ராஷ்மிகா

தெலுங்கு, ஹிந்தி என்று பிரபலமாகி உள்ள ராஷ்மிகா மந்தனா 2026-இல் தனது படங்கள் தான் தொடர்ந்து ரிலீஸ் என்பதால் சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரன்

ஆர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அனுபாமா பரமேஸ்வரன்.
நயன்தாரா

41 வயதான நடிகை நயன்தாராவை உங்களை குளோசப்பில் பார்க்கும்போது கொஞ்சம் வயதான மாதிரி தெரிகிறது என்று சிலர் சொல்ல இதனால் அமெரிக்காவுக்கு சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது.
கஜோல்

51 வயதான நடிகை கஜோல் இப்போதும் சமூக வலைதளத்தில் போட்டோ ஷுட் படங்களை தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக்கிறார் .அவருக்கு ரசிகர்கள் கொஞ்சம் ஜாஸ்தி தான்.
மீனாட்சி சௌத்ரி

பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ஒரு படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிக்க இருக்கிறார்.
பிரியங்கா மோகன்

தற்சமயம் கவின் நடிக்கும் படத்திலும் மேட் இன் கொரியா என்ற படத்திலும் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன். இது தவிர ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு கன்னட படத்தில் நடிக்கிறார் நடிகை.
மாளவிகா மோகனன்

"தி ராஜா சாப்" படத்தில் பைரவி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். இப்போது பைரவி கேரக்டர் தோற்றத்தை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
ராதிகா

தாய் கிழவி என்ற படத்தில் 75 வயது மூதாட்டி வேடத்தில் நடிக்கிறார் ராதிகா.கதை உசிலம்பட்டி பின்னணியில் இருக்குமாம்.
தீவ்ரா

பிரபல மாடலிங் தீவ்ரா அருண் விஜய் நடிக்கும் 'ரெட்டை தல' படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அரசன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தில் வெட்டு குத்து என்று ரத்தக் களறியாகத்தான் உங்கள் வேடம் இருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் எதிர்பார்க்காதீர்கள் என்று இயக்குனர் வெற்றிமாறன் திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
சந்தானம்

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் சந்தானமும் காமெடி காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. பழையபடி காமெடி காட்சிகளுக்கே வாருங்கள் அவருக்கு நெருக்கமான நடிகர்கள் எல்லாம் அழைப்பு விட இந்த வம்பே வேண்டாம் ஜெய்லர் படத்திலிருந்து எஸ்கேப் ஆனார் சந்தானம். கதாநாயகன் நம்மை காமெடி நடிகரராக ஆக்கி விடுவார்களோ என்ற பயம் தான் காரணம்.
ஸ்ருதிஹாசன்
நடிப்பதோடு அடிக்கடி சினிமாவில் பாட்டும் பாடுவார் நடிகை ஸ்ருதிஹாசன். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ட்ரையின் படத்தில் மிஷ்கின் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழி காரரா என்ற பாடல் தற்சமயம் வைரலாகி கொண்டு இருக்கிறது.

Leave a comment
Upload