
நவகிரகங்களின் தாக்கம் மனிதர்களின் வாழ்விலும் பிரதிபலிக்கிறது என்பதைத் தமிழர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்து அதன் படி ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கினார்கள். இதைப் பற்றிய ஆராட்சியைக் கடந்த நூற்றாண்டில் தான் மேலை நாட்டு ஆய்வாளர்கள் அறிந்தனர். ஆனால் நவீன விஞ்ஞானமோ அதைச் சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளது.
நவக்கிரகங்களை வணங்கினால் நமது தடைகள் நீங்கி, வேண்டியது அனைத்தும் கிடைக்கும். அந்தந்த பலன்களுக்குரிய கிரகங்களை நாம் வணங்கும் போது அதனை எளிதில் அடையலாம்.
தேக ஆரோக்கியம் வேண்டுவோர் சூரிய பகவானையும், புகழ் வேண்டுவோர் சந்திர பகவானையும், பூமி யோகம் வேண்டுவோர் செவ்வாயையும், அறிவுக் கூர்மை வேண்டுவோர் புதனையும், சமூக அந்தஸ்து வேண்டுவோர் குரு பகவானையும், பிறரைக் கவரும் பேச்சிற்கும், தோற்றத்திற்கும் சுக்கிரனையும், திடமான மனம் மற்றும் சொல்லுக்குச் சனீஸ்வரனையும், எதிரியை வெல்லும் தன்மைக்கு ராகுவையும், ஞாலம் போற்றும் ஞானம் பெறக் கேதுவையும் வணங்க வேண்டும்.
நவக்கிரகங்களின் தனித்துவம்:
கிரகம் 1: சூரியன் (ஞாயிறு)

நவகிரகங்களில் முதன்மையானது சூரியன்.
காசியபர் முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர்.
முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி.
கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. அக்னி இவருக்கு அதி தேவதை. ப்ரத்யதி தேவதை – ருத்திரன்
மாணிக்கம் உகந்த ரத்தினம். ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம். சூரிய பகவான் இரு கரங்களில் தாமரை ஏந்தி, வலம் புறம் உஷா தேவி, இடது புறம் சாயா தேவி என இரு மனைவியருடன் ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வருகிறார். மேலும் சூரியனை நடுநாயகமாகக் கொண்டே மற்ற கிரகங்கள் தங்களின் இருப்பிடங்களை அமைத்துக் கொண்டுள்ளன.
இவருக்கு உரிய மலர் செந்தாமரை
நிறம்: சிவப்பு
உலோகம்: தாமிரம்
இவருக்கு உகந்த நாள்: ஞாயிற்றுக்கிழமை
தானியம்: கோதுமை
வஸ்திரம் - சிவப்பு ஆடை
மரம்: உருத்திராட்ச மரம்
சமித்து: வெள்ளெருக்கு
நைவேத்தியம்: கோதுமை, ரவை, சர்க்கரைப் பொங்கல்
ஸ்தலம்: சூரியனார் கோவில்
சூரிய காயத்ரி:
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
கிரகம் 2: சந்திரன் (திங்கள்)

நவகிரகங்களில் இரண்டாவது சந்திரன்.
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி.
தென் கிழக்குத் திசை சந்திரனுக்குரியது. பார்வதி தேவி இக்கிரகத்தின் அதி தேவதை. ப்ரத்யதி தேவதை – கௌரி
முத்து உகந்த ரத்தினம். மான் இவருடைய வாகனம்
சந்திரனின் மனைவி - ரோகிணி.
இவருக்கு உரிய மலர் வெள்ளரளி
நிறம்: வெள்ளை.
உலோகம்: ஈயம்
இவருக்கு உகந்த நாள் திங்கள் கிழமை
தானியம்: நெல்
வஸ்திரம் - வெள்ளை நிற ஆடை
மரம்: வேப்ப மரம்
சமித்து: முருங்கை
நைவேத்தியம்: தயிர்ச் சாதம்
ஸ்தலம்: திருப்பதி, திங்களூர்
சந்திர காயத்ரி:
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
கிரகம் 3: அங்காரகன் (செவ்வாய்)

