தொடர்கள்
தொடர்கள்
கருத்து கதிர்வேலன்

2022081620010063.jpeg

ஆவின் பொருட்கள் விலையேற்றம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது நான் ஆவின் பால் வாங்குவது கிடையாது கார்த்திக் சிதம்பரம் எம்பி.

அப்புறம் மின் கட்டண உயர்வை பற்றி கேட்காதீங்க எங்க வீட்ல ரொம்ப வருஷமா மெழுகு வத்தி தான் யூஸ் பண்றோம் சொல்லிடுவாரு

என் மீது வழக்குப் போடும் நாளுக்காக காத்திருக்கிறேன் திமுக எம்பி ஆ.ராசா

எல்லா தீகார் பாசம் தான் காரணம்.

பாரதிய ஜனதா எப்போதும் மத அரசியல் செய்ததில்லை அண்ணாமலை,

ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

பள்ளியில் மாணவர் மனசு என்ற பெட்டி வைக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

என் மனசுல இருக்கிறதெல்லாம் சொல்லிட்டேன் என்று காதல் கடிதங்களை போட்டு விட போகிறார்கள் ஜாக்கிரதை

தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் அண்ணாமலை

அதுக்கு நீங்க முதல்ல நிறைய எம்எல்ஏக்களை பிடிக்கணும் முடியுமா

அதிமுக, திமுக இரண்டுக்கும் சின்னங்கள் தான் வேறு எண்ணங்கள் ஒன்று தான் அதிமுக எம்எல்ஏ விபி.கந்தசாமி.

அதான் அந்த கரெப்க்ஷன் கலெக்க்ஷன் கமிஷன் அந்த எண்ணத்தை தான் அண்ணன் சொல்றாரு

இந்தியாவில் விளையாட்டு தலைநகராக சென்னை மாற்றம் முதல்வர் நடவடிக்கை ஈடுபட்டுள்ளார் அமைச்சர் மெய்யநாதன்.

அரசியல் விளையாட்டில் இல்லைதானே

என் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி நான் கவலைப்படவில்லை எடியூரப்பா.

கட்சி பெயர் ரிப்பேர் ஆவதுஎன்று கட்சி கவலைப்படுதே

தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பதற்கு தமிழக அரசுக்கு முறையான காரணம் எதுவும் இல்லை மத்திய கல்வி அமைச்சர்

ஆனா ஒரு காரணம் இருக்கு என்று அமைச்சரே ஒப்புக்கொள்கிறார்

நவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு.

திராவிட மாடல் பாடதிட்டத்தில் இது இருக்குதானே.

தமிழக அரசின் வருமானம் உயர்வு தமிழக நிதியமைச்சர் தகவல்.

அப்ப குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் திட்டத்தை தீபாவளிக்கு அமல்படுத்தலாமே ஒரு குடும்பத்தலைவி கேட்கிறார்கள் அமைச்சரே.

ஒருவருக்கு ஒரு பதவி ராகுல் காந்தி வலியுறுத்தல்.

அப்பாடா ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவிஎன்று சொல்வாரோ என்று பயந்து போயிட்டேன் என்கிறார் ப.சிதம்பரம்.