தொடர்கள்
கதை
நான் திரும்ப வந்துட்டேன் -முனைவர் என்.பத்ரி

20260002175827356.jpeg

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.ஆனால் அன்றுதான்
அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
அன்று காலை சங்கர் வீட்டிற்கு அவருடைய நண்பர் சுந்தர் வந்தார்.அவரும்
சங்கரைப் போலவே பெரிய செல்வந்தரும், அரசியல்வாதியும் ஆவார். தன்னுடைய
படகுப் போன்ற ஆடம்பரக்காரில் வந்த அவர்,நண்பர் சங்கரின் வீட்டிற்கு அருகில் இருந்த ஆறுமுகத்தின் ஆட்டோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
‘என்னய்யா?உன்ன்னிடம் கார் இல்லையா? ஆட்டோதானா?’என்றுக் கேட்டு
நையாண்டிச் செய்தார்.இதை தனது தன்மானத்துக்கு வந்த சோதனையாகக் கருதினார்.
சங்கர். நண்பரிடம் ஆட்டோ உரிமையாளரைப் பற்றிய விவரங்களைச் சொல்லி ஒரு வழியாக சமாளித்தார் அவர் நண்பர் சுந்தர் விடை பெற்றுக் கொண்டுச் சென்றார். பிறகு ஆட்டோ ஆறுமுகத்தை சங்கர் அழைத்தார். ஏகமாக திட்டிவிட்டார்.அங்கிருந்து ஆட்டோவை அப்புறப்படுத்துமாறு ஆணையிட்டார். தன்னுடைய வீட்டிற்கு முன்னால் ஓர் ஆட்டோ நிற்பது நிற்பதை அவர் அவமானமாகக் கருதினார்.
’இங்கிருந்து உன் ஆட்டோவை அப்புறப்படுத்தி, வேறு எங்காவது விட்டுக் கொள்’ என்று கோபமாகச் சொல்லி விட்டார். வேறு வழித் தெரியாமல் அடுத்த தெருவில் தூரத்து உறவினர் ஒருவருடைய வீட்டின் வாசலில் விட்டு வந்தார் தன் ஆட்டோவை ஆறுமுகம் அவர்களும், ’ஆட்டோவிற்கு சேதமோ,திருட்டோ ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை’ என்று சொல்லி அவர்களின் பொறுப்பைத் தட்டிக்கழித்தார்கள்.இருப்பினும் கடவுளின் மேல் பாரத்தை போட்டு விட்டு அங்கு ஆட்டோவை விட்டுவிட்டு வந்தார் ஆறுமுகம்..ஆனால் விழிப்பு வரும்போதெல்லாம் ஒரு முறை தன் ஆட்டோவைப் பார்த்துவிட்டு வருவார் ஆறுமுகம். அங்கு இருந்த ஒரு சிசிடிவி கேமரா அவருக்கு நம்பிக்கை தந்தது.
சங்கர் ஒரு கோடீஸ்வரன். ஒரு அரசியல்வாதியும் கூட. அவருடைய வீட்டின்
அருகில் குடியிருந்த நடுத்தர வயது ஆறுமுகம் அன்றாடம் ஆட்டோ ஓட்டி பிழைப்பவர்.
அவனுடைய குடிசை வீடு அந்தத் தெருவில் வளைவில் இருந்தது. அதனால் அவனுடைய வீட்டிற்கு அருகிலோ,எதிரிலோ, அவனால் ஆட்டோவை இரவில் பார்க்கிங் செய்ய முடியல்லை.எனவே, அந்த ஆட்டோவை அவர் இந்த பணக்காரருக்கு வீட்டிற்கு எதிரில் இருந்த விசாலமான திறந்தவெளியில் விட்டு வந்தான்.இதனால்,யாருக்கும் எந்த தொந்தரவும் இருந்ததில்லை. இதற்குத்தான் இன்று வந்தது சோதனை மறு நாள் இரவு 11 மணி இருக்கும். தன் வீட்டிலிருந்து வெளியே வந்த சங்கர் நடுத்தெருவில் நின்றுக் கொண்டு கைப்பேசியில் யாருடனோ உரக்கப் பேசிக் கொண்டிருந்தான்.அவருடைய உரையாடலின் சாரம் இதுதான். அவர் பேசிக் கொண்டிருந்தது ஒரு கார் மெக்கானிக்கிடம்,’அவருடைய கார் ஸ்டார்ட் ஆகவில்லை.
அவருடைய மனைவிக்கு நல்ல காய்ச்சல். வலிப்பு வேறு. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.அதற்கு காரை ரிப்பேர் பண்ணனுமாம்.மெக்கானிக் ஃபோனை எடுத்த பாடில்லை.வாடகைக் கார் எதும் வேறு கிடைக்க வில்லை.

என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. அவருடைய ஒரே மகன்
அமெரிக்காவில்.அவனுக்கு ஃபோன் செய்தாலும் ஒரு பயனும் இருக்கப்போவதில்லை.
மனதில் கவலை அவருக்கு அதிகமாகிவிட்டது. பக்கத்து வீட்டு பணக்காரர்கள் யாரும் ஃபோனையும் எடுக்கவில்லை. வீட்டுக் கதவையும் திறக்கவில்லை.

அப்போது எதிரே வந்த ஆறுமுகத்தைப் பார்ததார் சங்கர்.மனம் சங்கடத்தில்.எனினும் வேறு வழியில்லை.ஆறுமுகம் சார்,உங்களுடைய ஆட்டோ எங்கே? என்று கேட்டார். எதிர்பாராமல் அவரிடமிருந்து வந்த மரியாதையை உணர்ந்த ஆறுமுகம்
அதிர்ச்சியில் உறைந்து போனார்..

தன் மனைவியின் உடல் நலமின்மையைப் பற்றிச் சொன்னார். ஆட்டோவில்
வந்தார் ஆறுமுகம். சங்கரையும்,அவருடைய மனைவியையும் ஆட்டோவில்
மருத்துவமனைக்கு ஆட்டோ பறந்தார். தகுந்த நேரத்தில் அவருடைய
மனைவிக்கு சிகிச்சை தரப்பட்டது. தற்போது வீட்டுக்கும் திரும்பி விட்டார்.
நேற்று வரை கேள்விக்குறியாக இருந்த ஆட்டோ ஆறுமுகம் இன்று
ஆச்சரியக்குறியாக மாறிவிட்டார்..சங்கரின் அகம்பாவம் அன்றிரவே அழிந்தொழிந்த்து.
தக்க சமயத்தில் வந்து உதவிய ஆறுமுகத்துக்கு இருகரம் கூப்பி கணவரும் மனைவியும் நன்றி சொன்னார்கள். மறுநாள் காலை முதல் ஆட்டோ சங்கரின் வீட்டில் முன்னால் நின்றுக் கொண்டிருந்தது தெருவில் செல்லும் எல்லோரையும் பார்த்து .’நான் திரும்ப வந்துட்டேன்னு ‘சொல்லியபடி.