நவகிரகங்களில் மூன்றாவது கிரகம் செவ்வாய்.
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்பிரமணியரைத் தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
தெற்கு திசை செவ்வாய்க் கிரகத்திற்கு உரியது. மேஷம், விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
பூமாதேவி இக்கிரகத்தின் அதி தேவதை. ப்ரத்யதி தேவதை – க்ஷேத்திரபாலகர்
பவழம் உகந்த ரத்தினம். ஆட்டுக்கடா இவருடைய வாகனம். அங்காரகன் மனைவி சக்தி தேவி.
இவருக்கு உரிய மலர் செண்பகம்
நிறம் : சிவப்பு
உலோகம்: செம்பு
இவருக்கு உகந்த நாள் செவ்வாய்க் கிழமை
தானியம்: துவரை
வஸ்திரம்: சிவப்பு ஆடை
மரம்: வில்வ மரம்.
சமித்து: கருங்காலி
நைவேத்தியம்: துவரம் பருப்புப் பொடி சாதம்
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்.
செவ்வாய் (அங்காரக) காயத்ரி :
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்
கிரகம் 4: புதன்

நவகிரகங்களில் நான்காம் கிரகம் புதன்.
இவர் சந்திரனுடைய குமாரர்.கிரகங்களினால் ஏற்படும் தீமைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி.
வட கிழக்கு திசை புதனுக்கு உரியத் திசை. விஷ்ணு இக்கிரகத்தின் அதி தேவதை. ப்ரத்யதி தேவதை - நாராயணர்
மரகதம் உகந்த ரத்தினம். குதிரையே இவருடைய வாகனம். புதனின் மனைவி - ஞானசக்தி.
இவருக்கு உரிய மலர் வெண்காந்தல்.
நிறம் : வெளிர் பச்சை
உலோகம்: பித்தளை.
இவருக்கு உகந்த நாள் புதன் கிழமை.
தானியம்: பச்சைபயிர்
வஸ்திரம் - பச்சை நிற ஆடை
மரம்: ஆல மரம்
சமித்து: நாயுருவி
நைவேத்தியம்: பாசிப்பருப்பு பொடி சாதம்
ஸ்தலம்: திருவெண்காடு.
புதன் காயத்ரி :
ஓம் கஜத் வஜாய வித்மஹே ஸுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
கிரகம் 5 : குரு (வியாழன்)

நவகிரகங்களில் ஐந்தாம் கிரகம் குரு.
இவர் தேவ குரு என்ற பட்டத்தைப் பெற்றவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
வடக்கு திசை குருவின் திசை. பிரம்மா இக்கிரகத்தின் அதி தேவதை. ப்ரத்யதி தேவதை - இந்திரன்
பொன் உகந்த ரத்தினம். யானை இவருடைய வாகனம்.
குருவின் மனைவி - தாராதேவி
இவருக்கு உரிய மலர் வெண்முல்லை
நிறம் : மஞ்சள்
உலோகம்: பொன்
இவருக்கு உகந்த நாள் வியாழக்கிழமை
தானியம் : கொண்டைக் கடலை.
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
மரம் - சந்தன மரம்
சமித்து: அரசு.
நைவேத்தியம்: கடலைப் பொடி சாதம் , சுண்டல்.
ஸ்தலம்: திருச்செந்தூர், தென் குடித்திட்டை
குரு காயத்ரி:
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
கிரகம் 6: சுக்கிரன் (வெள்ளி)
நவகிரகங்களில் ஆறாவது கிரகம் சுக்கிரன்.
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம், துலாம் ராசிகளுக்கு அதிபதி.
கிழக்குத் திசை சுக்கிரனுக்கு உரியத் திசையாகும். இந்திராணி இக்கிரகத்தின் அதி தேவதை. ப்ரத்யதி தேவதை: இந்திர மருத்துவன். வைரம் உகந்த ரத்தினம். கருடன் இவருடைய வாகனம். சுக்கிரன் மனைவி - சுகீர்த்தி.
இவருக்கு உரிய மலர் வெண் தாமரை
நிறம் : வெள்ளை
உலோகம் : வெள்ளி
இவருக்கு உகந்த நாள் வெள்ளிக் கிழமை.
தானியம் : மொச்சை
வஸ்திரம் - வெண்மை அல்லது இளம் பச்சை நிற ஆடை
மரம் - அத்தி மரம்
சமித்து : அத்தி
நைவேத்தியம்: மொச்சைப் பொடி சாதம்
ஸ்தலம் : ஸ்ரீரங்கம், கஞ்சனூர்
சுக்ர காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
கிரகம் 7: சனி

