
ஆட்சி அதிகாரத்தில் யாருக்கும் பங்கு இல்லை திமுக அறிவிப்பு.
ஆமாம், எங்க கிட்டயே நிறைய பங்குதாரர்கள் இருக்காங்க !!
விஜயை முதல்வராக ஏற்பவர்களுடன் தான் கூட்டணி செங்கோட்டையன்.
முதல்ல மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்று விசாரித்தீர்களா !!
இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்ற நயினார் நாகேந்திரன் கனவு பலிக்காது கனிமொழி எம்பி.
ஆமா, ஆமா அது ஏற்கனவே உடைந்து போச்சு !!
கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் பொதுக்குழுவில் தீர்மானம்.
ஆனால் பாருங்க அவர் பையன் இது பொதுக்குழுவே இல்லை அப்படின்னு சொல்றாரு !!
உத்தரப்பிரதேசத்தில் 2.99 கோடி வாக்காளர்கள் நீக்கம் தேர்தல் ஆணையம் தகவல்.
அதாவது பாரபட்சம் இல்லாம இருக்காங்களாம் !!
டெல்லியில் சிபிஐ முன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் ஆஜர்
கூட்டணி பற்றி விசாரித்து இருப்பாங்க !!
என்னோடு நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா , ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்.
நீங்க அண்ணாமலை கூட ....?
மக்களின் இதயங்களை ஒன்றிணைக்கும் மொழி தமிழ் பிரதமர் மோடி பேச்சு.
போற போக்க பாத்தா தமிழ்ல கவிதை எல்லாம் எழுதுவார் போல் தெரிகிறது !!
அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் நயினார் நாகேந்திரன் பேச்சு.
வாக்காளர்களுக்கு உங்களை பிடிக்கணுமே !!
நமக்கு நண்பர்களை விட வலுவான எதிரி தேவை மலேசியாவில் விஜய் பேச்சு.
வில்லன் இருந்தா தான் கொஞ்சம் ஹீரோவுக்கு வேகம் வரும் !!
90 நாட்களில் பொய் செய்திகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது அமைச்சர் அன்பில் மகேஷ்.
தேர்தல் அறிக்கை சொல்றா போல தெரியுது !!
திமுகவுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது செல்வப் பெருந்தகை பேட்டி.
இன்னும் கூட எப்படி பாராட்டணும் புகழ வேண்டும் என்பது பற்றி தானே?
விவசாயி வேடமிட்டு சிலர் அரசியல் செய்வார்கள் முதலமைச்சர் ஸ்டாலின்.
சிலர் அப்பா வேடமிட்டு அரசியல் செய்வது போல் தானே !!
மகளிர் உரிமைத் தொகையை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது பா. சிதம்பரம் பாராட்டு.
ஆனா கடன தான் ஏத்துக்க மாட்டேங்கிறாங்க !!
சீமான் விஜய் அரசியல் செயல்பாடு பாஜகவுக்கு துணை போவதாக உள்ளது திருமாவளவன் பேட்டி.
உங்க அரசியல் திமுகவுக்கு துணை போவது மாதிரி தானே !!
இந்தியாவிலேயே தனிக்காட்டு ராஜாவாக தமிழ்நாடு உள்ளது முதலமைச்சர் ஸ்டாலின்.
அதனால் தான் டாஸ்மாக் முலமா எல்லாருக்கும் தண்ணி காட்டுறிங்க !!
விஜய் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பு ஏற்கும் வரை ஓய மாட்டேன் செங்கோட்டையன்.
பாக்கெட்ல அம்மா படத்தை எடுத்துட்டு தளபதி படத்தை எப்ப வைக்க போறீங்க அத சொல்லுங்க முதல்ல !!
பாமகவில் இருந்து ஜி கே மணி நீக்கம் அன்புமணி அறிவிப்பு.
அப்புறம் ? அடுத்தது அப்பா தானே ?

Leave a comment
Upload