தொடர்கள்
பொது
ஸ்ரீவில்லிபுத்தூர் பெண் யானை –ஆர்.ராஜேஷ் கன்னா

20220823201755693.jpg

ஸ்ரீவில்லிபுத்தூர் புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 5 வயது பெண் யானை 14 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சேவை செய்ய வந்த குட்டி பெண் யானைக்கு ஜெயமாலயாதா என்ற பெயரிடப்பட்டு கோயில் மண்டபத்தில் வைத்து பாகன் முலம் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் ஜெயமாலயாதா என்ற யானை ஆண்டாளை தினமும் காலையில் விஸ்வரூப தரிசனத்தை தரிசித்து விட்டு ஆண்டாள், ரெங்கமன்னார் வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சியின் போது கம்பீரமாக முன்னே செல்வது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெயமாலயாதா புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது. தனக்கு புது இடம் என்பதால் யானை அங்குள்ள பாகன்கள் சொல்லிற்கு கட்டுப்பட மறுத்தது. பாகன்கள் யானையின் காலில் கம்புக்களால் தாக்கியும், யானையின் பின் காலை கான்கீரிட் உடைந்த பில்லர்களை சங்கலியால் கோர்த்து அதன் கால்களில் கட்டிவிட்டு அடித்து துன்புறுத்திய வீடியோ சமுக வலைதளங்களில் வைரல் ஆனாது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெண்யானை ஜெயமாலயாதா பாகன்களால் கொடுமைப்படுத்தபட்ட விஷயத்தை பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்,நடிகை சன்னிலியோன் கடும் கண்டனம் தெரிவித்து, பெண்யானையை அதன் பிறப்பிடமான அசாம் மாநிலத்திற்கு திரும்பி அனுப்பி புணர்வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

மிருகங்களை கொடுமைபடுத்துவதற்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெண்யானை ஜெயமாலயாதா பாகன்களால் கொடுமைபடுத்தப்படுவதால் உடனடியாக யானை பிறந்த அசாம் மாநில யானைகள் புணர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என போர்கொடி எழப்பியது. அசாம் மாநில சட்டமன்றத்தில் தமிழக கோயில் பெண்யானை ஜெயமாலயாதா துன்புறுத்தபடுவதாக பேசினார்கள்.அத்துடன் அசாம் மாநிலம் சார்பாக உயர்நீதிமன்றத்தில் யானையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டுவர சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் யானை புணர்வாழ்வு மையத்தில் பாகனால் தாக்கப்பட்ட சம்பவத்தினை சமுக வலைதளங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ஏன் மீண்டும் சமுக வலைதளங்களில் இப்போது நடந்தது போல் பரப்பபடுகிறது என்ற தெரியவில்லை . கோயில் யானையை அடிக்கும் யானை பாகன் வினில்குமார் இப்போது வேலையில்லை அத்துடன் வீடியோவில் கோயில் கணக்காளர் சுப்பைய்யா மர்றும் காவலர் கரண்ணை கோயில் யானை காலால் எட்டி உதைப்பது போன்று உள்ள வீடியோவும் பழையது தான். தற்போது யானை நல்ல நிலையில் சுகாதாரத்துடன் உள்ளது என இந்து அறநிலைய துறை அதிகாரிகள் சொல்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் பெண்யானை பரிசோதிக்க அசாம் மாநில அரசு சார்பாக பத்மஸ்ரீ விருது வென்ற கால்நடை பேராசிரியர் மற்றும் டாக்டர் குல்சால் கன்வர் சர்மா முலம் தமிழகத்திற்கு வந்தனர். ஆனால் தமிழக அரசு பெண்யானை நலமுடன் உள்ளது , பழைய வீடியோவை சமுக வலைதளங்களில் பரப்பி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர் என்று தமிழக அரசு அசாம் குழவினருக்கு தெரிவித்தது. அசாம் கால்நடைமருத்துவர் குழு பெண்யானையை தங்கள் மாநிலத்திற்கு அனுப்பி வைக்க தமிழக அரசிடம் கேட்டதற்கு தமிழக அரசு மறுத்துவிட்டது. ஆனால் அசாம் மருத்துவ குழு தமிழகத்திலேயே தங்கியிருக்க அசாம் மாநில அரசு உத்திரவிட்டது.

20220823202500662.jpg

கவுகாத்தி உயர்நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் யானையை பரிசோதிக்க அசாம் மாநில கால்நடை மருத்துவகுழவினரை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு உத்திரவு பிறப்பித்தது .அதன் அடிப்படையில் மதுரைக்கு வந்த அசாம் கால்நடைமருத்துவ குழவினர் தமிழக அரசின் உதவியோடு 70 கிமீ தூரம் சாலை வழியாக வாகனத்தில் பயணித்து ஸ்ரீவில்லிபுத்தூர் யானையை அசாம் கால்நடை மருத்துவ குழவினர் பரிசோதித்தனர்.இந்த மருத்துவ குழு அறிக்கையினை கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் வருகிற செப்டம்பர் 28 தேதி இறுதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்திரவு பிறபிக்கப்பட்டுள்ளது என மருத்துவ குழவினர் தெரிவித்தனர் .

அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 9 யானைகளையும் தமிழகத்திலிருந்து திருப்பி அனுப்ப தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

பீட்டா அமைப்பினர் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை கொடுமைபடுத்தப்படுவதாக கடுமையாக போராடி வருகின்றனர்.

யானை தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் நலமுடன் இருப்பதாக இந்து அறநிலைய துறை அதிகாரிகளும் , தமிழக காட்டிலாகவினரும் செய்தி வெளியிட்டுள்ளனர்.

யானை மனது குழந்தைபோன்றது,அத்துடன் தன்னுடைய பாகனை எப்போதும் யானைகள் விட்டு கொடுக்காது என்று நமக்கு தெரிந்த யானைப்பாகன் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் யானைக்கு கோபம் வர யார் காரணம் என விசாரித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் குரலாக உள்ளது!.