமலை தேவஸ்தானம் பெருமை கொள்கிறது.

20220823082936293.jpg

திருமலை உண்டியலில் விழும் நாணயங்களை பரக்கமணி என்னும் ருபாய் நோட்டுகள் எண்ணும் இடத்தில் தற்போது 13 வகையான நாணயங்களை எண்ணும் தனியாங்கி ருபாய் நாணயங்கள் எண்ணும் ஆட்டோமேடிக் மெஷின்கள் வாங்கப்பட்டு அதிவிரைவாக உண்டியலில் விழும் நாணயங்கள் எண்ணிக்கை முடிந்ததும் சின்ன கவர்களில் நாணயங்கள் பேக் செய்யப்பட்டு வேகமாக அடுக்கி வைக்கப்படுகிறது.இதனால் உண்டியலில் பணம் எண்ணும் நேரம் மிச்சமவதாகவும் வேகமாக பணம் எண்ணமுடிகிறது என்று தேவஸ்தான ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

20220823083003927.jpg

திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதால் புரட்டாசி மாதம் முழுவதும் பக்தர்கள் கீழ் திருப்பதியில் தங்கி தரிசன நேரத்திற்கு வந்து செல்லவும். அத்துடன் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் புரட்டாசி மாதம் முடியும் வரையில் திருமலை எம்பெருமான் தரிசனத்தினை தவிர்க்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

20220823083028394.jpg

புரட்டாசி மாத பிரமோற்சவம் செப்டம்பர் 27 ந்தேதிமாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆந்திரமுதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெருமாளுக்கு பட்டு அங்கவஸ்திரம் செலுத்தி தரிசனம் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அத்துடன் 23 கோடி செலவில் பெருமாள் உண்டியல் பணம் எண்ணுவதற்கு பரக்கமணி அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு அதனை முதலவர் திறந்து வைக்க உள்ளார்.

20220823083056792.jpg

இந்த வருடம் பிரமோற்சவத்தில் பெருமாள் எல்லா நாட்களிலும் நான்கு மாடவீதிகளிலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்க இருப்பதால் நிறைய பக்தர்கள் திருமலையில் குவிவார்கள் அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு அலிபிரிக்கு வரும் வாகனங்கள் தீவிரமாக செக் செய்யப்படுகிறது.

திருச்சானூரிலிருந்து திருப்பதி மெயின் ரோட்டில் வரும் வாகனங்கள் செல்ல வசதியாக பறக்கும் மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது அது முடிவு பெறும் நிலையில் இருப்பதால் கீழ்திருப்பதியில் வாகனங்கள் மாற்று வழியில் செல்வதால் கீழ்திருப்பதியின் சாலைகள் எங்கும் வாகன நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

2022082308325174.jpg

புரட்டாசி பிரமோற்சவம் இந்த தடவை கருட வாகனம் நான்கு மாடவீதிகளில் மாலை 7 மணிக்கு புறபட்டு நள்ளிரவு 12 மணி வரை பக்தர்களுக்கு எம்பெருமான் அருள் பாலிப்பார் . இதனால் நிறைய பக்தர்கள் கருட சேவையில் பெருமாளை தரிசிக்க முடியும் .

திருமலை திருப்பதியில் தற்போது எலக்ட்ரிக் பஸ் சேவையும் தொடங்கப்பட்டு அதில் பக்தர்கள் சொகுசாக பயணம் செய்து வருகின்றனர்.

20220823083322483.jpg

சென்னையை சேர்ந்த அப்துல் கனி மற்றும் சுபீதா பானு திருமலை தேவஸ்தானத்திற்கு 1 கோடி ருபாய் நன்கொடை வழங்கியுள்ளனர் , இதனால் திருமலை முழுவதும் இந்த முஸ்லிம் தம்பதிகளுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

2022082308364258.jpg

திருமலை பிரமோற்சவத்தில் கலந்து கொள்ள 88 சிறப்பு கலாசார குழுவினர் 9 மாநிலங்களில் இருந்து திருமலைக்கு வந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். வண்ணமிகு அணிவகுப்பு கலாசார நிகழ்ச்சிகள் இந்த வருட பிரமோற்சவத்தில் நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் கண்டு களிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

20220823083547323.jpg

புரட்டாசி மாதத்தில் தான் எம்பெருமான் வைகுண்டத்திலிருந்து திருமலை இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக பக்தர்களின் ஐதீகமாக உள்ளது. எனவே புரட்டாசி பிரமோற்சவம் உலகெங்கும் உள்ள பெருமாள் பக்தர்கள் சிறப்பானதாக கருதுகிறார்கள் என்பதால் அதிகளவில் இப்போதே பக்தர்கள் திருமலையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

20220823083717487.jpg

திருமலை பிரமோற்சவ கருட் சேவையில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மாடவீதிகளில் வந்து தரிசனம் செய்வார்கள் என்று தேவஸ்தானம் கணக்கிட்டு அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.2023 வருடத்திற்கான மாத, 3மாத காலண்டர்கள் , டயரி, பஞ்சாங்கம் என அனைத்தும் தயாரிக்கப்பட்டு ஆந்திர முதல்வர் கையால் வெளியிட திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

20220823084329916.jpg

எவ்வளவு நேரம் காத்திருந்தும் எம்பெருமானை தரிசித்த நேரத்தில் பக்தர்கள் பட்ட அத்துனை காத்திருப்புகளும் அலுப்புகளும் மறந்து விடுகிறது என்று பக்தர்களின் வியப்பினை பார்க்க முடிகிறது.

திருமலை எம்பெருமானை நாம் காண செல்வதில்லை , அவர் நம்மை அழைத்து பார்த்து தரிசனம் தந்து ஆசிர்வதித்து அனுப்புகிறார்.

திருமலை - கலியுக வைகுண்டம் என்பது தான் நிஜம்.