
கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ தற்சமயம் விசாரணையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண் சோனல் மிஸ்ரா ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்..
கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸீ ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தார்கள்..
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் ஒவ்வொரு நாளும் ஒன்பது மணி நேரம் என்று மூன்று நாட்கள் விசாரணை செய்து விசாரணை செய்து சிபிஐ வீட்டுக்கு அனுப்பியது.
தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை இது முழுக்க முழுக்க தமிழக அரசு மற்றும் கரூர் காவல்துறை அலட்சியம் குளறுபடி அதுதான் இறப்புக்கு காரணம் என்று வீடியோ ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலத்திலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தமிழக அரசு சார்பாக விசாரணைக்கு ஆஜராகி எல்லோரும் தமிழக வெற்றி கழகம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒத்துழைப்புத் தரவில்லை விஜய் கால தாமதமாக வந்து,விஜய் பேசியது தான் இத்தனை சாவுக்கும் காரணம் என்று கடுமையான வார்த்தைகளில் வாக்குமூலம் தந்திருக்கிறார்கள். .
.கூட்டணியில் சேர்க்க தமிழக வெற்றி கழகத்திற்கு அழுத்தம் தருவதற்காக சிபிஐ இந்த அரசியல் முடிவை எடுத்து இருக்கிறது என்ற விமர்சனம் வரத் தொடங்கி இருக்கிறது.
ஆதார் அர்ஜுனா விசாரணை முடிந்து வெளியே வரும்போது எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை தமிழக வெற்றி கழகம் தலைமையில் தான் கூட்டணி வதந்திகளுக்கு எல்லாம் நான் பொறுப்பில்லை என்று பதில் சொல்லியிருக்கிறார்..
அப்போது நிருபர்கள் பாஜககூட்டணியில் சேர உங்களை நிர்பந்தப்படுத்தினார்களா என்று கேட்டபோது விசாரணை விவரங்களை வெளியிடுவது சரியாக இருக்காது என்று சொல்லி நகர்ந்து விட்டார்.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் கேட்ட கேள்விகள் இவைதான் ;
கரூர் கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்கள் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து வந்தனர் ?
சென்னையில் இருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்த விஜயின் பயணதிட்டத்தை வகுத்தது யார்?
செப்டம்பர் 27 அன்று மதியம் மூன்று மணிக்கு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தும் நண்பகல் 12:00 மணிக்கு பேசுவதாக அறிவிக்க சொன்னது யார் ?
விஜய் பேசிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்த போது சரியான தகவல் அவரிடம் தெரிவிக்கப்படவில்லையா.
இரண்டு மூன்று பேர் நெரிசலில் இறந்து போன விஷயம் அதைத்தொடர்ந்து சாவு இதெல்லாம் விஜய் இருக்கும்போது நடந்ததுதானே?
விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் வந்தது அது எதற்கு என்று விஜய்க்கு தெரியுமா தெரியாதா ?
கூட்டத்தில் மயக்கம் அடைந்தவர்கள் மீது விஜய்யே தண்ணீர் பாட்டில் வீசிய காட்சிகளை பார்த்தோம் அவர்கள் ஏன் மயக்கம் அடைந்தார்கள் என்று விசாரித்தாரா இல்லையா ?
காவல்துறை அறிவுறுத்தல் மீறி கூட்ட நெரிசலுக்குள் பேருந்து நகர்த்த உத்தரவிட்டது யார்?
நண்பகல் 12 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டு விஜய் இரவு 7:00 மணிக்கு வர காரணம் என்ன?
தொண்டர்களின் வருகையையும் மற்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் யார் ?
கூட்டத்தை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காக இந்த இந்த தாமதம் திட்டமிடப்பட்டதா?
கடைசியாக கேட்ட கேள்விதான் அவர்களுக்கு அதிர்வை ஏற்படுத்தியது 'பாட்டிலுக்கு பத்து ரூபாய்' பாடலுக்குப் பிறகுதான் சம்பவங்கள் அரங்கேறியதா ?
இது தவிர செந்தில் பாலாஜி மீது நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா என்றும் கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்று விவரம் தற்சமயம் நமக்கு கிடைக்கவில்லை
ஏப்ரல் மாவட்ட ஆட்சித் தலைவர் கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் இருவரிடமும் கேட்கும் போது செந்தில் பாலாஜி பற்றி சில கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு எதிராக இரண்டு அதிகாரிகளும் எதுவும் சொல்லவில்லை என்று தகவல் நமக்கு கிடைத்தது. இருவருமே செந்தில் பாலாஜியை டெல்லி போவதற்கு முன்பு டெல்லி சென்று திரும்பிப் பிறகு விசாரணையில் என்ன கேட்டார்கள் என்ன பதில் சொன்னார்கள் என்ற விவரத்தை சொல்லி இருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் போகிற போக்கில் சொல்வது போல் தேவைப்பட்டால் நாங்கள் விஜய்க்கும் சம்மன் அனுப்புவோம் கைது நடவடிக்கைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் விசாரணைக்கு பிறகு சென்னை திரும்பியதும் விசாரணையில் நடந்தது முழுவதையும் சொல்லி விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு கைது நடவடிக்கை பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா நான் டெல்லி சோர்சிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் சொல்லி இருக்கிறார்..
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசிய சிபிஐ அதிகாரி ஆந்திராவில் புஷ்பா படம் ரிலீஸ் போது அல்லு அர்ஜுனா வந்தது தொடர்ந்து நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார் .
அல்லு அர்ஜுனா கைது செய்யப்பட்டு பின்னால் விடுவிக்கப்பட்டார் ஆனாலும் முதல் தகவல் அறிக்கை குற்றவாளிகள் பட்டியலில் அவர் பெயரையும் இணைத்திருக்கிறார்கள் அது இந்த வழக்குக்கும் பொருந்தும் என்று கண்காணிப்புகுழு எங்களை நிர்பந்தப்படுத்துகிறது என்று சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் பொங்கலுக்கு முன்பு இந்த கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ் உடையும் என்கிறது சிபிஐ வட்டாரம் எல்லாம் அமித்ஷா கையில் இருக்கிறதாம்.
விஜயின் அரசியல் முடிவு முடிவு பொறுத்துதான் எல்லாம் என்கிறார்கள்.

Leave a comment
Upload