தொடர்கள்
வலையங்கம்
வாய்சவுடால் வாக்குறுதிகள் வேண்டாமே

20260003055857459.jpg

கடந்த ஒரு வாரமாக சென்னையில் எங்கு இருந்து பார்த்தாலும் போராட்டங்கள். தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள் அண்ணா அறிவாலயம் கலைஞர் நினைவகம் என்று அவர்கள் போராட்டம் தொடர்வதும் அவர்களை கைது செய்வதும் தொடர்கிறது. ஒப்பந்த செவிலியர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தில் 8000 பேரை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக முதல் கட்டமாக பொங்கலுக்குள் ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் வாக்குறுதியைத் தொடர்ந்து முதல் கட்டமாக 216 பேருக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டன இதைத் தொடர்ந்து அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. ஜாக்டோ ஜியோ மீண்டும் பழைய பென்ஷன் திட்டம் உள்பட தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அமைச்சர்களின் ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.. முதல்வர் சனிக்கிழமை நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லி இருக்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்று நீண்ட காலமாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். .போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ஆசிரியை கைக்குழந்தையுடன் கைது செய்யப்படுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லி தானே நாங்கள் உங்களுக்கு ஓட்டு போட்டோம் இப்போது எங்களை ஏமாற்றி விட்டீர்கள் நாங்கள் யார் என்பதை அடுத்த தேர்தலில் காண்பிப்போம் என்கிறார். அரசு ஊழியரை பொருத்தவரை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எல்லாம் கோரிக்கையும் நிறைவேற்றுவோம் என்று சொன்னார். அதைத் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டார். ஓய்வூதியம் பொருத்தவரை நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்னார். அது மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றார். .இப்போது அதைப் பற்றி நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் முதல்வர் மீது நம்பிக்கை வைத்து ஜாக்டோ ஜியோ சொல்லியிருக்கிறது. .

அரசு ஊழியர்கள் பெரும்பாலும் திமுக அனுதாபிகள் என்பதால் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை போலீஸ் அராஜகத்தை கண்டிப்பதாக அறிக்கை விட்டு அதோடு முடித்துக் கொண்டது அதிமுக மற்றும் பாஜக.

நிதி ஆதாரம் என்ன நிலைமை ஏற்கனவே கடன் மேல் கடன் என்ற அளவில் தான் தமிழக அரசின் நிலைமை இருக்கிறது. இப்போது உண்மை நிலை தெரிந்திருக்கும் ஆளும் திமுகவுக்கு. இனிமேலாவது வாய்ச்சவுடால் தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் தராமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. .இதனால் எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமும் தவிர்க்கப்படும்.