தொடர்கள்
அழகு
மீண்டும் ...விவேகனந்தா கல்லூரி மீட் – பால்கி

20260001221929251.jpg மைலாப்பூர் விவேகானந்தா கல்லூரி.....

“நீங்கள், மைலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் படித்தவரா? அப்ப இந்த சேதி உங்களுக்குத்தான்” என்ற பீடிகையோட உலா வந்த கல்லூரி தரப்பிலிருந்து வந்த செய்தி மீண்டும் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்ற பரபரப்பை உண்டாக்கி விட்டிருந்தது .

கம்பீரமாக நிலைத்து நிற்கும் கல்வி அரண்மனை, ஆமாங்க எங்க காலேஜ் எங்களுக்கு அப்படித்தான் என்று மைக்கில் 1976ல் பீகாம் தேறிய பாலு என்ற பாலசுப்ரமணியம் வந்தவர் ஒவ்வொருவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார்.

20260001222459944.jpg

காரிலிருந்து வணங்கியபடியே வீல் சேரில் ஒருவர் இறங்க, கூடக் கைத்தாங்கலாக நண்பர்கள் சூழ, கைத்தடியுடன் என முன்னாள் மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

20260001222533107.jpg

20260001224119122.jpg

“ஒவ்வொருவரின் கண்கள் தன்னைத் தவிர அடுத்தவரை இவர் எனது பேட்சா என்று ஆர்வத்துடன் தேடியது.

சீனியர்களுடன் இந்த ஜூனியர்களும் தானும் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொள்வதும் சீனியர்களுக்கு தனியே குரூப் போட்டோ எடுத்து கொடுப்பதும் குதூகலமாக செய்துகொண்டிருந்தனர்.

மனைவி கைப்பிடித்து வர ஓரிருவர் வந்தனர்.

அங்கு ஷாமியானாவில் பென்ச் போட்டு லேப்டாப்களை வைத்துக்கொண்டு என்சீசீ மாணவர்கள், வந்த முன்னாள் மாணவர்களை ரெஜிஸ்டர் செய்துகொண்டிருந்தனர்.

2026000122272709.jpg

கிட்டத்தட்ட 550க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ்ர்கள் வந்திருந்தனர். 1946 முதல் மாணவர் முதல் 2010 மாணவர் வரை அதில் அடக்கம்.

அன்றைய விழா தலைமை விருந்தினர் 1964ஆம் ஆண்டு பௌதிகத்தில் இளநிலை பட்டம் பயின்ற E S L . நரசிம்மன் பின்னாளில் சட்டீஸ்கர், ஆந்திர மாநிலங்களின் கவர்னராக இருந்தவர் தனது மனைவியுடன் காரில் கல்லூரிக்குள் நுழைந்தார். சுவாமிஜியுடன் வரவேற்பு கமிட்டியும் அவரை வரவேற்றனர்.

2026000122322771.jpg

என்சிசி மாணவர்கள் அவருக்கு மரியாதை அணிவகுப்பு அளித்து வரவேற்றனர்.

தன்னோடு படித்தவருடன் முன்னாள் கவர்னர் உரையாடுகிறார்.

2026000122432853.jpg

1974ஆம் ஆண்டில் வர்த்தகத்துறையில் இளநிலை பட்டம் பயின்று மென்மேலும் பயின்று இன்று அமெரிக்காவில் NWI Management LP என்னும் கம்பெனியின் Chairman & CEOயாக பணிபுரியும் N ஹரிஹரன் முக்கிய உரை ஆற்றினார்.

கல்லூரியின் தற்போதைய செயலர் தியானகம்யானந்தா சுவாமி தலைமை தாங்கினார். இவரும் நமது கல்லூரியியின் 1992ல் இளநிலை பட்டம் பெற்ற முன்னாள் மாணவனே(ரே). பின்னாளில் ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து சந்நியாசியாக உயர்ந்தார்.

E S L நரசிம்ஹன் பேசுகையில், என்னோட க்ளாஸ்மேட்ஸும் இருக்காங்க. அதே சமயம் சிலர் இல்லை என்று பொடி வைத்தவர் அவையோரை தும்ம தும்ம, ஐ மீன், குலுங்க குலுங்க, விம்ம விம்ம ஆஹா, இவருக்குள் இன்னும் மாணவம் தளும்பத் தளும்ப,……. அவருடைய பேச்சு நகைச்சுவையாகவும், மனதை வருடுவதும், நெருடுவதுமாகவும் இருந்தது.

