தொடர்கள்
கவர் ஸ்டோரி
கடமை கண்ணியம் கட்டுப்பாடு - எல்லாமே தட்டுப்பாடு ! விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

20220824092456286.jpg

திமுக கட்டுக்கோப்பான கட்சி, திமுக உட்கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள கட்சி இந்த இரண்டு டயலாக்குகளும் இந்த இரண்டு டயலாக்குகளும் இந்த இரண்டு டயலாக்குகளும் கருணாநிதி அடிக்கடி சொல்வார் இப்போது ஸ்டாலினும் சொல்லத் தொடங்கியிருக்கிறார், ஆனால் இவை இரண்டுமே உண்மையில்லை.

உதாரணம் சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்ஜிஆர், அனுதாபி 1980 இல் திமுகவில் சேர்ந்தார் கருணாநிதி. மத்திய மாநில அமைச்சர் கட்சிப் பதவி என்று சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு உரிய மரியாதை செய்தார். அவரும் விசுவாசமாக இருந்தார் என்பதும் உண்மை. இந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சியில் போட்டியிட்டார் வெற்றி பெற்றால் இவர் தான் பேரவைத் தலைவர் என்ற பேச்சு கூட வந்தது. ஆனால் பாரதிய ஜனதா வேட்பாளர் சரஸ்வதியிடம் 281 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். உண்மையில் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு அதிர்ச்சி தோல்வி தனது சொந்தக் கட்சிக்காரர்களே தம்மைத் தோற்கடித்து விட்டதை மெல்ல தெரிந்து உடனே இதுபற்றிகட்சித் தலைவர் ஸ்டாலினிடம் புகார்.

ஆனால் அதை அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை அதுமுதல் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி நடவடிக்கையில் இருந்து மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார். இந்த மாதம் 18ஆம் விருதுநகரில் முப்பெரும் விழா அந்த விழாவை சுப்புலட்சுமி ஜெகதீசன் புறக்கணித்தார் காரணம் அவர் ஏற்கனவே ஆகஸ்ட் 29ஆம் தேதி கட்சியில் இருந்து விலகுகிறேன், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்று கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டார். அப்போதும் அவரை சமாதானப்படுத்த எந்த முயற்சியும் ஸ்டாலின் எடுக்கவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் அலைக்கற்றை ஊழல் என்று அதிமுக தலைவி ஜெயலலிதா பெரிதாகப் பேசி சட்டசபை தேர்தலில் திமுகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார். திமுகவின் தோல்விக்கு ஆ.ராசா தான் காரணம் என்று அப்போதே பேச்சு வந்தது ராசாவும் ஏதாவது சர்ச்சை கருத்துக்களை சொல்லி கட்சியை சங்கடப் படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இப்போதும் திடீரென்று தேவையில்லாமல் மனுஸ்மிருதி சர்ச்சை கருத்துக்களை சொல்லி திமுகவுக்கு புதிய தலைவலியை உண்டாக்கி இருக்கிறார். ஏற்கனவே பாரதிய ஜனதா திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது இப்போது ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறது. திமுக தலைமையும் ஆ.ராசாவை கட்டுப்படுத்தவில்லை ஒருவேளை பாரதிய ஜனதா எதிர்ப்பு நிலைப்பாடு முஸ்லிம், கிறிஸ்தவர் வாக்குகளை தந்து நமக்கு உதவும் என்று எண்ணுகிறார்கள் என்னவோ இதனால் இந்துக்கள் வாக்கு சரியும் என்பது பற்றி திமுக தலைமை யோசிக்கவில்லை என்று அவரது கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ராசா கருத்து பற்றி நிருபர்கள் அறநிலை துறை அமைச்சர் அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டபோது நீங்கள் பேசுவது என் காதில் விழவில்லை என்று சைகை காட்டி விட்டு ஓடிவிட்டார் இதை அருகில் இருந்த தயாநிதி மாறன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். இதுதான் இப்போதைய திமுகாவின் நிலவரம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருமே திமுகாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு எம்பி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் மணல் குவாரி வழக்கில் நெல்லையில் திமுக எம்பி மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா மீது கொலை மிரட்டல் வழக்கு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உட்கட்சித் தேர்தல் உட்கட்சி தேர்தல் போது ஒவ்வொரு முறையும் திமுக தலைமை இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் அது என்றுமே செயல் வடிவம் பெறாது இப்போதுகூட முதல்வரின் மருமகன் சபரீசன் மாவட்டச் செயலாளர்களாக ஏற்கனவே 20 வருடம், 25 வருடம் இருப்பவர்களை மாநிலப் பொறுப்புக்கு அழைத்துச் செல்வோம்.

மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவோம் புதியவர்கள் வரட்டுமே என்கிறார் முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்த யோசனை பிடிக்கிறது. ஆனால் துரைமுருகன் டி.ஆர்.பாலு போன்றவர்கள் இந்த யோசனையை கடுமையாக எதிர்க்கிறார்கள். இப்போது யார் பேச்சைக் கேட்பது என்று தெரியாமல் ஸ்டாலின் முழிக்கிறார். உட்கட்சி தேர்தலில் இதுவரை சாலை மறியல் அடிதடி போலீஸ் வழக்கு என்று திமுகவில் உட்கட்சி தேர்தல் பரபரப்பு செய்தியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது, ஆனாலும் திமுக தலைமையால் உறுதியான இறுதியான முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது என்பதுதான் உண்மை.

பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 40 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார், ஆனால் இப்போதைக்கு இருக்கும் கட்சி நிலைமை அது சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறிதான்.