நவகிரகங்களில் ஏழாம் கிரகம் சனி.
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போலக் கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
மேற்கு திசை சனி கிரகத்திற்கு உரியது. யமன் இக்கிரகத்தின் அதி தேவதை. ப்ரத்யதி தேவதை: பிரஜாபதி
நீலம் உகந்த ரத்தினம்
காகம் இவருடைய வாகனம்
சனியின் மனைவி - நீலாதேவி
இவருக்கு உரிய மலர் கருங்குவளை, வன்னி
நிறம் : கருப்பு
உலோகம் : இரும்பு
இவருக்கு உகந்த நாள் சனிக்கிழமை
தானியம் : எள்
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
மரம் - வன்னி மரம்
சமித்து : வன்னி
நைவேத்தியம்: எள்ளுப்பொடி சாதம்
ஸ்தலம் : திருநள்ளாறு
சனி காயத்ரி :
ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்
கிரகம் 8: ராகு

நவகிரகங்களில் எட்டாவது கிரகம் ராகு.
இவர் மனித தலையும், நாகத்தின் உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
தென்மேற்கு திசை ராகுவுக்கு உரியது. பசு இக்கிரகத்தின் அதி தேவதை. ப்ரத்யதி தேவதை - நாகம்
கோமேதகம் உகந்த ரத்தினம்.
சிங்கம் இவருடைய வாகனம். ராகுவின் மனைவி - சிம்ஹி.
இவருக்கு உரிய மலர் மந்தாரை
நிறம் : கருமை நிறம்
உலோகம் : கருங்கல்
இவருக்கு உகந்த நாள் ஞாயிற்றுக் கிழமை
தானியம் : உளுந்து
வஸ்திரம் - நீல நிற ஆடை
மரம் - மருத மரம்
சமித்து : அருகு.
நைவேத்தியம்: உளுந்துப்பொடி சாதம்
ஸ்தலம் : ஸ்ரீ காளஹஸ்தி, திருநாகேஸ்வரம்,
ராகு காயத்ரி :
ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
கிரகம் 9 : கேது
நவகிரகங்களில் ஒன்பதாம் கிரகம் கேது.
இவர் நாகத்தின் தலையுடன் மனித உடலையும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர். வடமேற்கு திசை கேதுவுக்குரியது. சித்திரகுப்தன் இக்கிரகத்தின் அதி தேவதை. ப்ரத்யதி தேவதை - பிரமன்
வைடூரியம் உகந்த ரத்தினம். கழுகு இவருடைய வாகனம். கேதுவின் மனைவி - சித்ரலேகா
இவருக்கு உரிய மலர் செவ்வல்லி
நிறம் : சிகப்பு
உலோகம் : கருங்கல்
இவருக்கு உகந்த நாள் ஞாயிற்றுக் கிழமை
தானியம் : கொள்ளு
வஸ்திரம்: பல நிற ஆடை
மரம் - மா மரம்
சமித்து : தர்ப்பை
நைவேத்தியம்: கொள்ளுப்பொடி சாதம்
ஸ்தலம் : ஸ்ரீ காளஹஸ்தி, கீழ்பெரும்பள்ளம்.
கேது காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்

மீண்டும் அடுத்த வாரம் நலம் தரும் நவகிரக நாயகர்களுடன் தொடர்வோம்….

Leave a comment
Upload