நல்ல காலம் சில கிளாஸ்மேட்ஸ் வரலை. இல்லைனாக்கா, அன்னிக்கி நீ லேப்ல பண்ணத சொல்லி என்னை கிழிச்சிருப்பாங்க என்று மாணவத் தொனியில் தொடர்ந்தார் ஜஸ்ட் 80 ப்ளஸ் எக்ஸ் ஆளுனர்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் பழம்பெரும் முன்னாள் மாணவர்களும் அமர்ந்திருந்தனர்.

அதில் 1946-48 இண்டர்மீடியட் படித்த முதல் பேட்ச் மாணவர் கலி வரதன் நரசிம்ஹன் வந்திருந்தது ஒரு பெரிய சிறப்பு தான்.

20260001223330747.jpg
கல்லூரியின் செயலாளர் சுவாமி தியானகம்யானந்தாஜி மஹராஜ் கல்லூரியில் நடந்திருக்கும் முன்னேற்ப்பணிகளையும் அதில் முன்னாள் மாணவர் சங்கத்தின் பங்கையும் கூறினார்.

மதிய உணவு திட்டத்தின் மூலம் கடினமான குடும்ப சூழ்நிலையில் இருந்து வரும் பகல் நேர கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு திட்டம் போன்ற இரு திட்டங்களை சுவாமிஜி கூற அரங்கத்திலிருந்த அனைவரும் அதற்கு என ரூ10 கோடியைக் ஆறு மாதத்திற்குள் திரட்ட திட்டம் போட்டும் விட்டனர்.

கோடிகளிலும் லட்சங்களிலும் அள்ளித் தந்த கர்ண பரம்பரை முன்னாள் மாணவர்கள் அடக்கமாக பேரெல்லாம் வேணாமே என்று பணிவாக திடமாக மறுத்துவிட்டது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

78 ரூ டியூப்லைட் மாட்டிவிட்டு அந்த வெள்ளை குழல் மீது முழுவதுமாக உபயம் என்று கருமையில் எழுதி அந்த ஒளி கருமையாக வெளியிடும் இந்த காலத்திலும் இப்படியா?

ஐஐடி ஐஐஎம், இஞ்சினீரிங்க் கல்லூரிகளுக்கு மட்டும் மில்லியன் டாலர்களில் குளிப்பாட்டும் இந்த ட்ரெண்ட் இளநிலை பட்டப்படிப்பு தரும் காலேஜ் லெவலில் இறங்கி வருவது வரவேற்கத்தக்க செயல் தான்.

1975ல் இளநிலை பட்டதாரி பேட்ச், தங்களின் 50 ஆம் வருட கல்லூரி இணைப்பைப் நினைவு கூறும் விதத்தில் அந்த முன்னாள்கள் சுவாமிஜியிடம் பணமுடிப்பை தந்து வணங்கிவிட்டு சென்றனர்.

அதே அவையிலேயே 1976ல் பட்டதாரிகளான முன்னாள்கள் தானாக எழுந்து நின்று, அடுத்த வருடம் நம் மது மா என்று குதூகலமாக ஒலி எழுப்பியது மகிழ்ச்சியலையாகி அவையை நிறப்பியது.

முன்னாள் ஆசிரியர்களை மேடையில் அழைத்து கௌரவித்தனர். மேடை ஏற முடியாத ராவ் சாரை அவரது இருக்கையைலே சென்று சால்வை போர்த்தி கௌரவித்தனர்.

20260001223933432.jpg

தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்ற பின்பும் வந்தவரிடையே புதுப் புது நட்பு வட்டங்களையும் விட்டுப்போன நட்பு வட்டங்களை மீட்கும் நிகழ்வாய் தொடர்ந்து கொண்டிருந்தது.

20260001224530654.jpg

அந்த நாள்! ஞாபகம்! வந்ததே! நெஞ்சிலே! நண்பனே!

20260001224724303.jpg

1979 BCom பேட்ச் மாணவர்கள் ஒரு சேர ஒரு போஸ் கொடுக்கிறார்கள்.

20260001224959914.jpg