தொடர்கள்
சோகம்
மகாராணி இரண்டாம் எலிசபெத் -ஸ்வேதா அப்புதாஸ் .

கடந்த 8 ஆம் தேதி இறந்த இங்கிலாந்து மாகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி பயணம் உலக அரங்கை ஈர்த்துள்ளது .

20220822232402456.jpg
96 வயதில் அமைதியாக இறந்த மகாராணியின் இறுதி பயணம் இருபது வருடத்திற்கு முன்பே அவராலே திட்டமிடப்பட்டது என்ற ஆச்சிரிய தகவல் உலகம் முழுவதும் வலம் வந்தவண்ணம் இருக்கிறது .
மகாராணியின் இறுதி அடக்க நிகழ்வுகள் நடந்த வெஸ்ட் மினிஸ்டர் அபே ஆலயம் பல வரலாற்று நிகழ்வுகளை அரங்கேறியுள்ளது .

20220822234054306.jpg
1947 யில் இளவரசி எலிசபெத் , இளவரசர் பிலிப்பை இந்த ஆலயத்தில் தான் மணமுடித்தார் .
பின்னர்1953 ஆம் ஆண்டு இதே ஆலயத்தில் தான் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டப்பட்டார் .அவரின் தந்தை ஆறாம் ஜார்ஜ் 1952 ஆம் வருடம் இறந்த பின் எலிசபெத் முடிசூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

2022082223430524.jpg
இந்த ஆலயத்தில் 18 ஆம் நூற்றாண்டில் நடந்த முதல் அரச இறுதி வழிபாடு மகாராணி எலிசபெத்துக்கு தான் .அதே போல 1965 யில் நடந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதி வழிபாடு தான் அரசு நடத்தியது அதற்கு பின் நடந்த இறுதி வழிபாடு மகாராணியின் .

2022082223451323.jpg20220822235047770.jpg
மகாராணி தன் பலர்மொல் அரண்மனையில் இறந்த பின் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 19 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இறுதி பயணம் துவங்கியது அப்பொழுது அவரின் உடல் அடங்கிய சவப்பெட்டி வரலாற்று சிறப்புமிக்க கன் கேரேஜில் வைக்க பட்டது .

20220822235532527.jpg
வழக்கமாக கன் கேரேஜை குதிரைகள் தான் இழுத்து செல்லும் .எலிசபெத் மகாராணியின் உடல் ஏந்திய கன் கேரேஜ் முதல் முறையாக 142 மாலுமிகளால் நகர்ந்து வந்தது .இதற்கு முன் இரண்டாம் எட்வர்ட் , ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ஆறாம் ஜார்ஜ் உடலை சுமந்துள்ளது .வின்ஸ்டன் சர்ச்சில் உடலையும் இந்த கேரேஜ் எடுத்து சென்றுள்ளது என்ற நினைவலைகள் உலகம் முழுவதும் பிரதிபலிக்கிறது .
மகாராணியின் உடல் வைக்கப்பட்ட சவ பெட்டியின் மேல் அரச கொடி போர்த்த பட்டு அதன் மேல் ஏகாதிபத்திய அரச கிரீடம் , இறையாண்மை செங்கோல் அரசாட்சியை குறிப்பது மற்றும் இறையாண்மை உருண்டை இது உலகை குறிப்பது இவை இறுதி பயணத்தில் வந்தது .

2022082223580866.jpg
இவையுடன் மகன் மற்றும் புதிய அரசர் மூன்றாம் சார்லஸ் பிரத்தியேகமாக அரண்மனை மலர்களால் தயாரித்த மலர் வளையம் வைக்க பட்டது .அதில் ராணியின் திருமணத்தின் போது ஆலயத்தில் அவர் ஏந்தி வந்த பூச்செண்டில் இருந்து எடுக்கப்பட்ட மலர் மற்றும் க்ரீபெர் இந்த மலர் வளையத்தில் பொறுத்த பட்டது முக்கியமானது .

20220822235956351.jpg
அந்த மலர் வளையத்தில் அரசர் சார்லஸ் தன் கைப்பட அம்மாவுக்கு எழுதிய வரிகள் அனைவரையும் ஈர்த்தது ." In loving and devoted memory Charles R".
இங்கிலாந்தின் அனைத்து படை களும் ராணியின் இறுதி பயணத்தில் கலந்து கொண்டனர் .

20220823000610849.jpg
தன் இறுதி பயணத்திற்கான வாகனத்தின் வடிவமைப்பை மகாராணியே முடிவ செய்துள்ளார் .அந்த வாகனம் ராயல் ஹவுஸ் ஹோல்டு மற்றும் ஜாகுர் லேண்ட் ரோவர் கார் கம்பெனி தயாரித்து ராணியிடம் ஓகே பெற்றனராம் .மற்ற அரச வாகனங்களை போலவே கருப்பு கலர் வாகனம் .அதில் அரச குறியீடு பொறுத்த பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

20220823000756263.jpg
கன் கேரேஜில் பயணித்த ராணியின் உடல் வெலிங்டன் ஆர்ச் என்ற இடத்தில் தான் அரச இறுதி பயண வாகனத்தில் உடல் மாற்றப்பட்டு வின்ட்சர் கேசில் நோக்கி பயணித்தது .

