தொடர்கள்
அரசியல்
என்.ஐ.ஏ சோதனை நடப்பது என்ன ?? - விகடகவியார்

20220824093921756.jpg

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இது ஒரு முஸ்லிம் ஆதரவு அமைப்பு. இது பெரும்பாலும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக குரல் தரும். இந்த இயக்கத்துக்கு ஆரம்ப பெயர் சிமி 1977ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இயக்கம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே இது ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை குத்தப்பட்டது. காரணம் அதன் செயல்பாடு அப்படித்தான் இருந்தது. மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி இவர்களின் செயல்பாட்டை ஆதரிக்கவோ அங்கீகரிக்கவோ செய்யவில்லை. சிமி இயக்கம் 2001இல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் தடா மற்றும் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். 2003-இல் சிமி இயக்கம் தடை நீக்கப்பட்டது மீண்டும் 2006ல் தடைசெய்யப்பட்டது. அரசாங்கமும் இந்த இயக்கத்தின் மீது ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மத்திய அரசு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது என்பதும் உண்மை அதற்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.

அதன் பிறகு சிமி இயக்கம் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் இயங்கியது. தமிழ்நாட்டில் மனித நீதி பாசறை, கேரளாவில் நேஷனல் டெவலப்மன்ட் ஃபண்ட், கர்நாடகாவில் ஃபோரம் ஃபார் டிக்கினிட்டி இவர்கள் எல்லோருக்கும் தலைமை அமைப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

தென்னிந்தியாவில் தீவிரவாத ஊடுருவலுக்கு இவர்கள்தான் காரணம் என்பது மத்திய உளவு அமைப்பின் கருத்து. எனவே இவர்கள் எப்போதும் கண்காணிப்பு வளையத்தில் இருந்தார்கள். அதேசமயம் மாநில அரசுகள் இவர்கள் செயல்பாடை கண்காணிக்க தவறி விட்டது என்பதும் உண்மை. குறிப்பாக கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களைத் தங்களது வாக்கு வங்கியாக பயன்படுத்தியது. எனவே ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களது நடவடிக்கையை அவ்வளவாக கண்டு கொள்ளாது. இந்தியாவில் கடந்த இரு தினங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் அலுவலகம் நிர்வாகிகள் வீடு என்று 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது, ஆனால் இந்த சோதனையை கண்டித்து ஒரு நாள் பந்த் என்று கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் அறிவித்தது. அரசுப் பேருந்துகளை இயக்க விடாமல் தடுத்தது கடைகளை மூட சொல்லி வற்புறுத்திது. இந்த இயக்கம் ஆனால் பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே வேறு வழியில்லாமல் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தை சேர்ந்து நிர்வாகிகளை போராட்டம் நடத்த விடாமல் தடுத்தும் கைதும் செய்தது கேரளா அரசு ஆனா இது ஒரு மாதிரியான கண்துடைப்பு நடவடிக்கை என்பது எல்லோருக்கும் தெரியும்

தமிழ்நாட்டில் இந்த சோதனையை கண்டித்து இது பாசிச பாரதிய ஜனதா ஜனநாயக விரோத நடவடிக்கை என்று திமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டித்து அறிக்கை எல்லாம் வெளியிடவில்லை. விடுதலை சிறுத்தை கட்சி இந்த சோதனையை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. காரணம் இந்த இயக்கம் பொருளாதார ரீதியாக விடுதலை சிறுத்தைகளுக்கு எப்போதும் உதவி செய்வார்கள் என்பது தான்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு நிதி எங்கிருந்து வருகிறது இதன் செயல்பாடு பற்றி மத்திய உளவுத்துறை ஆராய்ந்தபோது தான் இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் தான் இவர்களுக்கு நிதி உதவி செய்கிறார்கள் என்ற விவரங்கள் ஆதாரபூர்வமாக கிடைத்தது. அதைத்தொடர்ந்து தான் சோதனை வங்கி கணக்கு முடக்கம் ஆவணங்கள் கைப்பற்றல் என்ற நடவடிக்கையில் அமலாக்கத் துறையும் தேசிய புலனாய்வு முகமை ஈடுபட்டது. தமிழ்நாட்டில் சோதனை நடத்தப் போகிறோம் என்ற விஷயத்தையே தமிழக காவல்துறைக்கு விடியற்காலை மூன்று மணிக்கு தான் சொல்லியது. தேசிய புலனாய்வு முகமை தமிழ்நாட்டில் 20 இடங்களில் சோதனை செய்தது. சென்னை திருச்சி ராமநாதபுரம் திண்டுக்கல் தேனி கோவை நெல்லை தென்காசி மதுரை இந்த சோதனையை தீவிரப்படுத்தி ஆவணங்களை கைப்பற்றியது. கைது நடவடிக்கையில் ஈடுபட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் இந்த சோதனையை கண்டித்து சிறுபான்மை சமூகத்துக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கும் உழைக்கும் எங்களை கைது செய்தது தவறு என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.