தொடர்கள்
அனுபவம்
நடந்தது-ஜாசன்

20260003064819182.jpg

2025 ஆம் ஆண்டின் கடைசி நாள் 31-ஆம் தேதி நீண்ட நாட்களுக்கு பிறகு மின்சார ரயிலில் பயணித்தேன்.

சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து தினந்தோறும் வரும் எனது பழைய நண்பர் எதிரில் போய் அமர்ந்தேன்.செல்பேசியை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று என் வருகையை பார்த்து "ரொம்ப நாட்கள் ஆச்சு உங்களை பார்த்து "என்று நலம் விசாரித்தார் .

கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகிவிட்டது கேட்டராக்ட் பிரச்சனை காரணமாக இரண்டு கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதாவது கொஞ்ச நாட்கள் பேப்பர் டிவி பார்க்க வெளியே வர தடை. ஒரு மாதம் கருப்பு கண்ணாடியுடன் வீட்டில் சும்மாதான் உட்கார்ந்து இருந்தேன்.

அறுவை சிகிச்சைக்கு பின் தினந்தோறும் கண்ணில் மருந்து போட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மருந்து போட வேண்டும் என்பதால் வெளியே வர முடியவில்லை என்று விளக்கம் சொன்னேன்..

"இப்போதெல்லாம் கண் ஆபரேஷன் என்பது பெரிய விஷயம் இல்லை எல்லாம் லேசர் பார்த்துக் கொள்கிறது "என்றார் நண்பர் நானும் உண்மைதான்

. எனக்கு கண் ஆபரேஷன் கிட்டத்தட்ட நேரடி வர்ணணையுடன் டாக்டர் செய்து கொண்டு இருந்தார்.பயப்பட ஒன்றும் இல்லை என்று ஆரம்பித்த அந்த பெண் டாக்டர் இப்போது கண் புரையை அகற்றுகிறேன் .இப்போது லென்ஸ் வைக்கிறேன் என்று என்ன சிகிச்சை செய்கிறார் என்பதை நேரலையில் சொல்லிக் கொண்டே அறுவை சிகிச்சை முடிந்ததும் நல்லபடியாக முடிந்து விட்டது என்று உற்சாகமாக சொல்லி உட்கார வைத்தார்.

எனக்கு எந்த பயமும் இல்லாமல் இருந்தது அடுத்த வாரமே இன்னொரு கண்ணுக்கும் பண்ணிக் கொண்டேன் .படிப்பு என் தொழில் எனவே கண் பார்வை அவசியம் என்பதால் நான் இதற்கு முழு முக்கியத்துவம் தந்தேன் என்றேன். .

உடனே என் நண்பர் அந்த காலத்தில் எங்கள் பாட்டிக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது இப்போதும் எனக்கு ஞாபகம் வருது. ஒரு வாரம் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தார் கண்ணில் கருப்பு பட்டை வைத்து கண்ணை மூடி வைத்திருந்தார்கள் தினந்தோறும் மருத்துவர் வந்து பார்த்து நர்ஸ் கண்ணுக்கு மருந்து போட்டு கண்காணிப்பு செய்து ஒரு வாரம் கழித்து தான் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.

.அப்போது கூட ஒரு மாதம் வெயில் சூரிய ஒளி கண்ணில் படக்கூடாது என்று கருப்பு கண்ணாடி அணிய சொன்னார்கள். இன்னொரு கண்ணுக்கு ஆறு மாதம் கழித்து தான்அறுவை சிகிச்சை செய்தார்கள் என்றார்.. எனக்கு அப்படியெல்லாம் இல்லை நான் அன்று சாயந்திரமே வீட்டுக்கு வந்து விட்டேன் என்றேன் .

அதுதான் கம்ப்யூட்டர் லேசர் என்று விஞ்ஞானம் ரொம்பவும் அட்வான்ஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது என்றார் அவர். .

அப்போது தாம்பரத்தில் இன்னொரு நண்பர் ஏறி வந்து உட்கார அந்த நண்பருக்கு அவர் புத்தாண்டு வாழ்த்து சொல்ல அப்போது நாம் தமிழர் என்று உறவு கொண்டாடுகிறோம் உரிமையுடன் பேசுகிறோம் ஆங்கில புத்தாண்டை நாம் ஏன் கொண்டாட வேண்டும் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லுங்கள் ...

கூடவே வாழ்த்து என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் தான் சொல்ல வேண்டும் என்பதல்ல நீங்கள் எல்லா நாளும் வாழ்த்து சொல்லலாம் இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும் என்று அது நிச்சயம் நீங்கள் வாழ்த்து சொல்பவருக்கு உற்சாகத்தையும் தெம்பையும் தரும் என்றார் வாழ்த்து சொல்ல வயது தடை அல்ல மனம் தான் வேண்டும். உங்களை விட சிறிய வயதுக்காரர்கள் கூட வாழ்த்து சொல்லலாம் நீங்களும் அதை தயங்காமல் ஏற்றுக் கொள்ளலாம் என்று விளக்கம் சொன்னார்.

உடனே அவர் இது நல்ல யோசனையாக இருக்கிறது இதை இந்த ஜனவரி முதல் தேதி முதல் நான் செயல்படுத்துகிறேன் என்றார். .

அப்போது தாம்பரத்தில் ஏறிய அதே நண்பர் ரயில் நிலையம் வாசலில் ஆட்டோவில் எழுதிய ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது "என்னைக் கெட்டவன் என்று சொல்ல இந்த உலகத்தில் இருக்கும் நல்லவன் யார் ? என்று கேட்டிருந்தது அந்த வாசகம்.

அது உண்மைதானே ஒருத்தருக்கு கெட்டவனாக இருப்பவர் இன்னொருவருக்கு நல்லவனாக இருப்பார் ஒருவருக்கு நீங்கள் செய்யும் நல்லது இன்னொருவருக்கு தனக்கு கிடைக்கவில்லை என்பதால் அது கெட்டதாக தெரியும்.

கடவுள் கூட எல்லோருக்கும் நல்லது செய்து விட முடியாது அப்படித்தானே என்றார்.

யோசிக்கும் கூடிய ஒரு விஷயமாக தெரிந்தது .

அதை யோசித்தபடி மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கினேன் .