20220823001018933.jpg
இந்த கேசில் ஆயிரம் வருடங்களில் 40 அரசர்கள் இந்த அரண்மனையில் வாழ்த்துள்னர் .இரண்டாம் உலகப்போர் சமையத்தில் மகாராணி குண்டு தாக்குதலில் இருந்து தன்னை காத்துக்கொள்ள இந்த கேசிலில் தஞ்சம் அடைந்துள்ளார் .அதே போல கொரோனா காலத்திலும் இந்த அரண்மனையில் தான் தங்கி இருந்தார் .

20220823001158721.jpg
மகாராணியின் இரண்டு செல்ல கார்கிஸ் நாய்கள் மற்றும் குதிரை எம்மா இவரின் இறுதி பயணத்தில் காத்து கொண்டிருந்தன கேசில் வாயிலில் .
லண்டன் மாநகர் முழுவதும் மகாராணியின் இறுதி ஊர்வலம் நகர்ந்து வந்தது 21 மைல் தொலைவிற்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க இறுதி பவனி நடந்தது .

20220823001808371.jpg
அரச ராணுவ விமான படை கடற்படை காவல் துறை படை என்று அனைத்து அதிகாரிகளும் இந்த பவனியில் நடந்து கலந்து கொண்டனர் .
வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் மகாராணியின் உடல் எடுத்து வரப்பட்டு இறுதி ஆராதனை கெண்டபெரி ஆர்ச்சி பிஷப் தலைமையில் நடைபெற்றது .

20220823002046580.jpg

இதே ஆலயத்தில் தான் கணவர் பிலிப்பின் இறுதி ஆராதனை நடைபெற்றது அப்பொழுது ராணி எலிசபெத் தனியாக சோகத்தில் அமர்ந்து இருந்தார் .அம்மா அமர்ந்த அதே இடத்தில் அரசர் மூன்றாம் சார்லஸ் அமர்ந்து இருந்தார் .
உலக தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் கத்தோலிக்க பிஷப்புகள் என்று இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர் .

20220823003034952.jpg
ஆராதனையின் இறுதியில் அரச கிரீடம் , செங்கோல் ,தங்க உருண்டை

2022082300385485.jpg

சவப்பெட்டியின் மேல் இருந்து அகற்றப்பட்டு ஆர்ச் பிஷப்பிடம் ஒப்படைக்க அவர் புனித பீடத்தில் வைத்தார், மகாராணியின் ஆட்சி முடிவுக்கு வந்தது என்பதை அவை குறைகிறதாம் .

20220823003629364.jpg
பின் அரசர் மூன்றாம் சார்லஸ் அரசியின் பாதுகாப்பு Grendier Guards கொடியை அரசியின் சவ பெட்டியில் வைத்தார் பின் லார்ட் சாம்பெர்லின் பரோன் பார்க்கர் தன் படையின் கோலை இரண்டாக உடைத்து சவ பெட்டியின் மேல் வைத்து அரசியின் பாதுகாப்பு பணி முடிந்தது என்று உணர்த்தினார் .

20220823004506305.jpg
மகாராணியின் இறுதி ஆராதனை வழிபாடு முடிவுக்கு வர , வழக்கமாக அரசியின் பால்மோரால் அரண்மனையில் தினமும் காலை அவரை உறக்கத்தில் இருந்து எழுப்பும் பைப்பர் ஸ்காட்லாந்தை சேர்ந்த பைப் மேஜர் பால் பர்ன்ஸ் தன் லெமென்ட் இசையை கடைசியாக ஆலயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மகாராணிக்காக இசைத்த வண்ணம் வெளியேறினார் .20220823005944244.jpg


ஏற்கனவே மகாராணி அவரிடம் தன் இறுதி ஆராதனையில் வாசிக்க கேட்டுக்கொண்டாராம் .
மகாராணியின் இறுதி ஆராதனை முடிந்தவுடன் அரசியின் சவ பெட்டி அரச பெட்டகத்தினுள் இறங்கியது .

20220823010124852.jpg
அன்று மாலை அரசர் ஆறாம் ஜார்ஜ் நினைவு ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது .அன்றே அவரின் கணவரின் உடலும் வின்ட்சர் கேசிலில் இருந்து எடுத்து வரப்பட்டு மகாராணியின் அருகில் அடக்கம் செய்யப்பட்டதாம் .

2022082301055888.jpg

மகாராணி உயிர் பிரியும்போதிலிருந்து கடைசி அடக்கம் வரை அவரின் குடும்பத்தார் அனைவரும் பெற பிள்ளைகள் உட்பட உடன் இருந்தனர்.
உலக தலைவர்கள் பலர் இவர் இறுதி அடக்க ஆராதனையில் கலந்து கொண்டார்கள்.

20220823011010854.jpg

இந்தியா சார்பாக ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார் .

20220823011153168.jpg

உலக தலைவர்கள் வெஸ்ட்மினிஸ்டர் அபேவிற்கு தனி பஸ்சில் தான் அழைத்துவரப்பட்டனராம் அதே சமயம் ஜனாதிபதி ஜோ பிடென் மகாராணி இறுதி பவனி யில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

20220823011405674.jpg
நம் ஜனாதிபதி முர்மு அரசர் மூன்றாம் சார்லெசை சந்தித்து துக்கம் விசாரித்தார் .

20220823011533396.jpg

மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி அடக்கம் உலகம் முழுவதும் திரும்பி பார்த்தது .
இனி இங்கிலாந்தில் மகாராணி அரசு வருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது . இனி அதற்கான வாய்ப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது .

20220823011848785.jpg
மகாராணி எலிசபெத் அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்து மறைந்தாலும் உலக அரங்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .